சீனாவின் பெய்ஜிங் தலைநகரில் அடுத்த வாரம் கம்யூனிஸ்ட் கட்சியின் மாபெரும் பொதுக் கூட்டம் நடக்க உள்ள நிலையில், சீனாவில் கொரோனா தொற்று எண்ணிக்கை 3 மடங்கு அதிகரித்துள்ளது.
இதனால் சீன அரசு பாதிக்கப்பட்ட பல முக்கியமான நகரங்களில் அதிகப்படியான கட்டுப்பாடுகள் உடன் லாக்டவுன், பயணம் செய்யத் தடை உள்ளிட்ட முக்கியமான அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளது.
இதனால் சீன மக்கள் மீண்டும் வீட்டுக்குள் முடங்கியிருக்க வேண்டிய இக்கட்டான சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளனர்.
சீனாவில் கொரோனா
சீனாவில் நீண்ட விடுமுறைக்குப் பின்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 மடங்கு அதிகரித்துள்ளது. அதிலும் குறிப்பாகச் சீனாவின் மேற்கு பதியில் இருக்கும் Fenyang நகரத்தில் தொற்று அதிகரித்த நிலையில், அப்பகுதியில் இருக்கும் மக்கள் அனைவருக்கும் சோதனை செய்ய அரசு உத்தரவிட்டு உள்ளது.
மங்கோலியா
இதேபோல் மங்கோலியாவின் உள் பகுதியில் இருக்கும் Hohhot பகுதியில் இருந்து வாகனங்களும், மக்களும் உள்ளே வரவும், வெளியே செல்லவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. Hohhot பகுதியில் கடந்த 12 நாட்களில் சுமார் 2000 பேருக்குக் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
லாக்டவுன்
உலகில் தற்போது சீனாவில் மட்டும் கொரோனாவுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது மற்ற நாடுகளில் கட்டுப்பாடுகள் மிகவும் குறைவாகவே உள்ளது. இந்தியாவில் முழுமையாக நீக்கப்பட்டு மக்கள் முழுமையான இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பியுள்ளனர்.
சீன கம்யூனிஸ்ட் கட்சி கூட்டம்
சீனாவில் 5 வருடத்திற்கு ஒரு முறை நடத்தப்படும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மாபெரும் கூட்டம் வருகிற ஞாயிற்றுக்கிழமை துவங்க உள்ள நிலையில், கொரோனா தொற்று அதிகரிப்பும் கட்டுப்பாடுகளும் மக்களை அதிகமாகப் பாதித்துள்ளது.
ஜி ஜின்பிங்
சமீபத்தில் சீன அதிபரான ஜி ஜின்பிங் கைது செய்யப்பட்டார் என்றும், ராணுவ ஆட்சி வர போகிறது என்றும் பல்வேறு வதந்திகள் உருவான நிலையில், இந்தச் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மாபெரும் கூட்டம் மிகவும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications