சீனா உலக நாடுகள் மத்தியில் தனது ஆதிக்கத்தையும், வர்த்தகத்தையும் பெரிய அளவில் விரிவாக்கம் செய்யப் பயன்படுத்தும் முக்கியமான ஆயுதம் பணம் தான்.
ஆம் சீனா தனது ஆதிக்கத்தையும், தன் நாட்டு நிறுவனங்களின் வர்த்தகத்தையும் விரிவாக்கம் செய்யப் பெரிய திட்டங்களுக்கான கடன் அளிப்பதன் மூலம் அடைந்து வருகிறது. இதன் வாயிலாக உலகளவில் சீனா சுமார் 97 நாடுகளுக்கு நேரடியாகக் கடன் அளித்துள்ளது.
இது எப்படிச் சாத்தியமானது..? சீனாவிடம் அதிகக் கடன் பெற்ற நாடு எது..?
இந்தியா - சீனா
இந்தியா - சீனா மத்தியிலான எல்லை பிரச்சனை படிப்படியாகக் குறைந்து வரும் நிலையில், இந்தியாவின் அண்டை நாடுகளைச் சீனா தனது கடன் வலையில் சிக்கவைத்துள்ளது. இதில் பல நாடுகள் சீனாவிடம் அதிகளவில் கடன் வாங்கியதாலே அந்நாட்டின் பொருளாதாரம், நிதி நிலை என அனைத்தும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுத் திவாலாகும் நிலைக்குச் சென்றது.
பாகிஸ்தான், இலங்கை
உதாரணமாகப் பாகிஸ்தான் மட்டும் சீனாவிடம் சுமார் 30 பில்லியன் டாலர் அளவிலான தொகையைக் கடனாகப் பெற்றுள்ளது, சமீபத்தில் திவாலாகும் நிலையில் இருந்து கடைசி நேரத்தில் தப்பி வந்த இலங்கை சீனாவிடம் 5 பில்லியன் டாலர் கடன் வாங்கியுள்ளது. இப்படி உலகில் சிறிதும் பெரிதுமாகச் சுமார் 97 நாடுகளுக்குச் சீனா கடன் அளித்துள்ளது.
பட்டு பாதை
இது எப்படிச் சாத்தியமானது என்றால் 2013 ஆம் ஆண்டுச் சீன வர்த்தகத் துறையின் பட்டு பாதையை மீட்டு எடுக்க முயற்சியைத் துவங்கியதில் சீன தனது கடன் வலையை வீசத் துவங்கியது. சீனா இந்தப் பட்டு பாதையை மீட்டு எடுக்கும் திட்டத்தை Belt and Road Initiative (BRI) என அழைக்கிறது.
சீனா, ஐரோப்பா, ஆசியா, ஆப்பிரிக்கா
Belt and Road Initiative (BRI) என்பது சீனா, ஐரோப்பா, ஆசியா, ஆப்பிரிக்கா ஆகியவற்றைச் சாலை மற்றும் கடல் வழியாக இணைக்கும் திட்டம்தான் இது. இதைச் சாத்தியமாக்க இப்பகுதியில் இருக்கும் நாடுகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்தச் சீனா அதிகளவிலான கடன் கொடுத்து உதவுகிறது.
வட்டியில்லாக் கடன்
கடன் கொடுத்தால் எல்லோரும் வாங்கமாட்டார்கள், அதனால் உள்கட்டமைப்புப் பெயரில் குறைந்த வட்டியில், சில நாடுகளுக்குச் சில நேரத்தில் வட்டியில்லாக் கடன் எனப் பணத்தை அள்ளி வீசுகிறது. இதேவேளையில் சீனாவின் உற்பத்தி, ஏற்றுமதி, வர்த்தகம் தாறுமாறாக அதிகரித்து வந்தது சீனாவின் யோகம். இது அனைத்தும் ஆசை காட்டி மோசம் செய்யும் கதையாகவே உள்ளது.
850 பில்லியன் டாலர்
2013 முதல் Belt and Road Initiative (BRI) திட்டம் அதிகாரப்பூர்வமாகத் துவங்கிய இக்கடன் மூலம் தற்போது சீனா 97 நாடுகளுக்குச் சுமார் 850 பில்லியன் டாலர் அளவிலான கடனை அளித்துள்ளது. அமெரிக்கா BRI திட்டத்தை Trojan horse என்றும், மற்ற நாடுகள் இதை Debt-trap diplomacy என்றும் விமர்சனம் செய்து வருகிறது.


Click it and Unblock the Notifications