பேஸ்புக், இன்ஸ்டா, யூடியூப் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வந்த காலத்தில் சீனாவில் இருந்து கிங்கிமிங்கி என ஆட்டம் போட்டு வந்த ஒன்று தான் டிக் டாக். சீனாவில் பெரு நகரங்களில் இளைஞர்கள் மத்தியில் மட்டுமே இயங்கி வந்த டிக்டிாக் ராட்சத வேகம் வேகத்தில் ஒட்டுமொத்த சீன மக்களையும் ஆட்கொண்டது.
இதன் பின்பு அடுத்த சில வருடத்திலேயே படிப்படிப்படியாக உலக நாடுகளுக்கு அறிமுகம் செய்து, ஒவ்வொரு நாட்டிலும் பல பில்லியன் டாலர்களை ப்ரோமோஷனுக்காக மட்டுமே செலவு செய்து மாபெரும் வெற்றி அடைந்தது.

டிக் டாக் அப்போதைய காலகட்டத்தில் சமுக வலைத்தளத்தில் அனைத்து இலக்கணத்தையும் தகர்த்து வெற்றி அடைந்தது. ஆனால் இந்த வெற்றி நீண்ட நாள் நீட்டிக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும். இந்தியாவில் டிக்டாக் தடை செய்யப்பட்ட பின்பு அடுத்தடுத்து பல நாடுகளில் தடை செய்யப்பட்டாலும்...
அமெரிக்காவில் வியக்கவைக்கும் அளவுக்கு வளர்ச்சியை கண்டது மட்டும் அல்லாமல் பேஸ்புக், யூடியூப்-க்கு போட்டியாக இருப்பதைத் தாண்டி தலைவலியாக மாறியது. தற்போது டிக் டாக்-ஐ தடை செய்யும் அளவுக்கு நிலைமை மாறியுள்ளது.
சமூக வலைத்தளங்களில் ஆதிக்கம் செலுத்தும் டிக் டாக் செயலி மீது அமெரிக்காவில் தடை விதிக்கப்படலாம் என்ற அச்சுறுத்தல் எழுந்துள்ளது. சீன நிறுவனமான ByteDance நிறுவனத்திற்குச் சொந்தமான இந்த செயலி, அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாகக் கருதப்படுவதே இதற்கான காரணம்.

பொதுவாக அமெரிக்க அரசியல் களத்தில் இரு கட்சிகளின் (டெமாகிராட், ரிபப்பளிக்) கருத்துக்கள் வேறுபட்டு இருக்கும். ஆனால், டிக் டாக் தடை மசோதாவுக்கு இரு கட்சிகளின் ஆதரவும் கிடைத்துள்ளது. இது அமெரிக்க அரசியல் வரலாற்றில் அரிய நிகழ்வாகக் கருதப்படுகிறது.
டிக் டாக் செயலி சீன அரசின் கட்டுப்பாட்டில் இயங்குகிறது என்றும், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் (Chinese Communist Party - CCP) பிரச்சார கருவியாக செயல்படுகிறது என்றும் பல்வேறு அமெரிக்க அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக, அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்கு டிக் டாக் அச்சுறுத்தலாக இருப்பதாக அவர்கள் கருதுகின்றனர்.
டிக் டாக் தடை மசோதாவை ByteDance நிறுவனம் கடுமையாக எதிர்த்துள்ளது. இந்த தடை மசோதா அமெரிக்கப் பொருளாதாரத்தையும், பேச்சு சுதந்திரத்தையும் பாதிக்கும் என அந்நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். மேலும், "டிக் டாக் தடை செய்யப்பட்டால், அமெரிக்காவில் 70 லட்சம் வர்த்தக நிறுவனங்கள் பாதிக்கப்படும். மேலும், அமெரிக்கப் பொருளாதாரத்திற்கு ஆண்டுதோறும் 24 பில்லியன் டாலர் பங்களிப்பு குறையும்" என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

அமெரிக்க நாடாளுமன்றத்தில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், ByteDance நிறுவனம் சில மாதங்களுக்குள் டிக் டாக் செயலியை அமெரிக்க நிறுவனத்திற்கு விற்பனை செய்ய வேண்டியிருக்கும். இந்த உத்தரவை மீறினால், அமெரிக்காவின் ஆப் ஸ்டோர் (Apple App Store) மற்றும் கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store) ஆகியவற்றிலிருந்து டிக் டாக் நீக்கப்படும்.
டிக் டாக் மீதான தடை உத்தேசம் அமெரிக்காவில் எந்த அளவு தீவிரமாக இருக்கிறது என்பதை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சமீபத்தில் சீன அதிபர் ஜி ஜிங்பேங்கிற்கு தொலைப்பேசி வழியாகப் பேசியபோது, டிக் டாக் பற்றிய தனது கருத்தை மீண்டும் வலியுறுத்தியதன் மூலம் அறிய முடிகிறது.
அமெரிக்காவில் டிக் டாக் தடை செய்யப்பட்டால் கூகுளின் யூடியூப், எலான் மஸ்க்-ன் டிவிட்டர், மெட்டா-வின் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ஸ்னாப்சாட் போன்றவற்றுக்கு மிகவும் சாதகமாக அமையும்.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications