உலகளவில் வேகமாக வளர்ந்து வரும் கிரிப்டோ முதலீட்டுச் சந்தைக்கு உலக நாடுகள் எந்த அளவிற்கு ஆதரவு அளிக்கிறதோ, அதே அளவிற்கு எதிர்ப்பையும் காட்டி வருகிறது.
பல டெக் வல்லுனர்கள், தொழிலதிபர்கள் கிரிப்டோகரன்சி தான் பேமெண்ட் உலகின் எதிர்காலம் எனக் கூறி வரும் நிலையில், உலக நாடுகளின் அரசுக்கு இது பொருளாதாரத்திற்கும் வர்த்தகத்திற்கும் பெரும் ஆபத்து எனக் கூறி வருகிறது.
இந்த இரண்டு இடத்திலும் நிற்க முடியாத நாடுகள் கிரிப்டோ முதலீட்டுச் சந்தையை ஒழுங்கு முறைப்படுத்துவதில் இறங்கியுள்ளது.
கிரிப்டோகரன்சி
உலகளவில் கிரிப்டோகரன்சி உற்பத்தி முதல் வர்த்தகம் வரையில் தடை விதித்தது சீனா மட்டும் தான் என்ற எண்ணம் பொதுவாக உள்ளது, ஆனால் உலகில் சீனா உடன் சேர்த்து சுமார் 51 நாடுகள் கிரிப்டோகரன்சிக்குத் தடை விதித்துள்ளது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்.
51 நாடுகள் கிரிப்டோகரன்சிக்கு தடை
2021 டிசம்பர் 25 வரையில் உலகில் சுமார் 51 நாடுகள் கிரிப்டோகரன்சி மீது முழுமையாகவும், பகுதியாகவும் வர்த்தகத் தடை விதித்துள்ளது எனக் குளோபல் லீகல் ரிசர்ச் டைரெக்ட்ரேட் அறிவித்துள்ளது. இந்த அமைப்பு முதல் முறையாகக் கிரிப்டோகரன்சி மீது தடை விதித்த நாடுகள் பட்டியலில் எண்ணிக்கையை ஒப்பிடுகையில் தற்போது இதன் எண்ணிக்கை பெரிய அளவில் உயர்ந்துள்ளது.
தடை உத்தரவு
உலகில் இதுவரை 9 நாடுகள் கிரிப்டோகரன்சிக்கு முழுமையாகத் தடை விதித்து, 42 நாடுகள் implicit ban அதாவது வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள் கிரிப்டோகரன்சி சார்ந்து எந்த விதமான உதவிகளையும், சேவைகளையும் அளிக்கக் கூடாது என உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் உலகளவில் மொத்தம் 51 நாடுகள் கிரிப்டோகரன்சி மீதான எதிர்ப்பை வெளிப்படையாக அறிவித்துள்ளது.
2 மடங்கு வளர்ச்சி
2018ல் இதில் 23 நாடுகள் மட்டுமே இருந்த நிலையில் தற்போது 51 நாடுகளாக உயர்ந்துள்ளது. அல்ஜீரியா, பங்களாதேஷ், சீனா, எகிப்து, ஈராக், மொராக்கோ, நேபாளம், கத்தார் மற்றும் துனிசியா ஆகிய 9 நாடுகள் கிரிப்டோகரன்சிக்கு முழுமையான தடையை விதித்துள்ளது. இதில் சீனா உலகின் 2வது பெரிய பொருளாதார நாடாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications