சீன பொருளாதாரத்தில் அடி.. உலக வங்கி ரிப்போர்ட் மூலம் ஜி ஜின்பிங் கலக்கம்..!!

உலக வங்கி 2023 ஆம் ஆண்டில் சீனாவின் பொருளாதார வளர்ச்சி முந்தையை கணிப்பான 5.1 சதவீத அளவீட்டிலேயே இருக்கும் என உறுதி அளித்துள்ளது. ஆனால் 2024 ஆம் ஆண்டுக்கான கணிப்பை 4.8 சதவீதத்தில் இருந்து 4.4 சதவீதமாக குறைத்துள்ளது. இதற்கு முக்கிய காரணமாக சீனாவின் ரியல் எஸ்டேட் துறையின் மந்தமான நிலையை சுட்டிக்காட்டுகிறது.

இதோடு உலக வங்கி கிழக்கு ஆசிய மற்றும் பசிபிக் பகுதிக்கான 2023 ஆம் ஆண்டு பொருளாதார வளர்ச்சி அளவீட்டையும் 5.1 சதவீதத்தில் இருந்து 5.0 சதவீதமாக குறைத்துள்ளது. இதேபோல் 2024 ஆம் ஆண்டு பொருளாதார வளர்ச்சி அளவீட்டை 4.8 சதவீதத்தில் இருந்து 4.5 சதவீதமாக குறைக்கப்பட்டு உள்ளது.

சீன பொருளாதாரத்தில் அடி.. உலக வங்கி ரிப்போர்ட் மூலம் ஜி ஜின்பிங் கலக்கம்..!!

கொரோன தொற்றுக்கு பின்பு சீனாவின் உற்பத்தி, ஏற்றுமதி, நுகர்வு, வர்த்தகம் ஆகியவை அதிகமாகவே இருந்தது, ஆனால் அமெரிக்கா - சீனா மத்தியிலான பிரச்சனை, ரஷ்யா - உக்ரைன் போர், சீனா - தைவான் பிரச்சனை என பல விஷயங்கள் சீன பொருளாதாரத்தை நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதித்துள்ளது.

செப்டம்பர் மாதம் சீனாவின் உற்பத்தி அளவுகள் அதிகரித்து, ஏற்றுமதி - இறக்குமதிக்கு மத்தியில் இருந்த வித்தியாசம் குறைந்தாலும், அந்நாட்டின் ரியல் எஸ்டேட் துறையின் பாதிப்பு ஒட்டுமொத்த வளர்ச்சி அளவீடுகளை கீழே இழுப்பதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. ஆனால் 2023லேயே இதுதான் சீனாவின் ஸ்டேபிள் ஆன பொருளாதார சூழ்நிலை.

சர்வதேச பொருளாதாரத்தின் உற்பத்தி இன்ஜினாக இருக்கும் சீனா பல பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறது, ஒருபக்கம் சீன பொருளாதாரத்தில் 25 சதவீத பங்கீட்டை கொண்டு இருக்கும் ரியல் எஸ்டேட் மற்றும் உள்கட்டமைப்பு துறை மேசமான நிலையில் மாடிக்கொண்டு உள்ளது.

இதில் முக்கியமாக சீனாவின் எவர்கிராண்டே நிறுவனம் 300 பில்லியன் டாலர் கடன் சுமையும், இந்நிறுவனத்தில் சீன அரசு செய்து வரும் ஆய்வுகள் முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தி வருகிறது. மறுபக்கம் சீனாவில் இருந்து பல உற்பத்தி நிறுவனங்கள் ஆசியாவின் பிற பகுதிகளுக்கு செல்ல துவங்கியுள்ளது.

இதனால் சீனா மக்களுக்கான வேலைவாய்ப்பு, வருவாய் ஆகியவை பெரிய அளவில் பாதித்து உள்நாட்டு நுகர்வு பாதிக்கப்பட்டு உள்ளது. மேலும் சீன பொருளாதாரத்தில் ஏற்றுமதி வர்த்தகம் முக்கிய பங்கு வகித்த நிலையில் அந்நாட்டின் உற்பத்திகள் பெரிய அளவில் குறைந்துள்ள காரணத்தால் ஏற்றுமதியும் குறைந்துள்ளது.

இந்த அனைத்தையும் தாண்டி சீனாவில் முதியோர் மக்கள் தொகை பெரிய அளவில் அதிகரித்துள்ளது, இதேபோல் ஒரு குழந்தை கொள்கை நீக்கப்பட்ட பின்னரும் மக்கள் 2 - 3 குழந்தைகளை பெறுக்கொள்வதை விரும்பவில்லை. இதனால் சீனாவின் எதிர்காலம் அனைத்து தரப்பு மக்களுக்கும் பெரும் கேள்வியாக உள்ளது.

இதேபோல் சர்வதேச அளவில் பொருளாதார வளர்ச்சி மந்தமாக இருக்கும் வேளையில் சீனாவின் பங்கீடு குறையும் போதும் பெரும் தாக்கத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இது இந்தியாவையும் பாதிக்கும், சீனா இதில் இருந்து தப்பிக்க மலிவு விலை பொருட்களை ஏற்றுமதி செய்ய வாய்ப்பு உள்ளது. இது இந்திய உற்பத்தியாளர்களை பாதிக்க அதிக வாய்ப்புகள் உள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+