சொந்த வீடு. கேட்டாலே சில்லிடும் ஒரு பெரிய கனவு. இந்தியா போன்ற பெரிய மக்கள் தொகை கொண்ட நாடுகளில் இது மிகவும் அவசியம். குறிப்பாக ஆசிய நாடுகளில், சொந்த வீடு வாங்குவது கிட்டதட்ட குடும்பம் கெளரவத்தை உள்ளடக்கிய சமாச்சாரம். அதோடு சொந்த வீடு என்றால், ஏனோ தானோ என வீட்டை வாங்கி விடுவோமா என்ன..?
ஒரு சட்டை எடுக்க வேண்டும் என்றால் கூட சில மணி நேரங்கள் செலவழித்து, ஒன்றுக்கு பல சட்டைகளை போட்டுப் பார்த்து, எது பிடித்து இருக்கிறதோ அதைத் தானே வாங்குகிறோம். அதே போலத் தானே வீடும்.

தனி வீடா, அடுக்குமாடி குடியிருப்பா, அடுக்குமாடி குடியிருப்பு என்றால் நமக்கு என்ன நிலம் கிடைக்கும்..? தண்ணீர் வசதி எப்படி, அடுத்த 25 - 30 வருடங்களுக்காவது தண்ணீர் போன்ற அடிப்படை பிரச்னைகள் இல்லாமல் இருப்போமா..? குழந்தைகளின் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று வர அருகில் இருக்கிறதா..? கணவன், மனைவி அலுவலகம் செல்ல எல்லாம் ஓகேவா..? மளிகைக் கடை, காய்கறி சந்தை, மருத்துவமனை, மருந்துக் கடை, ஹோட்டல் என சுமார் 100 முக்கிய விஷயங்களைப் பட்டியல் போடலாம்.
இதை எல்லாம் பார்த்து தான், நாம் வீடு வாங்குகிறோம். அதே போல வீட்டை கட்டும் போதும், இந்த இடத்தில் சமையல் அறை, இது படுக்கை அறை, இது ஹால், இது முற்றம், இது குளியல் அறை, இது கழிவறை, இது பார்க்கிங் ஏரியா, இங்கு தான் சம்ப் வர வேண்டும், வீட்டை சுற்றி சுமார் 2 - 3 அடியாவது இடம் விட வேண்டும் என வாஸ்து பார்த்து பார்த்து கட்டுவோம்.
இதுவே அபார்ட்மெண்ட் என்றால், பில்டரின் திட்டத்தை பார்த்து தான் ஓகே செய்வோம். ஆனால் சீனாவில் பில்டர் சொன்ன படி தன் வீட்டைக் கட்டிக் கொடுக்கவில்லை என்பத் தான் செய்தி.
சீனாவில், ஹுனன் மாகாணத்தைச் சேர்ந்த, சாங்ஸா பகுதியில், ஒரு பில்டர் ஒரு திட்டத்தைக் காட்டி பலரையும் வீடு வாங்க வைத்திருக்கிறார். பில்டர் விளக்கிய திட்டத்தில் பார்க் வியூ எனச் சொல்லி இருக்கிறார்கள்.
வீடு வாங்கியவர்கள் பெரிய எதிர்பார்ப்புடன் இருந்து இருக்கிறார்கள். வீட்டில் குடியேறிய பின் வந்து பார்த்தால்... ஒரு பிளாஸ்டிக் ஏரி (நீச்சல் குளம்), அந்த ஏரியைக் கடக்க ஒரு நிஜ படிக்கட்டு, மோசமான செயற்கை புல் தரை என வீடு வாங்கிய சீனர்களை முழுக்க முழுக்க ஏமாற்றாத்தில் ஆழ்த்தி இருக்கிறார் அந்த பில்டர்.
கிட்ட தட்ட அந்த அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்கியவர்கள், சாமி என் கிணத்த காணும் என வடிவேலு காவலர்களிடம் புகார் கொடுப்பதைப் போல, எங்க ஏரி, செடி கொடி என எதையும் காணும் என வருத்தத்தில் இருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications