மோடி அரசின் தலைமை பொருளாதார ஆலோசகரான கேவி சுப்பிரமணின் தனது 3 ஆண்டு பணி காலம் முடிந்த நிலையில், பணி நீட்டிப்பை விரும்பாத அவர் இப்பதிவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார்.
கேவி சுப்பிரமணியன் டிவீட்
இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள டிவீட்டில், என்னுடைய பணி காலத்தில் அரசிடம் இருந்து அதிகப்படியான ஒத்துழைப்பும், ஊக்கம் கிடைத்தது. பல உயர் அதிகாரிகளுடன் பணியாற்றி அனுபவம் வரமாக இருக்கிறது. கடந்த 30 வருட பணி காலத்தில் பிரதமர் மோடியை போல் தலைவரை நான் பார்த்து இல்லை என தெரிவித்துள்ளார்.
தலைமை பொருளாதார ஆலோசகர்
கேவி சுப்பிரமணியன் தலைமை பொருளாதார ஆலோசகராக டிசம்பர் 7, 2018ல் பதவியேற்றார், இவர் பதவியேற்றிய 5 மாதத்தில் முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகரான அரவிந்த் சுப்பிரமணியன் பதிவி விலகினார். தற்போது அரவிந்த் சுப்பிரமணியன் தமிழ்நாடு அரசின் பொருளாதார ஆலோசனை குழுவில் முக்கிய பங்கு வகிக்கிறார்.
நிர்மலா சீதாராமன்
மேலும் கேவி சுப்பிரமணியன் மத்திய நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன் பலமுக்கியமான விஷயத்தின் அவர்களின் அறிவுறைக்கும் நன்றி தெரிவித்துள்ளார். ட
இதேோடு அவர் இந்தியாவிற்கும் இந்திய மக்களுக்கு தான் பணியாற்றியதை பெருமையான விஷயமாகவும், தன் வாழ்நாள் சாதனையாகவும் கருதுகிறார்.
தமிழ் குடும்பத்தை சேர்ந்தவர்
கிருஷ்ணமூர்த்தி வெங்கட சுப்பிரமணியன் என்பதன் சுருக்கமே கேவி சுப்பிரமணியன். இவர் சட்டிஸ்கர் மாநிலத்தில் பிறந்தாலும் தமிழ் குடும்பத்தை சேர்ந்தவர்.
கல்வி தகுதி
இவர்ஐஐடி கான்பூரில் பிடெக், ஐஐஎம் கல்கத்தாபில் எம்பிஏ, சிகாகோ பல்கலைகழகத்தில் எம்பிஏ மற்றும் பிஹெச்டி பட்டம் பெற்றவர். இவர் மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகராக பதியேற்றியற்கு முன்பு இந்தியன் ஸ்கூல் ஆப் பிஸ்னஸ் கல்லூரியில் ஆசிரியர்காகவும், நாட்டின் முக்கிய பொருளாதார வல்லுனாரகவும் இருந்தார்.
ரகுராம் ராஜன்
மேலும் இவர் சிகாகோ பல்கலைகழகத்தில் பிஹெச்டி பட்டத்தை முன்னாள் ரிசர்வ் வங்கி தலைவரும், தற்போதைய தமிழ்நாடு பொருளாதார ஆலோசனை குழுவின் தலைவர் ரகுராம் ராஜன் மேற்பார்வையில் தான் பெற்றார்.
முக்கிய நிறுவனங்கள்
கல்லூரி படிப்படை முடிந்த கிருஷ்ணமூர்த்தி வெங்கட சுப்பிரமணியன் ஜேபி மோர்கன் சேஸ், ஐசிஐசிஐ வங்கி, டிசிஎஸ் ஆகிய நிறுவனத்தில் பணியாற்றியுள்ளார். இதுமட்டும் அல்லாமல் பந்தன் வங்கி மற்றும் தேசிய வங்கி நிர்வாக கல்லூரி மற்றும் ஆர்பிஐ அகாடமியின் நிர்வாக குழு உறுப்பினராக இருந்துள்ளார்.
இதோடு செபி மற்றும் ரிசர்வ் வங்கியின் முக்கிய பதவிகளிலும் கிருஷ்ணமூர்த்தி வெங்கட சுப்பிரமணியன் பணியாற்றியுள்ளார்.


Click it and Unblock the Notifications