சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி விலை உயரப்போகுது.. அசைவ உணவு பிரியர்களுக்கு பெரிய ஷாக்!

இந்தியாவின் ரீடைல் பணவீக்கம் ரிசர்வ் வங்கியின் இலக்கான 4 சதவீதத்தை நெருங்கிவிட்ட நிலையில், அசைவ உணவு பிரியர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் கடந்த 5 மாதத்தில் அதிகப்படியாக ஜூன் மாதத்தில் நாடு முழுவதும் கறி, முட்டை, மீன் வகைகளின் விலை உயர்ந்துள்ளது.

ஜூன் மாதம் மட்டும் இந்தியாவில் கறி, முட்டை, மீன் வகைகளின் கொண்ட கூடையின் விலை சுமார் 1.35 சதவீதம் உயர்ந்துள்ளது, இது ஜனவரி மாதம் பதிவான 3 சதவீத உயர்வுக்கு பின்பு இந்த பிரிவின் விலைவாசி ஜூன் மாதம் பெரிய அளவில் உயர்ந்துள்ளது.

சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி விலை உயரப்போகுது.. அசைவ உணவு பிரியர்களுக்கு பெரிய ஷாக்!

இதன் மூலம் அசைவ உணவுகள் சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி, முட்டை, மீன் போன்றவற்றின் விலை உயர வாய்ப்புள்ளது. ஏற்கனவே எரிவாயு விலை உயர்வால் உணவகங்கள் விலையை அதிகரித்து வரும் வேளையில் தற்போது உணவின் மூலப்பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது.

இதேவேளையில் இந்தியாவில் தற்போது ப்ரோட்டீன் குறித்த விழிப்புணர்வு அதிகரித்திருக்கும் காரணத்தால் அசைவ உணவுகள் மற்றும் பொருட்களுக்கான டிமாண்ட் பெரிய அளவில் அதிகரித்துள்ளது. இதனால் ஒட்டுமொத்த உணவு பணநீக்கமும் மே மாதம் 4.66 சதவீதமாக இருந்தது ஜூன் மாதம் 5.22 சதவீதமாக உயர்ந்துள்ளது.

இதனால் ஒட்டுமொத்தமாக இந்திய குடும்பங்களின் வீட்டு செலவுகள் ஜூன் மாதத்தில் இருந்து அதிகரித்துள்ளது. இதற்கு மற்றொரு காரணமும் உள்ளது, ஈரான் போர் காரணமாக பெட்ரோல், டீசல் விலை உயர்வால் போக்குவரத்து செலவுகள் அதிகமானதும் உணவு பொருட்கள் விலையில் முக்கிய பங்காற்றியுள்ளது.

ஜூன் மாதத்தில் முட்டை விலை 3.71 சதவீதம் உயர்ந்து நாமக்கலில் ஒரு முட்டை விலை 6.80 பைசா வரையில் உயர்ந்தது, இதேபோல் பீப் மற்றும் மாட்டு இறைச்சி விலை 3.41 சதவீதமும், மீன் மற்றும் பிரான் விலை 2.9 சதவீதமும் உயர்ந்து கடந்த 1.5 வருடத்தில் பெரும் உயர்வை பதிவு செய்துள்ளது.

இதேபோல் சிக்கன் விலை கடந்த ஒரு வருடத்தில் 10.83 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது. கடந்த ஒரு வருடத்தில் பன்றி கறி மட்டுமே 1.21 சதவீதம் குறைந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+