இந்திய - சீன எல்லை பிரச்சனைக்கு மத்தியில்.. சீனா தான் சிறந்த வர்த்தக பங்காளி..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

லடாக் எல்லை பிரச்சனையை தொடர்ந்து இந்திய சீன பொருட்களை தவிர்க்க முயற்சி செய்து வந்தது. அந்த சமயத்தில் சீன பொருட்கள் வேண்டாம் என்ற பரப்புரை நாடு முழுவதும் எழுந்தது. அரசும் சில கடுமையான விதிமுறைகளை விதித்தது.

 

சில பொருட்களுக்கு வரிகளை கூட கூட்டியது. ஆனாலும் இப்படி ஒரு மோசமான நிலைகளுக்கும் மத்தியிலும் கூட, சீனா தான் மீண்டும் சிறந்த வர்த்தக பங்காளியாக உருவெடுத்துள்ளது.

எப்படி என்று கேட்கிறீர்களா? வாருங்கள் பார்க்கலாம். கடந்த ஆண்டில் கொரோனாவுக்கு மத்தியில் ஏற்றுமதி, இறக்குமதி வணிகம் என்பது மிக மோசமாக பாதிக்கப்பட்டது.

சீனா தான் டாப்

சீனா தான் டாப்

அப்படி இருந்தாலும் வழக்கம்போல அண்டை நாடுகளை விட, சீனா தான் இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக பங்களியாக உள்ளது. கடந்த 2017, 2018, 2020களில் அமெரிக்காவினை சீனா தான் முன்னிலையில் வர்த்தக பார்ட்னராக இருந்துள்ளது. கடந்த 2019ல் மட்டும் தான் அமெரிக்கா சீனாவினை விட சிறந்த வர்த்தக பங்காளியாக இருந்துள்ளது.

இரு தரப்பு வர்த்தகம்

இரு தரப்பு வர்த்தகம்

இந்திய வர்த்தக அமைச்சகத்தின் வர்த்தக தரவுகளின் படி, கடந்த ஆண்டில் இரு தரப்பு வர்த்தகம் 77.7 பில்லியன் டாலர்களாக உள்ளது. இது முந்தைய ஆண்டில் 85.5 பில்லியன் டாலர்களாகும். இது முந்தைய ஆண்டினை காட்டிலும் சற்று குறைவு தான் என்றாலும், மொத்தத்தில் பார்க்கும் போது சீனா தான் இந்தியாவுடன் அதிக வர்த்தகம் செய்துள்ளது.

வர்த்தக இடைவெளி
 

வர்த்தக இடைவெளி

மத்திய அரசு நூற்றுக்கணக்கான சீன ஆப்களை தடை செய்தது. முதலீட்டு விதிகளை கடுமையாக்கியது. எல்லையில் இந்தியா சீனா இடையே கடுமையான போக்கே அந்த சமயத்தில் நிலவியது. எனினும் சீனாவில் தயாரிக்கப்பட்ட கனரக இயந்திரங்களையே இந்தியா பெரிதும் நம்பியுள்ளது. அதோடு தொலைத் தொடர்பு உபகரணங்கள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் என அனைத்தும் சீனாவினையே அதிகம் சார்ந்துள்ளது. இதன் காரணமாக இந்த தரப்பு வர்த்தக இடைவெளியாக 2020ம் நிதியாண்டில் 40 பில்லியன் டாலராக இருந்தது.

சீன இறக்குமதி

சீன இறக்குமதி

சீனாவில் இருந்து மொத்த இறக்குமதி 2020ம் ஆண்டில் 58.7 பில்லியன் டாலர்களாக இருந்தது. இதே இரண்டாவது இடத்தில் அமெரிக்காவும், அதனையடுத்து UAEம் உள்ளது. கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு மத்தியில் ஏற்படும் தேவை இடையூறுகளுக்கு மத்தியில், இந்தியா அண்டை நாடுகளில் இருந்து இறக்குமதியை குறைக்க முடிந்தது.

சீனாவுக்கான ஏற்றுமதி அதிகரிப்பு

சீனாவுக்கான ஏற்றுமதி அதிகரிப்பு

அதே சமயம் முந்தைய ஆண்டை காட்டிலும் சீனாவிற்கான ஏற்றுமதியினை 11% அதிகரித்துள்ளது. எனினும் கடுமையான கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் ஏற்றுமதியும் குறையுமோ என்ற அச்சமும் நிலவி வருகின்றது. இந்த நிலையில் இந்தியா உள் நாட்டு உற்பத்தியினை ஊக்கப்படுத்தி வருகின்றது. இது மிக நல்ல விஷயமாகவே பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

China again as leading India trade partner even as relations sour

China – India trade updates.. China again as leading India trade partner even as relations sour
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X