இந்தியா - சீனா எல்லை பிரச்சனைக்குப் பின்பு இந்தியச் சந்தையில் சீன முதலீட்டுக்கும், சீனாவைச் சார்ந்த நிறுவன முதலீட்டுக்கும் மத்திய அரசு கடுமையான கட்டுப்பாடுகள், ஆய்வுகள் மூலம் தடை விதித்து வருகிறது. இந்த நிலையில் இந்தியா போன்ற மிகப்பெரிய சந்தையைச் சீனா விட்டுவிடக் கூடாது என்பதற்காகப் பல மாற்று வழிகளைத் தேடி வருகிறது.
சில நாட்களுக்கு முன்பு எலக்ட்ரானிக்ஸ் துறையிலும், நுகர்வோர் பொருட்கள் பிரிவிலும் நாட்டின் உற்பத்தியை அதிகரிக்கச் சிறப்பு அனுமதியின் கீழ் சில சீன முதலீடுகளுக்கு அனுமதி வழங்குவது குறித்து மத்திய அரசு ஆலோசனை செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது சீனாவின் முன்னணி எலக்ட்ரிக் வாகன உற்பத்தியாளரான லீப்மோட்டார் (Leapmotor) நிறுவனம், இந்தியச் சந்தையில் கால் பதிப்பதற்குத் தயாராக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
MG மற்றும் BYD போன்ற நிறுவனங்களைப் போலவே, லீபமோட்டரும் இந்தியாவில் தனது கால்தடத்தைப் பதிக்கத் திட்டமிட்டுள்ளது. இதற்காக உலகளவில் பிரபலமான வாகன உற்பத்தியாளர் கூட்டமைப்பான ஸ்டெல்லான்டிஸ் (Stellantis) நிறுவனத்துடன் கூட்டணி அமைத்துள்ளது.
ஸ்டெல்லான்டிஸ் நிறுவனம், சிட்ரோன் (Citroen), ஜீப் (Jeep), ஃபியட் (Fiat) போன்ற பிரபல வாகன பிராண்டுகளை கொண்டிருப்பது மட்டும் அல்லாமல் இன்ஜின் தயாரிப்பில் மிகப்பெரிய நிறுவனம். ஏற்கனவே ஜீப் மற்றும் சிட்ரோன் கார்கள் மூலம் இந்திய சந்தையில் இருக்கும் ஸ்டெல்லான்டிஸ், தற்போது லீபமோட்டருடன் கூட்டணி வைத்துக்கொண்டு இந்தியச் சந்தையை மேலும் விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளது.
இந்தியா - சீனா இடையே எல்லைப் பிரச்சினைகள் இருப்பதால், சீன நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்வதற்கு கடுமையான விதிமுறைகள் உள்ளன. ஆனால், ஸ்டெல்லான்டிஸ் நிறுவனத்துடன் கூட்டணி அமைத்திருப்பது லீபமோட்டருக்கு வலுவான பலமாக மாறியுள்ளது.
இதற்கு முன்பு BYD நிறுவனம் இந்தியாவில் விரிவாக்கம் செய்ய முயற்சி செய்த போது, அரசு ஒப்புதல்கள் கிடைப்பதில் சிக்கல்களைச் சந்தித்தது. அதேபோல், MG மோட்டார் நிறுவனமும் பல சிக்கல்களை சந்தித்து, இந்திய தொழிலதிபர் சஞ்சய் ஜிண்டால்-ன் JSW நிறுவனத்துடன் கூட்டணி வைத்துக்கொண்டு இந்திய விதிமுறைகளுக்கு உட்பட்டுச் செயல்பட முடிவு செய்து கூட்டணி நிறுவனத்தை அமைத்தது.
இந்த நிலையில், கடந்த ஆண்டு ஸ்டெல்லான்டிஸ் நிறுவனம், 1.6 பில்லியன் அமெரிக்க டாலர்(சுமார் ரூ. 13,500 கோடி) முதலீடு செய்து, லீபமோட்டர் நிறுவனத்தில் 20 சதவீத பங்குகளை வாங்கியது குறிப்பிடத்தக்கது. இந்த முதலீடு, இரு நிறுவனங்களுக்கும் இடையே ஒரு வலுவான கூட்டணி அமைவதற்கு வழிவகுத்தது.
இந்த கூட்டணியின் மூலம், லீபமோட்டார் இண்டர்நேஷனல் (Leapmotor International) என்ற ஒரு கூட்டு நிறுவனம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கூட்டணி நிறுவனம் சீனாவிற்கு வெளியே லீபமோட்டார் வாகனங்களை ஏற்றுமதி செய்தல் மற்றும் விற்பனை செய்தல் பணிகளில் கவனம் செலுத்தும்.
இதன் பிடி ஸ்டெல்லான்டிஸ் நிறுவனத்தின் பெயரில் லீபமோட்டார் இண்டர்நேஷனல் வாயிலாக சீனாவின் லீபமோட்டார் நிறுவனம் இந்தியாவில் நுழையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை மத்திய அரசு எப்படி கட்டுப்படுத்தும் என்பது முக்கிய கேள்வியாக உள்ளது.
இந்த கட்டமைப்பு வெற்றி அடைந்தால், சீன நிறுவனங்கள் வெளிநாட்டு நிறுவனத்தில் முதலீடு செய்தோ அல்லது முதலீட்டைப் பெற்றோ இந்திய சந்தைக்குள் நுழையும். மேலும் சீன பொருட்களையும், சீன தயாரிப்புகளையும் தடை செய்யும் நாடுகளில் இந்த கட்டமைப்பைப் பயன்படுத்தி நுழையவும் வாய்ப்புள்ளது.
More From GoodReturns

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!



Click it and Unblock the Notifications