சீனாவின் முக்கிய தொழில்நுட்ப நிறுவனங்களான டென்சென்ட், பைட்டான்ஸ் மற்றும் பைடு (Tenscent, Bytdance, Baidu) ஆகியவை, அமெரிக்க நிறுவனமான என்விடியாவின் H20 AI சிப்களை வாங்குவது தொடர்பாக சீன அதிகாரிகளால் எச்சரிக்கப்பட்டுள்ளன. சைபர்ஸ்பேஸ் நிர்வாகம் (Cyber Administration of China - CAC) மற்றும் பிற ஒழுங்குமுறை அமைப்புகள், இந்த நிறுவனங்களுடன் முக்கிய சந்திப்பை நடத்தியுள்ளது. இதில் என்விடியா சிப்களை வாங்குவதற்கான காரணங்களைக் கேட்டுள்ளதாகவும், தரவுப் பாதுகாப்பில் ஏற்படக்கூடிய அபாயங்கள் குறித்து தங்களது கவலைகளை வெளிப்படுத்தியதாகவும் ராய்ட்டர்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
சீன அதிகாரிகள், அந்நிறுவனங்களிடம் "உள்நாட்டு சப்ளையர்களிடமிருந்து சிப்களை வாங்க முடியும் போது, ஏன் என்விடியா சிப்களை வாங்க வேண்டும்?" என்று கேள்வி எழுப்பியதாகக் கூறப்படுகிறது. மேலும், என்விடியா சிப்களை வாங்குவது, வாடிக்கையாளர்களின் முக்கியமான தரவுகளை அபாயத்தில் ஆழ்த்தக்கூடும் என்றும் அதிகாரிகள் எச்சரித்ததாக கூறப்படுகின்றன. இருப்பினும், இந்தச் சந்திப்புகளின்போது H20 சிப்களை வாங்குவதை நிறுத்துமாறு எந்தவொரு அதிகாரப்பூர்வ உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என்றும் ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.

சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி வரம் கொடுக்க மாட்டார்னு சொல்ற கதையாக, பெரும் போராட்டத்திற்கு பின்பு அமெரிக்காவில் என்விடியா, AMD ஆகியவை டிரம்ப் அரசுக்கு 15 சதவீத வருமான பங்கீட்டை கொடுத்து சீனாவுக்கு தனது முக்கிய சிப்-களை விற்க முடிவு செய்த நிலையில், தற்போது சீனா இதற்கு தடையாக நிற்கிறது. சீனாவின் இத்தகைய மனநிலை என்விடியா வர்த்தகத்தை பாதிப்பது மட்டும் அல்லாமல் டிரம்ப் அரசுக்கு கிடைக்க வேண்டிய 15 சதவீத வருவாய் பங்கீடும் கிடைக்காது.
இத்தகைய அழுத்தங்கள், சீனாவின் உள்நாட்டு தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் தன்னிறைவுக்கான ஒரு பகுதியாகவே பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ஹுவாவே (Huawei) போன்ற நிறுவனங்கள் H20 சிப்களின் செயல்திறனுக்கு இணையான சிப்களை உருவாக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
அமெரிக்க அரசின் ஏற்றுமதிக் கட்டுப்பாடுகளுக்குப் பிறகு, குறிப்பாகச் சீனச் சந்தைக்காக என்விடியாவால் வடிவமைக்கப்பட்ட சிப், H20 ஆகும். என்விடியா, இந்த H20 சிப் "இராணுவ நோக்கங்களுக்கோ அல்லது அரசின் உள்கட்டமைப்பிற்கோ உருவாக்கப்பட்டது அல்ல" என்று தெரிவித்துள்ளது. கடந்த நிதியாண்டில், சீன விற்பனையிலிருந்து மட்டும் என்விடியா $17 பில்லியன் வருவாய் ஈட்டியது, இது அதன் மொத்த வருவாயில் 13% ஆகும். சீன அரசின் இத்தகைய எச்சரிக்கைகள், என்விடியாவின் சீனச் சந்தைக்கான அணுகலை அச்சுறுத்துவதுடன், அதன் வருவாயையும் கடுமையாகப் பாதிக்கக்கூடும்.
அண்மையில், டிரம்ப் நிர்வாகம் என்விடியா மற்றும் ஏஎம்டி (AMD) நிறுவனங்களுடன் ஒரு ஒப்பந்தத்தை மேற்கொண்டது. அதன்படி, சீனாவில் மேம்பட்ட சிப்களை விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் வருவாயில் 15% தொகையை அமெரிக்க அரசாங்கத்திற்கு வழங்க ஒப்புக்கொள்ளப்பட்டது.
இதனை சீனாவின் அரசு கட்டுப்பாட்டில் உள்ள ஊடகங்களும், என்விடியாவின் H20 சிப் குறித்து விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றன. அரசின் ஒளிபரப்பு நிறுவனமான CCTV-யுடன் இணைந்த யுயுவான் டான்டியன், H20 சிப்கள் தரவுப் பாதுகாப்பு அபாயங்களை உருவாக்குவதாகவும், தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்டதல்ல என்றும் ஒரு செய்தியை வெளியிட்டது.
அமெரிக்காவின் ஏற்றுமதிக் கட்டுப்பாடுகள் மற்றும் சீனாவின் உள்நாட்டு சிப் உற்பத்திக்கான முயற்சிகள் காரணமாக, உலகளாவிய சிப் விநியோகத்தில் நிச்சயமற்ற தன்மை அதிகரித்துள்ளது. இந்தச் சூழலில், சீன அதிகாரிகள், வெளிநாட்டு சிப்களைத் தவிர்த்து, உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு ஆதரவு அளிக்க அழுத்தம் கொடுப்பது தெளிவாகத் தெரிகிறது.
More From GoodReturns

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

டிசிஎஸ் நாசிக் அலுவலகத்தில் நடந்தது என்ன? மஃப்டியில் வேலை செய்த மகளிர் போலீஸின் ஷாக் ரிப்போர்ட் !!



Click it and Unblock the Notifications