சீனாவின் பிரம்மாண்ட வளர்ச்சியை தடுக்கவும், உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரில் சீனாவின் ஆதாரவு, ஏற்கனவே சீனா - அமெரிக்கா மத்தியில் இருந்த வர்த்தக போர் பிரச்சனைகள் என அனைத்திற்கும் சேர்ந்து சீனாவுக்கு யாரும் செமிகண்டக்டர் சிப் தயாரிப்புக்கான உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்பத்தை பகிரவோ அல்லது விற்பனை செய்ய கூடாது என பல்வேறு தடைகளை இத்துறை சார்ந்தே 2019 முதல் விதித்து வந்தது.
இதை எப்படியாவது முறியடிக்க வேண்டும் என கங்கணம் கட்டிக் முயற்சி செய்த சீனா மிகப்பெரிய சாதனையை செய்துள்ளது. இந்த சாதனையை எப்போது வேண்டுமானாலும் உலக நாடுகளுக்கு முன்பு தெரிவித்திருக்கலாம், ஆனால் சீன அரசு சரியாக திட்டமிட்டு அமெரிக்காவின் வர்த்தக துறை செயலாளர் ஜினா ராய்மாண்டோ சீனாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட நாளில் அடுத்தடுத்து 3 அறிவிப்புகளை வெளியிட்டு அமெரிக்காவுக்கு சைலென்ட் ஷாக் கொடுத்தது.

முதலில் ஜினா ராய்மாண்டோ சீனா வந்த அதே நாளில் அந்நாட்டின் மிகப்பெரிய ஸ்மார்ட்போன் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான ஹூவாய் 7nm தொழில்நுட்பத்தில் அதாவது 7 நானே மீட்டர் தொழில்நுட்பத்தில் சீனாவிலேயே சீனா நிறுவனமான Semiconductor Manufacturing International Corp (SMIC) தயாரிக்கப்பட்ட Kirin 9000s chip கொண்ட Mate 60 Pro ஸ்மார்ட்போன்-ஐ அறிமுகம் செய்தது.
இன்று காலை தைவான் நாட்டின் Foxconn மற்றும் பிரான்ஸ்-இத்தாலி நாட்டை சேர்ந்த STMicro ஆகியவை 40-நானோமீட்டர் சிப் ஆலையை அமைக்க மத்திய அரசின் ஆதரவிற்கு விண்ணப்பித்துள்ளது என தகவல் வெளியானது. 7nm தொழில்நுட்பம் தான் சிப் தயாரிப்பிலேயே மிகவும் உச்சகட்டமாந தொழில்நுட்பமாகும்.
இதன் மூலம் சீனா அமெரிக்க எவ்வளவு தடை விதித்தாலும் தன்னால் சாதிக்க முடியும் என காட்டியுள்ளது. இது ஜினா ராய்மாண்டோ, ஜோ பைடன் மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த அமெரிக்க அரசுக்கும் ஷாக் அளித்து.
இதோடு நிற்காத சீனா அரசு, அமெரிக்கா அரசு தடை விதித்த செமிகண்டக்டர் தயாரிப்புக்கான உபகரணங்களை தயாரிக்கவும், இதற்கான மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தையும் உருவாக்க தனிப்பட்ட முறையில் 40 பில்லியன் டாலர் நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது. 40 பில்லியன் டாலர் எனில் 3.33 லட்சம் கோடி ரூபாய் இவ்வளவு பெரிய தொகையை ஒதுக்கீடு செய்தது மூலம் இனி சீனா அமெரிக்கா, ஜப்பான், நெதர்லாந்து நாடுகளை இனி நம்பியிருக்க தேவையில்லை.
கடைசி அறிவிப்பாக இருந்தாலும், தரமான அறிவிப்பாக சீனா அரசு நேற்று அனைத்து மத்திய அரசு ஊழியர்கள், அமைச்சர்கள், பொதுத்துறை ஊழியர்களை ஐபோன்-களை பயன்படுத்த கூடாது என்றும், அரசு அலுவலகத்திற்குள்ளேயும், அலுவல் ரீதியான பணிகளுக்கு பயன்படுத்த கூடாது என அறிவித்தது.
இன்று காலை இந்த தடையும் கட்டுப்பாடும் உள்ளூர் அரசு ஊழியர்களும், நாடு தழுவிய அனைத்து அரசு ஊழியர்களுக்கும் பொருந்தும் என அறிவித்துள்ளது. அமெரிக்காவின் ஆப்பிள் நிறுவனத்திற்கு சீனா தான் வர்த்தக கோட்டை.
சீனா அரசின் இந்த அறிவிப்பு அடுத்த 4 நாட்களில் ஆப்பிள் முதல் ஐபோன் 15 அறிமுகம் செய்வதற்கு முன்பும், ஹூவாய் Mate 60 Pro ஸ்மார்ட்போன்-ஐ அறிமுக செய்த பின்பு அறிவித்துள்ளது. இது ஆப்பிள் வர்த்தகத்தில் பெரிய ஓட்டையை உருவாக்கும்.
அமெரிக்க அரசு உத்தரவால் எப்படி ஆப்பிள் சீனாவில் இருந்த தனது உற்பத்தியை வெளியேற்றியதோ, அதேபோல் சீன அரசு ஆப்பிள் வர்த்தகத்தையும் முடக்கியுள்ளது. இதன் விளைவு ஆப்பிள் பங்குகள் 189.70 டாலரில் இருந்து நேற்று 179 டாலர் வரையில் சரிந்தது. இதன் மூலம் 200 மில்லியன் டாலர் அளவிலான சந்தை மதிப்பீட்டை ஓரே நாளில் ஆப்பிள் இழந்தது.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!



Click it and Unblock the Notifications