தமிழ்நாட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின், தூத்துக்குடியில் அமைந்துள்ள புதிய டைடல் நியோ பார்க்கை வருகிற டிசம்பர் 29-ம் தேதி திறந்து வைக்க உள்ளார். 63,000 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள இந்த நவீன ஐடி பார்க் திறப்பு விழாவுக்கு முன்பே 100% முன்பதிவு செய்யப்பட்டுள்ளது என தமிழ்நாடு ஐடி மற்றும் தொழிற்துறை டிஆர்பி ராஜா ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில், இது தூத்துக்குடி-க்கு முக்கிய மைல்கல்லாகும்.
சமீபத்தில் திறக்கப்பட்ட தஞ்சாவூர் நியோ டைடல் பார்க், சேலம் நியோ டைடல் பார்க் ஆகியவை சில மாதங்களிலேயே அனைத்து அலுவலக இடங்களும் முழுமையாக புக் செய்யப்பட்டது பலரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்தது. அதிலும் குறிப்பாக தஞ்சாவூர் நியோ டைடல் பார்க் திறந்து முழுமையாக ஒரு மாதம் கூட ஆகாத நிலையில் முழுமையாக புக் செய்யப்பட்டது.

தூத்துக்குடி தென்தமிழகத்தில் முக்கியமான தொழிற் பகுதியாக மாறிவரும் வேளையில், உற்பத்தி துறை முதல் MSME, எரிவாயு, ஏற்றுமதி என பல துறை சார்ந்த நிறுவனங்கள் அடுத்தடுத்து முதலீடு செய்து வரும் வேளையில், ஐடித்துறையின் விளர்ச்சிக்கு வித்திடும் வகையில் தமிழ்நாடு அரசு இங்கு நியோ டைடல் பார்க் அமைப்ப முடிவு செய்தது.
தூத்துக்குடி தாலுகாவின் மீளவிட்டன் கிராமத்தில் இந்த நவீன தொழில் பூங்கா சுமார் 4.16 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டப்பட்டு தற்போது திறப்பதற்கு தயாராகியுள்ளது. இந்த நியோ டைடல் பார்க்கில் எந்த நிறுவனங்கள் எல்லாம் அலுவலகத்தை அமைக்கப்போகிறது என்பது இம்மாவட்ட மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
நான்கு தளங்களைக் கொண்ட இந்த பூங்காவில் 63,100 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள நவீன அலுவலக இடங்கள், பல்வேறு அளவிலான நிறுவனங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. 3,200 சதுர அடி முதல் தொடங்கும் அலுவலக இடங்கள், ஸ்டார்ட்அப் முதல் பெரிய நிறுவனங்கள் வரை அனைத்து வகையான நிறுவனங்களுக்கும் ஏற்றதாக உள்ளது.
டைடல் நியோ தூத்துக்குடி சிறந்த போக்குவரத்து இணைப்பு வசதிகளுடன் அமைந்துள்ளது. தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து 3.1 கி.மீ தொலைவிலும், தூத்துக்குடி டவுன் மற்றும் துத்திமேலூர் ரயில் நிலையத்திலிருந்து 6 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ள இந்த ஐடி பூங்கா.
ஊழியர்கள் மற்றும் தொழிலதிபர்களுக்கு எளிதான போக்குவரத்து வசதியை வழங்குகிறது. மேலும், 15.7 கி.மீ தொலைவில் அமைந்துள்ள தூத்துக்குடி விமான நிலையம், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வணிக இணைப்புகளுக்கு வசதியான விமான போக்குவரத்து வசதியை வழங்குகிறது. இதைவிட வேற என்ன வேண்டும், ஒருப்பக்கம் துறைமுகம், மறுப்பக்கம் விமான நிலையம் மாஸ் தான்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications