உலகின் மிகப்பெரிய பொருளாதாரம் மற்றும் நுகர்வோர் சந்தையை கொண்டிருக்கும் இந்தியா, சீனா மத்தியில் வர்த்தக அளவில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து எதிரும்புதிருமாக இருந்து வருகிறது. இந்த நிலை தற்போது இந்திய எலக்ட்ரானிக்ஸ் மற்றும் அப்ளையன்ஸ் துறையை கடுமையாக பாதித்துள்ளது.
இந்திய எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி நிறுவனங்கள் சீன நிறுவனங்களுடன் செய்யவிருந்த பல கூட்டணி திட்டங்களும், கையகப்படுத்தும் திட்டங்களும் சீன அரசின் அனுமதி கிடைக்காமல் தேக்கமடைந்துள்ளன.

இதற்கு முக்கியமான காரணம் தொழில்நுட்பப் பரிமாற்றம் தொடர்பான சீன அரசின் கொள்கை மாற்றங்களே இதற்கு முக்கிய காரணம் என்று தொழில்துறை வல்லுனர்களும் நிபுணர்களும் தெரிவிக்கின்றனர். இதனால் இந்தியாவில் இருக்கும் உள்நாட்டு உற்பத்தியாளர்களின் வளர்ச்சி திட்டங்கள் தேக்கம் அடைந்து பாதிக்கப்பட்டுள்ளன.
எல்லை பகுதியில் ஏற்பட்ட ராணுவ வீரர்கள் மத்தியிலான தாக்குதல் சம்பவம் ஏற்கனவே இந்தியா - சீனா மத்தியில் நட்புறவை பாதித்துள்ள வேளையில், அமெரிக்கா - சீனா மத்தியில் உருவான வர்த்தக பிரச்சனையின் விளைவாக தொழில்நுட்ப பகிர்வு, முக்கிய உற்பத்தி பொருட்கள் சப்ளை, நிபுணர்கள் உதவிகளை சீன அரசு கட்டுப்படுத்தி வருகிறது.
Hisense முயற்சி தேக்கம்
பிரபல சீன தொலைக்காட்சி மற்றும் வீட்டு உபயோகப் பொருள் நிறுவனமான ஹைசென்ஸ் குழுமம், இந்தியாவில் ஈபேக் டியூரபிள் அமைக்கும் தொழிற்சாலையில் 26 சதவீத பங்குகளை வாங்க முயன்றது. ஆனால் சீன அரசின் அனுமதி கிடைக்காத காணரத்தால் இந்த முதலீடு தள்ளிப்போனது. ஹைசென்ஸ் தற்போது பகவதி ப்ராடக்ட்ஸ் மற்றும் டிக்சன் டெக்னாலஜீஸ் போன்ற இந்திய ஒப்பந்த உற்பத்தி நிறுவனங்களுடன் மட்டுமே பணியாற்றி வருகிறது.
பிஜி எலக்ட்ரோபிளாஸ்ட் திட்டம் தேக்கம்
அதேபோல் பிஜி எலக்ட்ரோபிளாஸ்ட் நிறுவனம் சீன நிறுவனத்துடன் செய்துகொள்ளவிருந்த ஒப்பந்தம் ஏப்ரல்-மே மாதங்களில் முடிவடையும் என்று எதிர்பார்த்தது. ஆனால் சீன அரசின் அனுமதி இன்னும் வரவில்லை என்று நிறுவனத்தின் மூத்த அதிகாரி விகாஸ் குப்தா தெரிவித்தார்.
சீனா-வின் புதிய நிலைப்பாடு
சீன அரசு இந்தியாவுடனான அனைத்து பெரிய ஒப்பந்தங்களையும், தொழில்நுட்பப் பரிமாற்றங்களையும் கவனமாக ஆய்வு செய்கிறது. முக்கியமாக உற்பத்தி துறையில் தொழில்நுட்ப அறிவு சீனாவுக்கு வெளியே செல்லாமல் இருக்க வேண்டும் என்பதை முக்கிய இலக்காக சீன அரசு கொண்டுள்ளது. இதன் மூலம் அறிவுசார் சொத்துரிமைகள் அனைத்தும் சீன நிறுவனங்களிடமே இருக்க வேண்டும் என்று சீனா விரும்புகிறது. இதனால் இந்தியா உடனான பல தொழில்நுட்ப கூட்டுத் திட்டங்கள் தாமதமாகின்றன.
இந்தியாவின் PLI திட்டம்
சீனாவின் ஆதிக்கத்தை குறைக்க வேண்டும் என்பதற்காக மத்திய அரசு PLI திட்டத்தை மிகப்பெரிய அளவில் செயல்படுத்தி வரும் வேளையில் சீனாவுக்கு இது பெரும் போட்டியாக மாறியுள்ளது. உதாரணமாக முன்பு இந்தியாவில் ஏசி கம்பிரசர் பிரிவில் 80-85 சதவீதம் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டன. ஆனால் உற்பத்தி ஊக்கத்தொகை திட்டம் மற்றும் இறக்குமதிக் கட்டுப்பாடுகள் கொடுக்கப்பட்ட விலக்குகள் மூலம் 45-50 சதவீதமாகக் குறைந்துள்ளது.
இந்தியாவில் உள்ளூர் உற்பத்தியை அதிகரிக்க இத்தகைய சீன முதலீடுகளும் தொழில்நுட்பப் பரிமாற்றங்களும் மிகவும் தேவைப்படுகின்றன. ஆனால் தற்போதைய தாமதங்கள் PLI திட்டம் பலன் அளிக்காமல் போகும் நிலை உருவாகி வருகிறது.
இந்தியாவின் நிலைபாடு
சீன நிறுவனங்களின் முதலீடுகள் இந்தியாவிலும் பிரஸ் நோட் 3 விதிமுறைகளின்படி கடுமையான ஆய்வுகளுக்கு பின்பு தான் இந்திய அரசின் அனுமதி அளித்து வருகிறது. அதே நேரத்தில் சீனாவிலும் அரசு ஒப்புதல் தேவைப்படுவதால் இரு தரப்பிலும் காலதாமதம் ஏற்படுகிறது.


Click it and Unblock the Notifications