டெக் துறையில் எப்போதும் அமெரிக்கா, சீனா, ஜப்பான் மத்தியில் போட்டி இருந்துக்கொண்டே இருக்கும், அந்த வரையில் சீனாவின் ஆதிக்கத்தை குறைக்க பல வகையில் அமெரிக்க கட்டுட்டுப்பாடுகளை விதித்த போதும் தொடர்ந்து வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது.
அப்படி சீனா சமீபத்தில் "உலகின் அதிவேக இண்டர்நெட் சேவையை" அறிமுகப்படுத்தியது, இது தற்போதுள்ள முக்கிய இணைய சேவை வழித்தடங்களை காட்டிலும் 10 மடங்கு வேகமானது என்றால் உங்களால் நம்ப முடியுமா..? ஆனால் இதை சாதித்துக்காட்டியுள்ளது சீனா.

அதிகவேக இண்டர்நெட் குறித்து ஏற்கனவே ஆய்வு செய்யப்பட்டு வந்தாலும், இதற்காக நிர்ணயம் செய்யப்பட்ட கால இலக்கை விடவும் 2 வருடங்களுக்கு முன்னதாக வெற்றியை சுவைத்துள்ளது சீனா. இது தான் டெக் உலகின் அடுத்த பெரிய அற்புதமாக பார்க்கப்படுகிறது, இதை அனைத்து துறையும், சாமானிய மக்களும் பயன்படுத்தும் அளவுக்கு மாறினால் டிஜிட்டல் மற்றும் இணைய சேவையில் பெரும் மாற்றத்தை அடைய முடியும்.
சீனா உருவாக்கியுள்ள இப்புதிய நெட்வொர்க் மூலம் அந்நாட்டின் ஒரு முனையில் இருந்து மற்றொரு முனைகளில் அமைந்துள்ள நகரங்களுக்கு இடையே ஒரு வினாடிக்கு 1.2 டெராபைட் அதாவது 1,200 ஜிபி டேட்டா அனுப்ப முடியும் என சீனா காட்டியுள்ளது.
சீனா இந்த சோதனையை பெய்ஜிங், வுஹான் மற்றும் குவாங்சூ ஆகிய பகுதிகள் மத்தியில் செய்து சாதனை படைத்துள்ளது. இந்த 3 முக்கிய சீனா நகரங்கள் மத்தியில் முதன்மை தரவு வழியை உருவாக்கி இந்த சோதனை முடிக்கப்பட்டு உள்ளதாக தெரிகிறது.
இதன் மூலம் இணையத்தின் வாயிலாக டேட்டா பரிமாற்ற இணைப்பின் தொலைவு 3,000 கிமீ ஆக உள்ளது. இந்த சோதனை களம் ஜூலையில் செயல்படுத்தப்பட்டு, அனைத்து சோதனைகளையும் முடித்த பின்னர் அதிகாரப்பூர்வமாக கடந்த வாரம் தொடங்கப்பட்டது.
2025 ஆம் ஆண்டு வரை வினாடிக்கு 1 டெராபிட் வரையிலான டேட்டா டிரான்ஸ்பர் செய்யும் அதிவேக நெட்வொர்க்குகள் உருவாக்க வாய்ப்பு இல்லை என கூறப்பட்ட நிலையில் சீனா 2 வருடத்திற்கு முன்னதாகவே இதை சாதித்துக் காட்டியுள்ளது.
இந்த உலகின் அதிவேக இணைய நெட்வொர்க்-ஐ சிங்குவா பல்கலைக்கழகம், சீனா மொபைல், ஹுவாய் டெக்னாலஜிஸ் மற்றும் செர்னெட் கார்ப்பரேஷன் ஆகியவற்றின் கூட்டு முயற்சியின் கீழ் உருவாக்கப்பட்டு சாதனை படைக்கப்பட்டு உள்ளது. ஒரு வினாடிக்கு 1.2 டெராபைட் டேட்டா டிரான்ஸ்பர் என்றால் 150 HD திரைப்படத்தை ஒரு நொடிக்கு டிரான்ஸ்பர் செய்வது போன்றது என Huawei Technologies துணைத் தலைவர் வாங் லீ தெரிவித்தார்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!



Click it and Unblock the Notifications