சீனாவில் மிகவும் அரிதான கனிம வளங்கள் உள்ளன. இதனால் அந்நாடு கனிம வளங்களை வைத்தும் சர்வதேச சந்தையில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்த வார தொடக்கத்தில் சமாரியம், காடோலினியம் ,டெர்பியம், டிஸ்ப்ரோசியம், லுடீடியம், ஸ்காண்டியம் மற்றும் யட்ரியம் ஆகிய 7 கனரக அரிய நில உலோகங்கள் மற்றும் சில அரிய நில காந்தங்களின் ஏற்றுமதியை நிறுத்தியது. காலியம், ஜெர்மானியம் மற்றும் ஆன்டிமனி போன்ற கனிமங்கள் ஸ்மாா்ட்போன்கள் முதல் ஏவுகணைகள் வரை பெரும்பாலான பொருட்கள் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகின்றன.
இந்திய எலக்ட்ரானிக்ஸ் தயாரிப்பு நிறுவனங்கள் இந்த உலோகங்களுக்கு சீன இறக்குமதியை தான் பெரிய அளவில் நம்பி உள்ளன. இந்த சூழ்நிலையில், சீனாவின் இந்த தடை இந்திய எலக்ட்ரானிக் தயாரிப்பு நிறுவனங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று அஞ்சப்படுகிறது. ஆனால் இந்த உலோகங்கள் மற்றும் காந்தங்களை வாங்குவதற்கு சீனாவுக்கு மாற்றாக பிற நாடுகளை இந்திய எலக்ட்ரானிக்ஸ் நிறுவனங்களால் கண்டுபிடிக்க முடியும் என்று மத்திய அமைச்சர் அஸ்வனி வைஷ்ணவ் தெரிவித்தார்.

குருகிராமில் உள்ள மானேசரில் உள்ள விவிடிஎன் டெக்னாலஜியின் இயந்திர கண்டுபிடிப்பு பூங்கா திறப்பு விழாவில் கலந்து கொண்ட மத்திய தொழில்நுட்ப துறை அமைச்சர் அஸ்வனி வைஷ்ணவ் ஊடகங்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது சீனாவின் கனிமங்கள் ஏற்றுமதி தடை, அமெரிக்க துணை அதிபரின் இந்திய வருகை குறித்த கேள்விகளுக்கு அஸ்வனி வைஷ்ணவ் பதில் அளித்தார்.
அஸ்வனி வைஷ்ணவ் பதிலளிக்கையில், இதுவரை தொழில்துறையினருடன் நாம் என்ன விவாதித்து இருந்தாலும், கோவிட் தாக்கியதிலிருந்து முழு உலகமும் மதிப்பு சங்கிலிகளை பன்முகப்படுத்துவதற்கு தயாராகி வருவதால், இதற்கு மாற்று (சீனாவுக்கு மாற்றாக பிற நாடுகளில் கனிமங்கள் வாங்குவது) வழிகளை கண்டுபிடிக்க முடியும் என்று தொழில்துறையினர் கருதுகின்றனர்.
அடுத்த வாரம் இந்தியாவுக்கு வரும் அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸின் வருகை, இந்திய-அமெரிக்க பரஸ்பர வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தையில் நேர்மறையான விளைவை ஏற்படுத்தும். நேர்மறையான முடிவு கிடைக்கும். இதை நான் நல்ல நம்பிக்கையுடன் சொல்ல முடியும். ஏனென்றால் நாங்கள் இந்த விஷயத்தை மிகவும் நடைமுறை ரீதியாகவும், மிகவும் சுறுசுறுப்பாகவும் அணுகியுள்ளோம்.
மேலும் நாங்கள் தொடர்ந்து ஈடுபட்டுள்ளோம். குறிப்பிட்ட காலப்பகுதியில், இந்தியா மிகவும் நம்பகமான நாடாக உருவெடுத்துள்ளது. ஏனெனில் பிரதமர் நரேந்திர மோடி வெளியுறவுக் கொள்கையை கையாண்ட விதம், இன்று நம் நாட்டை பற்றிய அந்த நம்பிக்கை உருவாக்கப்பட்டுள்ளது, அது நம் அனைவருக்கும் ஒரு பெரிய மற்றும் முக்கியமான காரணியாக இருக்கும். என்று தெரிவித்தார்.
More From GoodReturns

டொனால்டு டிரம்ப் கொடுத்த டார்ச்சர்.. சீனா தப்பித்தது எப்படி? தடைகளை தகர்த்தெறிந்த வெற்றி பயணம்?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!



Click it and Unblock the Notifications