சீன மக்கள் கதறல்.. லாக்டவுன்-க்கு அடங்காத கொரோனா 6 மாத உயர்வு..!

கொரோனா தொற்றுப் பாதிப்பு உலக நாடுகளின் பொருளாதாரத்தையும், மக்களையும் எப்படியெல்லாம் பந்தாடியது என்பதை யாராலும் மறக்க முடியாது.

கொரோனா தொற்றுக்கான தடுப்பு மருந்து உலகில் பெரும்பாலான மக்களுக்கு அளிக்கப்பட்டாலும் கொரோனா தொற்று அங்கொன்றும், இங்கொன்றுமாகத் தினமும் பாதிப்புகள் பதிவாகித் தான் வருகிறது. ஆனால் சீனாவில் தற்போது நடக்கும் விஷயங்கள் உலக நாடுகளைப் பயமுறுத்துகிறது.

சீனா

சீனா

உலக நாடுகள் அனைத்தும் கொரோனா தொற்றுக்கான லாக்டவுன் கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கி இருந்தாலும், சீனாவில் மட்டும் கொரோனா தொற்றுக் காலத்தில் கடுமையாக விதிக்கப்பட்டு இருந்த ஜீரோ கோவிட் பாலிசியைத் தொடர்ந்து பயன்பாட்டில் வைத்துள்ளது.

ஜீரோ கோவிட் பாலிசி

ஜீரோ கோவிட் பாலிசி

இதனாலேயே சீனாவின் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி அளவுகள் பாதிக்கப்பட்டு வரும் காரணத்தால் உலக நாடுகள் சீனாவை ஜீரோ கோவிட் பாலிசியைக் கைவிட வலியுறுத்தி வந்தது, ஆனால் தற்போது நிலைமை தலைகீழாக மாறியுள்ளது.

கொரோனா தொற்றுப் பாதிப்பு

கொரோனா தொற்றுப் பாதிப்பு

சீனாவில் கடந்த ஒரு மாதத்தில் பல முக்கிய நகரங்களில் கொரோனா தொற்றுப் பாதிப்பு ஏற்பட்ட காரணத்தால் அந்நாட்டின் அரசு வழக்கம் போல் தனது கடுமையான ஜீரோ கோவிட் பாலிசி திட்டத்தை நடைமுறைப்படுத்தியது. சீன அரசின் உத்தரவால் அந்நாட்டின் உற்பத்தி, கல்வி, மக்களின் இயல்பு வாழ்க்கை அனைத்தும் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

6 மாத உயர்வு

6 மாத உயர்வு

ஜீரோ கோவிட் கட்டுப்பாடுகள் விதித்தும் கொரோனா தொற்று எண்ணிக்கை சீனாவில் 6 மாத உயர்வை எட்டியுள்ளது, இதனால் சீன அரசு பீதியில் உள்ளது என்றால் மிகையில்லை. சீனா தனது ஜீரோ கோவிட் பாலிசியில் மிகவும் கடுமையான கட்டுப்பாடுகள் வைத்துள்ளது, இதனால் மக்கள் கடுமையான பாதிப்பை எதிர்கொண்டு வரும் வேளையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியாமல் சீனா உள்ளது.
அடிப்படை சேவைகள்

அடிப்படை சேவைகள்

இதேபோல் ஜீரோ கோவிட் பாலிசி நீண்ட காலமாக நடைமுறையில் இருக்கும் காரணத்தால் மக்களுக்குப் போதுமான உணவு பொருட்கள், வசதிகள், மருத்துவ உதவிகள் கிடைக்காத காரணத்தால் இந்தக் கட்டுப்பாட்டின் மீது மக்கள் நம்பிக்கை இழந்து விதிகளை மீற துவங்கியுள்ளனர், இதைக் கட்டுப்படுத்துவது சீன அரசுக்குத் தற்போது பெரும் போராட்டமாக உள்ளது.

தளர்வு

தளர்வு

இதனால் சீன அரசு விரைவில் கொரோனா தொற்று கட்டுப்பாடுகளைத் தளர்த்தப்படும் எனச் சில முக்கியப் பகுதிகளில் அறிவிப்புகள் வெளியாகியுள்ளதாகத் தெரிகிறது. ஆனால் கொரோனா தொற்று பரவலை எப்படித் தடுக்கப்போகிறது என்பது பெரும் கேள்விக்குறியாகவே உள்ளது.

5600 பேருக்கு கொரோனா

5600 பேருக்கு கொரோனா

திங்கட்கிழமை தரவுகள் படி சீனாவில் புதிதாக 5600 பேருக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது, இதில் 50 சதவீதம் Guangdong மாகாணத்தில் பதிவாகியுள்ளது. Guangdong தான் சீனாவின் முக்கியமான உற்பத்தி பகுதியாக உள்ளது, இப்பகுதி வாயிலாகத் தான் சீனாவின் முக்கியமான துறைமுகங்கள் இணைக்கப்படுகிறது.

Zhengzhou உற்பத்தி பகுதி

Zhengzhou உற்பத்தி பகுதி

இதேபோல் சீனாவின் மத்திய பகுதியான Zhengzhou-விலும் கொரோனா தொற்று எண்ணிக்கை மிகவும் அதிகமாக உள்ளது, இப்பகுதியில் தான் ஆப்பிள் நிறுவனத்தின் உற்பத்தி தளங்கள் உள்ளது, இப்பகுதியில் கொரோனா தொற்றுப் பாதிப்பு ஏற்பட்ட காரணத்தால் ஆப்பிள் தனது வாடிக்கையாளர்களுக்கு ஆப்பிள் பொருட்கள் டெலிவரி தாமதமாகலாம் எனத் தெரிவித்துள்ளது.

சமுக வலைத்தளம்

சமுக வலைத்தளம்

சீனாவின் ஜீரோ கோவிட் பாலிசி மூலம் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை வெய்போ உள்ளிட்ட சமுக வலைத்தளத்தில் பதிவுகள் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. குறிப்பாக மங்கோலியாவில் போதுமான மருத்துவ உதவிகள் இந்த லாக்டவுன் மூலம் கிடைக்காத காரணத்தால் 55 வயது பெண் தற்கொலை செய்துகொண்டது சீனா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+