பெங்களூரில் ஒரு நபர், தான் ஆர்டர் செய்த சிக்கன் பிரியாணியில் ஒரு துண்டு சிக்கன் கூட இல்லாததைக் கண்டு உணவகம் மீது வழக்குத் தொடுத்து 1000 ரூபாய் வென்றுள்ளார். பெங்களூர் நகரத்தில் உள்ள நுகர்வோர் நீதிமன்றம் சமீபத்தில் உணவகத்திற்குத் தொகையைச் செலுத்தவும், வாடிக்கையாளருக்கு 150 ரூபாயைத் திரும்பப் பெறவும் உத்தரவிட்டதாகத் தீர்ப்பு கொடுத்துள்ளது.
மேற்கு பெங்களூர் பகுதியில் மிகவும் பிரபலமான பகுதிகளில் ஒன்றான நாகர்பாவியில் வசிக்கும் கிருஷ்ணப்பா என்பவரின் வீட்டில் சமையல் எரிவாயு திடீரென இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தீர்ந்து போனது. அவரும் அவரது மனைவியும் ஐடிஐ லேஅவுட்டில் உள்ள அவர்களது வீட்டிற்கு அருகில் உள்ள ஒரு உள்ளூர் உணவகத்திற்குச் சென்று, சிக்கன் பிரியாணிக்கு ஆர்டர் கொடுத்தனர்.

அவர்கள் பார்சலுடன் வீட்டிற்கு வந்து அதைத் திறந்தபோது, பிரியாணியில் சாதம் மட்டுமே இருந்துள்ளது, ஒரு துண்டு இறைச்சி கூட இல்லை என்பது அவர்களுக்குப் பெரும் ஏமாற்றமாக இருந்தது.
இதில் கடுப்பான கிருஷ்ணப்பா உணவகத்திற்குப் போன் செய்து, பிரச்சனையை விளக்கினார், பிரச்சனையைப் புரிந்துகொண்டு சிக்கன் துண்டுகளுடன் மற்றொரு பிரியாணியை வீட்டிற்கு வழங்குவதாக உணவகம் உறுதியளித்தது.
இரண்டு மணி நேரமாகியும் உணவு வராததால், வீட்டில் கொண்டு வந்த இறைச்சியில்லா பிரியாணியை, கிருஷ்ணப்பா-வும் அவருடைய மனைவியும், சாப்பிட்டனர். கோபமடைந்த கிருஷ்ணப்பா மீண்டும் உணவகத்தைத் தொடர்பு கொள்ள முயன்றார், ஆனால் பலனளிக்கவில்லை.
இதே ஏப்ரல் மாதத்தின் பிற்பகுதியில், உணவகத்திற்கு எதிராக வழக்குத் தொடுத்து சட்டப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டார், அதற்கு உணவகத்திலிருந்து எந்தப் பதிலும் கிடைக்கவில்லை. பின்னர் அவர் தனக்கும் அவரது மனைவிக்கும் என்ன நடந்தது என்று பெங்களூரு நகர்ப்புற நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் புகார் செய்தார்.
கிருஷ்ணப்பா 150 ரூபாய் கொடுத்து வாங்கிய உணவுக்கு இழப்பீடாக 30,000 ரூபாய் வழங்க வேண்டும் என்று வாடிக்கையாளர் கோரினார். இந்த வழக்கு அக்டோபர் மாதம் விசாரணைக்கு வந்தது.
வழக்கு விசாரணையில் நுகர்வோர் நீதிமன்றம் உணவக நிர்வாகம், கிருஷ்ணப்பா மற்றும் அவரது மனைவிக்கும் மன வேதனையை ஏற்படுத்தியதாகக் குறிப்பிட்டது. உணவகத்துக்கு இழப்பீடாக ரூ.1,000 வழங்க வேண்டும் என்றும், கிருஷ்ணப்பாவுக்குப் பணத்தைத் திரும்ப வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இதைத் தொடர்ந்து 1000 ரூபாய் + 150 ரூபாய் உடன் 1150 ரூபாய் தொகையை உணவக நிர்வாகம் சமீபத்தில் செலுத்தியது. இதன் மூலம் இந்த வழக்கு நிறைவு பெற்றதை தொடர்ந்து இந்த வழக்கு பிரபலமடைந்துள்ளது.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!



Click it and Unblock the Notifications