தமிழ்நாட்டின் தொழில்துறை வளர்ச்சியில் செய்யார் சிப்காட் ப்பேஸ் 2 முக்கிய பங்கு வகிக்கிறது. பல முன்னணி நிறுவனங்கள் தங்களது உற்பத்தி தளத்தை இந்த தொழிற்பூங்காவில் அமைக்க திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில் செய்யார் சிப்காட் ப்பேஸ் 2-ல் நிலத்தைப் பெற்றுள்ள குறிப்பிடத்தக்க நிறுவனங்களின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ள செய்யார் சிப்காட் தொழில்துறை பூங்கா, 931.015 ஹெக்டேர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது. இந்த தொழில்துறை பூங்கா, சென்னை, காஞ்சிபுரம் போன்ற முக்கிய நகரங்களுக்கு அருகில் அமைந்துள்ளதால், போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு வசதிகள் சிறப்பாக உள்ளன.

சென்னைக்கு சுமார் 90 கிலோமீட்டர் தொலைவிலும், காஞ்சிபுரத்திற்கு 14 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ள இந்த தொழிற்பூங்கா, காஞ்சிபுரம்-செய்யார் சாலையில் அமைந்துள்ளதால், சரக்கு போக்குவரத்திற்கும், திறன் வாய்ந்த ஊழியர்களை ஈர்ப்பதற்கும் ஏதுவான இடமாக மாறியுள்ளது.
தமிழ்நாடு மாநில தொழில் ஊக்குவிப்பு கழகம் (SIPCOT) என்பது தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கும் ஒரு பொதுத்துறை நிறுவனமாகும். இந்த கழகமே செய்யார் சிப்காட் தொழில்துறை பூங்காவை உருவாக்கி, பராமரித்து வருகிறது.
இதன் அடிப்படையில் செய்யார் சிப்காட் தொழில்துறை பூங்கா பலன்களை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள 931.015 ஹெக்டேர் தொழிற்பூங்காவின் ப்பேஸ் 2-வில் தொழிற்சாலை அமைக்கும் நிறுவனங்கள் பட்டியல் இதுதான்.
ஷ்விங் ஸ்டெட்டர் (ஜெர்மனி): கட்டுமான உபகரணங்கள் உற்பத்தியில் உலகளாவிய நிறுவனமான Schwing Stetter, 51.4 ஏக்கர் பரப்பளவில் நவீன வசதிகளுடன் கூடிய தொழிற்சாலையை அமைக்க உள்ளது.
ராக்வொல் (டென்மார்க்): புதுமையான இன்சூலேஷன் சேவகளை வழங்குவதில் புகழ்பெற்ற உற்பத்தியாளரான ராக்வொல், 37.51 ஏக்கர் நிலப்பரப்பில் தனது உற்பத்தி பிரிவை அமைக்க உள்ளது.
ஈஸ்ட் வெஸ்ட் பார்மா (இந்தியா): இந்த மருந்து நிறுவனம் தனது உற்பத்தி நடவடிக்கைகளை விரிவுபடுத்த 15.36 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தியுள்ளது.
ஆர்.எம்.ஜி. பாலிவினைல் (இந்தியா): பாலிமர் தொழிலில் முன்னணி நிறுவனமான ஆர்.எம்.ஜி. பாலிவினைல், தனது உற்பத்தி பிரிவை 20 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்க உள்ளது.
ப்ரீமியர் பாலி (இந்தியா): பிளாஸ்டிக் பொருட்களில் நிபுணத்துவம் பெற்ற இந்த நிறுவனம், தனது விரிவாக்கத் திட்டங்களுக்காக 18 ஏக்கர் நிலத்தைப் பெற்றுள்ளது.
பாப்பிஸ் பயோடெக் (இந்தியா): பைனோ எத்தனால் தொழிலில் முக்கிய பங்கு வகிக்கும் பாப்பிஸ் பயோடெக், தனது எத்தனால் உற்பத்தி நிலையத்திற்காக 17 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தியுள்ளது.
ஃபோரெச் ரப்பர் (இந்தியா): இந்த ரப்பர் பொருட்கள் உற்பத்தியாளர், தனது தொழிற்சாலையை 14 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்க உள்ளது.
இந்த புதிய நிறுவனங்களுடன் கூடுதலாக, அமராஜா பேட்டரிகள் மற்றும் ராயல் என்ஃபீல்டு போன்ற ஏற்கனவே நிறுவப்பட்ட நிறுவனங்களாக உள்ளது. இவை 75 ஏக்கர் மற்றும் 60 ஏக்கர் நிலப்பரப்பில் தங்களது உற்பத்தி தளத்தின் கட்டுமானத்தைத் தொடங்கியுள்ளன.
இப்புதிய நிறுவனங்களின் வருகை, திருவண்ணாமலை மாவட்டத்தின் பொருளாதாரம், வாழ்வாதாரம், தனிநபர் வருமானம், வேலைவாய்ப்பு, உள்கட்டமைப்பு ஆகியவற்றை பெரிய அளவில் மேம்படுத்தும்.


Click it and Unblock the Notifications