இந்தியாவும், சீனாவும் பொருளாதார அளவில் 80களில் ஒரே இடத்தில் தான் இருந்தது, ஆனால் 90களில் மலிவு விலை பொருட்களின் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி மூலம் மாபெரும் வளர்ச்சி அடைந்தது. இதேநேரத்தில் சீனா தனது உற்பத்தி பொருட்களின் தரத்தைத் தொடர்ந்து மேம்படுத்தி ஜப்பான் நாட்டு பார்மூலா-வை அடுத்தகட்டத்திற்குக் கொண்டு சென்றது.
சீனா பொருளாதார வளர்ச்சியில் உள்நாட்டு, வெளிநாட்டு முதலீடுகள் அதிகரித்தது மட்டும் அல்லாமல் அந்நாட்டு அரசிடம் உபரியாகப் பணம் சேர்ந்த நிலையில், இதைச் சரியான முறையில் பயன்படுத்தத் திட்டமிட்டு தனது வர்த்தகத்தையும் ஆதிக்கத்தையும் பெருக்க வேண்டும் என இலக்குடன் அண்டை நாடுகளுக்கும், வறுமையில் இருக்கும் நாடுகளுக்கும் கடன் கொடுக்கத் துவங்கி இன்று உலகில் எந்த நாடும் செய்திடாததைச் செய்துள்ளது.

சீன அரசின் பிரபலமான பெல்ட் அண்ட் ரோடு திட்டத்தின் கீழ் 1 டிரில்லியன் டாலருக்கும் அதிகமான கடனை உலக நாடுகளுக்குக் கொடுத்துள்ளது. இதன் மூலம் உலகிலேயே மிகப்பெரிய கடன் வசூலிக்கும் நாடாகச் சீனா உயர்ந்துள்ளது, இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் சீனா கொடுத்த கடனில் சுமார் 80 சதவீதம் நிதி நெருக்கடியில் இருக்கும் நாடுகளுக்குக் கொடுத்துள்ளது தான்.
சீன அரசின் தகவல் படி உருகுவே முதல் இலங்கை வரையில் சுமார் 150 நாடுகளுக்குப் பெல்ட் அண்ட் ரோடு திட்டத்தின் கீழ் கடன் கொடுத்துள்ளது. உலக நாடுகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் இலக்குடன் ஜி ஜின்பிங் 10 வருடத்திற்கு முன்பு பெல்ட் அண்ட் ரோடு திட்டத்தின் கீழ் அதிகப்படியான கடனை கொடுக்கத் துவங்கியது.
ஜி ஜின்பிங் அறிமுகம் செய்த பெல்ட் அண்ட் ரோடு திட்டத்தின் மூலம் குறைவான மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் மாபெரும் பாலம், துறைமுகம், நெடுஞ்சாலை, கட்டுமான திட்டங்களைச் செயல்படுத்த நிதியுதவி அளிப்பது மட்டும் அல்லாமல் கட்டுமானத்திற்கும் ஊழியர்கள் முதல் நிர்வாகம் வரையில் அனைத்தையும் சீனா அளிக்கிறது.
இப்படி சீனா கொடுத்த கடனில் 50 சதவீதத்திற்கும் அதிகமான தொகை வாங்கிய கடனில் அசலை திருப்பிச் செலுத்தவே பயன்படுத்தப்பட்டு உள்ளதாக AidData ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது. இந்த அளவு 2030 இறுதியில் 75 சதவீதத்தை எட்டும் எனவும் கணிக்கப்பட்டு உள்ளது.
சீன அரசின் பெல்ட் அண்ட் ரோடு திட்டத்தின் கீழ் சுமார் 165 நாடுகளில் 21000 திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளது. இதற்காக வருடத்திற்கு 80 பில்லியன் டாலர் வரையிலான தொகையைச் சீனா அள்ளிக்கொடுக்கிறது. இதேபோல் பணியை அமெரிக்காவும் செய்கிறது, அமெரிக்கப் பிற நாடுகளுக்கு அளிக்கப்பட்ட கடன்களைப் பார்க்கும் போது வருடத்திற்குச் சராசரியாக 60 பில்லியன் டாலர் அளிக்கிறது.
இந்த நிலையில் சீனா அளித்த கடனில் சுமார் 1.1 டிரில்லியன் டாலர் அதாவது 1.1 லட்சம் கோடி டாலர் 165 நாடுகளிடம் இருந்து வர வேண்டும். இதில் கொடுத்த கடனுக்கு வட்டி சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது, சீனா ஒவ்வொரு நாட்டிற்கும் ஒவ்வொரு வட்டியில் கடனை அளிக்கிறது, பல நேரம் வட்டி இல்லாமல் கூட கடனை கொடுத்துள்ளது என AidData ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது.
இதேபோல் சீனா செயல்படுத்தும் பல உள்கட்டமைப்புத் திட்டங்களை அதீத தொகையில் மதிப்பிடப்பட்டுச் செயல்படுத்தப்படுகிறது. இதனால் மலேசியா, மியான்மர் போன்ற நாடுகள் சீனாவின் திட்டத்தை மறு மதிப்பீடு செய்யத் துவங்கியுள்ளனர். இது மட்டும் அல்லாமல் உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கும் அளவு கடந்த சில ஆண்டுகளாகக் குறைந்துள்ளது.
வளரும் நாடுகள் மத்தியில் சீனாவின் கடன் வலை குறித்துக் கடுமையான விமர்சனங்களைப் பெற்று வரும் வேளையில் 2019 ஆம் ஆண்டுச் சீனா சமர்ப்பிக்கும் விண்ணப்பங்களில் 56 சதவீதம் ஒப்புதல் பெற்ற நிலையில் 2021ல் 40 சதவீதமாகக் குறைந்துள்ளது. இதனால் பெல்ட் அண்ட் ரோடு திட்டத்தின் கடன் வழங்கும் முறை சர்வதேச தரத்திற்கு இணையாக மாற்ற தற்போது சீனா அரசு முடிவு செய்துள்ளது.
சீன பொருளாதாரம் தடுமாறி வரும் வேளையிலும், கடந்த மாதம் சீன தலைநகர் பெய்ஜிங்-ல் நடந்த பெல்ட் அண்ட் ரோடு திட்டத்தின் 10வது ஆண்டு வெற்றி விழாவில் சீன அரசு கூடுதலாக 100 பில்லியன் டாலர் உட்செலுத்துவதாக அறிவித்துள்ளது.
இதேவேளையில் பெல்ட் அண்ட் ரோடு திட்டத்தின் கீழ் கடன் கொடுக்கப்பட்ட பல நாடுகளைச் சீன அரசு கடைசி நேரத்தில் காப்பாற்றக் கூடுதலாக நிதி உதவிகளை அளித்துச் சமாளித்து வருவதாக உலக வங்கி, AidData போன்ற பல அமைப்புகளின் ஆய்வுகள் கூறுகிறது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!



Click it and Unblock the Notifications