சீனாவில் டெஸ்லா உடன் நேருக்கு நேர் போட்டிப்போட்டு வரும் BYD நிறுவனம் தமிழ்நாட்டில் மட்டும் 3 தொழிற்சாலைகளை கொண்டு இந்தியாவில் 2 கார்களை அறிமுகம் செய்து சிறிய அளவிலான எலக்ட்ரிக் வாகன சந்தை வர்த்தகத்தை கொண்டு உள்ளது.
இந்த நிலையில் சீனா-வின் BYD நிறுவனம் கடந்த வாரம் இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்கள் தயாரிக்கவும், எலக்ட்ரிக் கார்களுக்கான பேட்டரியை தயாரிக்கவும் 1 பில்லியன் டாலர் அளவிலான முதலீட்டை செய்ய மத்திய அரசிடம் விண்ணப்பம் கொடுத்தது. BYD மற்றும் ஹைதராபாத்-ஐ சேர்ந்த மிகவும் பிரபலமான மேகா இன்ஜினியரிங் & இன்பராஸ்டக்சர் இணைந்து இந்த 1 பில்லியன் டாலர் முதலீட்டை முன் வைத்தது.

இந்த 8000 கோடி ரூபாய் முதலீட்டில் பெரும் பகுதி தமிழ்நாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மத்திய அரசு இந்த முக்கியமான முதலீட்டு விண்ணப்பத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என அறிவித்த காரணத்தால் 1 பில்லியன் டாலர் முதலீட்டு திட்டம் தோல்வி அடைந்துள்ளது.
BYD மற்றும் மேகா இன்ஜினியரிங் & இன்பராஸ்டக்சர் இணைந்து ஹைதரபாத் நகரில் புதிய எலக்ட்ரிக் வாகன தயாரிப்புக்கான தொழிற்சாலை அமைப்பதற்காக மத்திய தொழிற்துறை ஊக்குவிப்பு மற்றும் உள்வர்த்தக துறையிடம் 1 பில்லியன் டாலர் முதலீட்டு திட்டத்தை முன்வைத்தது.
இந்த நிலையில் மத்திய தொழிற்துறை ஊக்குவிப்பு மற்றும் உள்வர்த்தக துறை BYD மற்றும் மேகா இன்ஜினியரிங் & இன்பராஸ்டக்சர் கூட்டணியின் 1 பில்லியன் டாலர் முதலீடு குறித்து பிற துறையிடம் கருத்து கேட்ட நிலையில், சீன முதலீடுகள் மீதான பாதுகாப்பு அச்சங்கள், தற்போதைய விதிமுறையில் இருக்கும் கட்டுப்பாடுகள் இருக்கிறது என மூத்த அதிகாரிகள் சிலர் தெரிவித்துள்ளனர்.
ஹைதரபாத் நகரில் புதிய எலக்ட்ரிக் வாகன தயாரிப்புக்கான தொழிற்சாலை அமைக்க மேகா இன்ஜினியரிங் & இன்பராஸ்டக்சர் நிறுவனம் 10000 முதல் 15000 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாகவும், சீனாவின் BYD அனைத்து விதமான தொழில்நுட்ப உதவிகளையும் தொழில்நுட்ப கட்டமைப்புகளையும் அளிக்க உள்ளதாக இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Click it and Unblock the Notifications