சுத்தி சுத்தி எங்குப் பார்த்தாலும் டெக் நிறுவனங்கள் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்து வரும் நிலையில், இன்று சற்றும் எதிர்பார்க்காத வகையில் சுந்தர் பிச்சை தலைமை வகிக்கும் ஆல்பபெட் சரியாகப் பணியாற்றாத Poor Performing பிரிவில் இருக்கும் 10000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யத் திட்டமிட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதன் மூலம் ஒட்டுமொத்த கூகுளின் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கையான 1,87,000 ஊழியர்களில் 5-6 சதவீத பேரை பணிநீக்கம் செய்ய உள்ளது.
கடந்த 3 மாதத்தில் மெட்டா, மைக்ரோசாப்ட், நெட்பிளிக்ஸ், டிவிட்டர், சேல்ஸ்போர்ஸ், ஆரக்கிள் என அனைத்து முன்னணி நிறுவனங்களும் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்த நிலையில் தற்போது டிக்டாக் முக்கியமான முடிவை எடுத்துள்ளது.
டிக்டாக்
சீனா-வின் முன்னணி ஷாட் வீடியோ சேவை தளமான டிக்டாக் அமெரிக்க அரசின் நெருக்கடி காரணமாகச் சர்வதேச வர்த்தகத்தைத் தனியாகப் பிரித்துச் சான் பிரான்சிஸ்கோ-வில் தலைமையாகக் கொண்டு உலக நாடுகளில் வர்த்தகம் செய்து வருகிறது.
வேலைவாய்ப்பு சந்தை
உலகம் முழுவதும் டெக் நிறுவனங்கள் பணிநீக்கம் செய்து வரும் நிலையில், வேலைவாய்ப்புச் சந்தையில் எப்போதும் இல்லாமல் அதிகப்படியான திறமையான மற்றும் கிரீம் லேயர் ஊழியர்கள் இருக்கும் நிலையில் இதைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள முடிவு செய்துள்ளது டிக்டாக்.
3000 இன்ஜினியர்கள்
சீன நிறுவனமான டிக்டாக் தனது சர்வதேச வர்த்தகத்தில் புதிதாக 3000 இன்ஜினியர்களைப் பணியில் அமர்த்த முடிவு செய்துள்ளது. இதில் அதிகப்படியான ஊழியர்கள் அமெரிக்க அலுவலகத்தில் நியமிக்கப்பட வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
டிக்டாக் சிஇஓ Shou Zi Chew
டிக்டாக் எப்போதும் புதிய ஊழியர்களைப் பணியில் சேர்க்கும் போது மிகவும் கவனமாகச் செய்யும், அந்த வகையில் எங்களுடைய வர்த்தகம் மற்றும் சேவையில் சமாளிக்க முடியாத பிரச்சனைகள் இருக்கும் போது தான் ஊழியர்களைச் சேர்ப்போம் என டிக்டாக் சிஇஓ Shou Zi Chew தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூர், அமெரிக்கா
TikTok சிங்கப்பூரில் உள்ள அதன் முக்கிய அலுவலகத்திலும் புதிதாக ஊழியர்களைப் பணியில் அமர்த்த உள்ளது. ஏற்கனவே 1,000க்கும் மேற்பட்ட டெக் இன்ஜினியர்களைக் கொண்ட மிகப்பெரிய அமெரிக்க டெக் இன்ஜினியர்ங் சென்டரை விரிவாக்கம் செய்யும் பணியில் இறங்கியுள்ளது டிக்டாக். டிக்டாக் தற்போது ஷாட் வீடியோ சேவை மட்டும் அளிக்காமல் மேப்ஸ், சர்ச் எனப் பல சமுகவளைத்தளச் சேவைகளை வழங்கி வருகிறது.
ஸ்மார்ட் ஐடியா
தற்போது கூகுள், மெட்டா, மைக்ரோசாப்ட் என அனைத்து முன்னணி டெக் நிறுவனங்களிலும் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு வரும் நிலையில் சீன நிறுவனமான டிக்டாக் திட்டமிட்டு காய் நகர்த்த உள்ளது. இதன் மூலம் டிக்டாக் தனக்குத் தேவையான ஊழியர்களைத் தேவையான பிரிவில், தேவையான நிறுவனத்தில் தேர்வு செய்து வேகமாக வளர்ச்சி அடைய வாய்ப்புகள் உள்ளது.
அமெரிக்கச் சந்தை
இதற்கிடையில் டிக்டாக் அமெரிக்காவில் பல விதிமுறைகளை மீறுவதாகக் கூறப்பட்ட நிலையில் டிக்டாக் தனது வர்த்தகத்தில் அதிகளவில் அமெரிக்க டெக் இன்ஜினியர்களைப் பணியமர்த்துவதாக வாக்குறுதி கொடுத்தது. இதைத் தொடர்ந்து இந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் அடுத்தகட்ட வளர்ச்சிக்கான திறமையான ஊழியர்களைப் பணியில் அமர்த்த உள்ளது.
More From GoodReturns

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?

வெளியான ரகசியம்.. ஈரான் மீதான போர்.. டிரம்ப் சொன்னது பொய்யா..? Pentagon-ல் நடந்தது என்ன..?

இதை தான் ஒரு வாரமாக அட்டாக் பண்றாங்களா? ஈரான் போரில் நடப்பது என்ன? அமெரிக்கா, இஸ்ரேல் சொல்வது பொய்யா?

ஈரான் போர் நீடிப்பதால் மனம் மாறிய அமெரிக்கா!! திடீரென இந்தியாவுக்கு சலுகை!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?



Click it and Unblock the Notifications