கொரோனா தொற்று கட்டுப்பாடுகளை உலக நாடுகள் நீக்கிவிட்டு மக்கள் இயல்பு வாழ்க்கையில் இருக்கும் வேளையில் சீனாவில் கொரோனா உச்சத்தில் இருக்கும் போது கடுமையான கட்டுப்பாடுகள் நிறைந்த ஜீரோ கோவிட் பாலிசியை இன்னமும் நடைமுறையில் வைத்துக்கொண்டு உள்ளது.
இந்த நிலையிலும் சீனாவின் முக்கியமாக நகரங்களில் கொரோனா தொற்று எண்ணிக்கை கடந்த 3 மாதத்தில் படிப்படியாக அதிகரித்துள்ளது. இதனால் ஜீரோ கோவிட் பாலிசியை அரசு கொண்டு வந்த நிலையில் சீனா மக்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பு எழுந்த நிலையில் கடந்த ஒரு வாரத்தில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டது.
இதன் விளைவு என்ன தெரியுமா..?
சீனா
சீனாவின் தெற்கு மற்றும் வடக்கு பகுதிகளில் கோடிக்கணக்கான மக்கள் லாக்டவுன் கட்டுப்பாடுகள் காரணமாக வீட்டிலேயே முடங்கி உள்ளனர். இந்த நிலையில் சீனாவின் தலைநகரான பெய்ஜிங்-ல் அனைத்து பூங்கா-க்களும் மூடப்பட உத்தரவு வெளியாகியுள்ளது.
லாக்டவுன்
இதனால் மக்கள் அடுத்தடுத்து கட்டுப்பாடுகள் வரும் என உறுதியாக நம்பும் காரணத்தால் நீண்ட கால லாக்டவுன்-க்கு தயாராக துவங்கியுள்ளனர். குறிப்பாக உணவு மற்றும் அடிப்படையாக தேவைப்படும் பொருட்களை அதிகளவில் வாங்கி குவிக்க துவங்கியுள்ளனர்.
10,729 பேருக்கு கொரோனா
வெள்ளிக்கிழமை வெளியான தகவல் படி சீனாவில் தற்போது 10,729 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. கொரோனா பாதிக்கப்பட்ட பெரும்பாலானோர் எவ்விதமான அறிகுறிகள் இல்லாமல் இருப்பது அதிர்ச்சி அளிக்கும் விஷயமாக உள்ளது.
முக்கிய பகுதி
தெற்கு உற்பத்தி மையமான Guangzhou மற்றும் மேற்கு மெகாசிட்டி Chongqing ஆகிய இரு முக்கியமான பகுதிகளில் மட்டும் வெள்ளிக்கிழமை 50 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் லாக்டவுன் கட்டுப்பாடுகள் காரணமாக வீட்டிலும், தொழிற்சாலைகளிலும் முடங்கியுள்ளனர்.
பெய்ஜிங்
தற்போது சீனாவின் தலைநகரான பெய்ஜிங்-ல் மட்டும் 2.1 கோடி மக்கள் கோவிட் பரிசோதனை மையத்திற்கு சென்று வருகின்றனர், பெய்ஜிங்கில் தற்போது 118 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. மேலும் பல பள்ளிகள் மீண்டும் ஆன்லைன் கல்வி முறையை கையில் எடுத்துள்ளது.
மருத்துவமனை
இதேபோல் பல முக்கியமான மருத்துவமனை முக்கிய மற்றும் அவசர சேவைக்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கும் வகையில் மாற்றியுள்ளது. கொரோனா தொற்று அதிகமாக இருக்கும் பகுதிகளில் இருக்கும் கடைகள், உணவகங்கள் மூடப்பட்டு உள்ளது.
போராட்டம்
சீன அரசின் ஜீரோ கோவிட் பாலிசி கொரோனா கட்டுப்பாடுகள் தற்போது சீன மக்களின் வாழ்வை புரட்டிப்போடும் நிலைக்கு தள்ளப்பட்டதால் சீனாவில் பல இடங்களில் மக்கள் காவல் துறை மற்றும் சுகாதார துறை அதிகாரிகளுடன் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கொரோனா பரிசோதனை
கொரோனா தொற்று அதிகமான காரணத்தால் முக்கிய பகுதிகளில் ஒவ்வொரு 24 முதல் 48 மணிநேரத்திற்கும் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்ற கட்டுப்பாட்டை விதித்துள்ளது சீனா அரசு. இது மக்களுக்கு பெரும் தலைவலியாக உள்ளது.
இந்தியா
சீனாவில் கொரோனா தொற்று எண்ணிக்கை 10000 தாண்டிய நிலையில் உலக நாடுகள் எச்சரிக்கை உடன் இருக்க வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது. இந்தியாவில் நவம்பர் 11, 2022, 8.00 தரவுகள் படி 12,752 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பதாக மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைப்பு தெரிவித்துள்ளது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications