சீனாவின் அடுத்த மாஸ்டர்பிளான்.. அந்த ஏரியா, இந்த ஏரியா எல்லா ஏரியாலையும் ஐயா கில்லி..!!

சீனா 2025 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் வரி விதிப்புகளை தாண்டி இறக்குமதியை காட்டிலும் அதிகளவில் ஏற்றுமதி செய்து வர்த்தக உபரியை பதிவு செய்துள்ளது. சீனா சுங்கத் துறை வெளியிட்ட தரவுகளின்படி 2025ல் அந்நாட்டின் மொத்த வர்த்தக உபரி 1.189 டிரில்லியன் டாலராக உள்ளது என அறிவித்துள்ளது. இது 2024-ஐ விட 20 சதவீதம் அதிகமாகும்

அமெரிக்காவின் வரி விதிப்பு மற்றும் வர்த்தக கட்டுப்பாடுகளுக்கு பின்பு இந்த உயர்வு பதிவு செய்ய முக்கிய காரணம், சீனா அமெரிக்காவைத் தவிர்த்து மற்ற சந்தைகளில் ஏற்றுமதியை வலுப்படுத்தியது தான். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அரசு வரி மூலம் வர்த்தக அழுத்தங்களை அதிகரிக்க அதிகரிக்க சீன உற்பத்தியாளர்கள் உலக அளவில் தங்கள் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்துள்ளனர்.

சீனாவின் அடுத்த மாஸ்டர்பிளான்.. அந்த ஏரியா, இந்த ஏரியா எல்லா ஏரியாலையும் ஐயா கில்லி..!!

இதேவேலையில் சீனா அமெரிக்கா மத்தியிலான வர்த்தகத்தில் பெரிய ஓட்டை விழுந்துள்ளது. சீனாவின் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி 20 சதவீதம் குறைந்துள்ளது. அமெரிக்காவிலிருந்து சீனாவுக்கு வரும் இறக்குமதி 14.6 சதவீதம் சரிந்துள்ளது. சீனா இந்த பாதிப்பை ஆப்பிரிக்கா, ஆசிய நாடுகள், ஐரோப்பிய நாடுகளுக்கு அதிக ஏற்றுமதி செய்தது மூலம் உபரி வர்த்தகத்தை பதிவு செய்துள்ளது. சரி 2026ல் எப்படி இருக்கும்..?

டிரம்ப் மிரட்டல்
செவ்வாய்க்கிழமை டிரம்ப் செய்தியாளர்களிடம் பேசும் போது, சீனா தனது சந்தையை அமெரிக்க பொருட்களுக்கு திறக்க முடியும் என்று கூறினார். இந்த அறிவிப்புக்கு முன்பு தான் ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படும் என்று எச்சரித்தார். ஈரானின் மிகப்பெரிய வர்த்தக கூட்டாளியாக சீனா இருப்பது கவனிக்கப்பட வேண்டும். இது இரு நாடுகல் மத்தியில் புதிய பதற்றத்தை உருவாக்கியுள்ளது. இதனால் 2026லும் அமெரிக்கா - சீனா மத்தியிலான உரசல்கள் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிரம்ப் பின்னடைவு
இந்த நிலையில் அமெரிக்க உச்ச நீதிமன்றம் புதன்கிழமை டிரம்பின் ரெசிப்ரோக்கல் வரி விதிப்புக்கு எதிராக தீர்ப்பளிக்க வாய்ப்பு உள்ளது. இந்த அறிவிப்பு வந்தால் டிரம்ப்-ன் வரி விதிப்பு முயற்சிகள் அனைத்தும் வீணாகும், இதேபோல் இது இந்தியா, சீனா போன்ற நாடுகளுக்கு பெரும் வாய்ப்பாக அமையும், மீண்டும் அமெரிக்காவுக்கு வரி இல்லாமல் ஏற்றுமதி தொடரலாம். மேலும் அமெரிக்க அரசு ரெசிப்பரோக்கல் வரி கீழ் வசூலிக்கப்பட்ட தொகையை திருப்பி செலுத்த நேரிடும்.

சீனாவின் அடுத்த மாஸ்டர்பிளான்.. அந்த ஏரியா, இந்த ஏரியா எல்லா ஏரியாலையும் ஐயா கில்லி..!!

சீனா-வின் மாற்றும் முயற்சி - மாஸ்டர் பிளான்
சீனாவும், சீன நிறுவனங்களும் தொடர்ந்து உலக நாடுகளில் வர்த்தக தடைகளை எதிர்கொண்டு வருகிறது. இதனால் சீனா தற்போது முக்கியமான முடிவை எடுத்துள்ளது. அதாவது சீனா தனது வர்த்தகத்தையும் இழக்க கூடாது, அதேபோல் உலக நாடுகளில் தொடர்ந்து சுதந்திரமாக வர்த்தகம் செய்ய வேண்டும்.

இதை நினைவாக்க சீன நிறுவனங்கள் வெளிநாடுகளில் உற்பத்தி ஆலைகளை அமைத்து அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு குறைந்த வரியில் ஏற்றுமதி செய்யத் தொடங்கியுள்ளன. இதை சீனாவின் பல நிறுவனங்கள் துவங்கியுள்ளது, குறிப்பாக ஐரோப்பிய ஆட்டோமொபைல் துறையில் சீனாவின் கை ஓங்க துவங்கியுள்ளது.

சீனா தனது அதிகப்படியான ஏற்றுமதியால் ஏற்படும் பிரச்சினையை உணர்ந்து இத்தகைய முடிவை எடுத்துள்ளது. உலகளாவிய வர்த்தக சந்தையில் தொடர்ந்து வெற்றிக்கொடி நாட்ட இது தான் சரியான பாதை என சீன நிறுவனங்கள் முடிவு செய்துள்ளது. இதனால் சீனாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படுவது குறைந்தாலும், சீன நிறுவனங்களின் வர்த்தகம் பாதிக்காது.

இந்த புதிய கொள்கையை செயல்படுத்த கடந்த வாரம் சோலார் எனர்ஜி துறைக்கான ஏற்றுமதி வரிக்கான மானியத்தை ரத்து செய்தது சீன அரசு. இதன் மூலம் சீன நிறுவனங்கள் இனி வெளிநாட்டில் எளிதாக சோலார் பேனல்களை உற்பத்தி செய்து அந்த நாட்டிலும், உலக நாட்டிலும் வர்த்தகம் செய்ய முடியும். இது ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடனான நீண்டகால பிரச்சினையை குறைக்கும் முயற்சியாகும்.

சீனாவின் ரேர் எர்த் உலோகத்தின் ஏற்றுமதி 2014-க்குப் பிறகு 2025ல் அதிகமாக இருந்தது. ஏப்ரல் மாதத்தில் சீன அரசு சில பல உலோகங்களுக்கு ஏற்றுமதி கட்டுப்பாடு விதிக்கப்பட்டபோதிலும் இந்த உயர்வு பதிவாகியுள்ளது. மேலும் சீனா அமெரிக்காவில் இருந்து சோயாபீன் அதிகளவில் வாங்கியது, போயிங் விமான உதிரிபாகங்கள் ஒப்பந்தம், டிக்டாக் அமெரிக்க செயல்பாடுகளை விற்றது போன்றவை அமெரிக்காவுக்கு சாதகமாக அமைந்தது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+