பிற நாட்டுப் பொருட்களைக் காப்பி அடிப்பது, தரமற்ற பொருட்கள் தயாரிப்பு என்ற நிலையில் இருந்து சீனா இல்லையெனில் சர்வதேச பொருளாதாரம் முடங்கிவிடும் என்ற நிலைக்குச் சீனா உயர்ந்துள்ளது யாராலும் மறுக்க முடியாது.
இந்த மாபெரும் வளர்ச்சிப் பாதையில் 10 ஆண்டுக் காலம் சீனாவின் அதிபராக இருந்த ஜி ஜின்பிங் பங்கு மிகப்பெரியதாக இருக்கும் நிலையில் ஞாயிற்றுக்கிழமை துவங்கும் மிகப்பெரிய சீன கம்யூனிஸ்ட் கட்சி கூட்டத்தில் 3வது முறையாக ஜி ஜின்பிங் அதிபராக அறிவிக்கப்படுவாரா என்ற எதிர்பார்ப்பு சீன மக்களுக்கு மட்டும் அல்லாமல் உலக நாடுகள் முழுவதிலும் உள்ளது.
சீன கம்யூனிஸ்ட் கட்சி
ஜி ஜின்பிங் தலைமையிலான சீன கம்யூனிஸ்ட் கட்சி கடந்த 10 வருடத்தில் அந்நாட்டில் இருந்த மோசமான வறுமை என்ற நிலையை முற்றிலுமாக நீக்கியுள்ளது. மக்களின் வாழ்வியல், கல்வி, கால்நடை வளர்த்தல் உட்பட அனைத்தையும் அரசு வீடு வீடாகச் சென்று கொடுத்துள்ளது. மக்களின் வாழ்க்கை முறையை மேம்படுத்த மட்டும் 2013 - 2021 வரையிலான காலகட்டத்தில் மட்டும் சுமார் 230 பில்லியன் டாலர் அளவிலான தொகையை முதலீடு செய்துள்ளது.
கிராமங்களுக்குக் குடி பெயர்ப்பு
பல கோடி மக்கள் டவுன் மற்றும் பெரு நகரங்களில் இருந்து கிராமங்களுக்குக் குடிபெயரும் அளவிற்குப் போதுமான வர்த்தகம் மற்றும் பொருளாதார வாய்ப்புகளை அளிக்கப்பட்டு உள்ளது. ஜி ஜின்பிங் ஆட்சிக்கு வந்த முதல் வருடத்தில் சீனாவில் 82 மில்லியன் மக்கள் கடுமையான வறுமையில் இருந்தனர், தற்போது இதன் எண்ணிக்கை 2019 தரவுகள் படி வெறும் 6 மில்லியனாக உள்ளது.
தனிநபர் வருமானம்
சீன மக்களின் தனிநபர் வருமானம் மிகப்பெரிய அளவில் உயர்ந்துள்ளது, 2013-2020 வரையிலான காலகட்டத்தில் நகரங்களில் இருக்கும் மக்களின் தனிநபர் வருமானம் 66 சதவீதமும், கிராமபுற மக்களின் வருமானம் 82 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. இதேபோல் நகரத்தில் இருக்கும் மக்களில் இருவரில் ஒருவர் கார் வைத்துள்ளனர், இதே போல் ஒரு வீட்டில் 2 முதல் 3 ஸ்மார்ட்போன் பயன்படுத்தப்படுகிறது.
விண்வெளி ஆராய்ச்சி துறை
சீனாவின் விண்வெளி ஆராய்ச்சி துறை அமெரிக்கா, ஐரோப்பா, ரஷ்யாவை நெருங்கியுள்ளது. நிலவுக்கு 2013, 2019ல் ரோவர்களைச் சீனா தரையிறக்கியது. இதேபோல் அமெரிக்காவின் ஜிபிஎஸ் திட்டத்தைப் போலவே சீனா சொந்தமாக satellite navigation system-ஆன Beidou திட்டத்தை அறிமுகம் செய்தது. செவ்வாய் கிரகத்தில் முதல் ரோபட்-ஐ தரையிறக்கியது, 2022க்குள் ஸ்பேஸ் ஸ்டேஷனை கட்டி முடிக்க உள்ளது.
ஒழுங்குமுறை வழக்குகள்
அமைச்சர்கள் முதல் வங்கி அதிகாரிகள், அரசு அதிகாரிகள் வரையில் சுமார் 11.3 மில்லியன் பேருக்கு ஒழுங்குமுறை வழக்குகளுக்கான எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டு உள்ளது. 4.7 மில்லியன் பேருக்கு மிகப்பெரிய தவறுகளைச் செய்ததைக் கண்டுபிடித்துள்ளது. இந்தக் கடுமையான நடவடிக்கை மூலம் அரசு நிர்வாகம் பெரிய அளவில் மேம்பட்டு உள்ளது. தவறு செய்தவர்களுக்கு அதிகப்படியான மரணத் தண்டனையை 15 லட்சம் பேகுக்குக் கொடுக்கப்பட்டு உள்ளது.
வளர்ச்சி
2013-2021 வரையிலான காலக்கட்டத்தில் அதிவேக ரயில் நெட்வொர்க் 9300 கிலோமீட்டரில் இருந்து 40000 கீலோமீட்டர் வரையில் உயர்ந்துள்ளது. சீனாவில் தற்போது 250 விமான நிலையங்கள் உள்ளது, இதில் 82 கடந்த 10 வருடத்தில் கட்டப்பட்டது, 2012-19 வரையில் விமானப் பயணிகள் எண்ணிக்கை இரட்டிப்பு வளர்ச்சியை அடைந்துள்ளது. சீனா முழுவதும் உள்கட்டமைப்பு மிகப்பெரிய அளவில் உயர்ந்து மக்களுக்கும், தொழிற்துறைக்கும் சிறப்பான வர்த்தகச் சூழ்நிலை உருவாக்கப்பட்டு உள்ளது.
ஏற்றுமதி, உற்பத்தி
மேலே கூறியதை தாண்டி சீனா கடந்த 10 ஆண்டில் பெரும்பாலான உற்பத்தி துறையில் உலகின் உற்பத்தி இன்ஜினாக மாறியுள்ளது. இதில் பொம்மை முதல் கார் வரையில் அடங்கும்.
இதேபோல் ஏற்றுமதி வர்த்தகத்தில் சீனாவின் வளர்ச்சி உலக நாடுகளை பிரம்மிக்க வைக்கும் அளவிற்கு உயர்ந்துள்ளது.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!



Click it and Unblock the Notifications