இந்தியாவை கட்டம் கட்டி அடிக்கும் சீனா.. எதுவும் செய்ய முடியாமல் தவிப்பு..?!

அமெரிக்காவின் நெருக்கடிக்கு மத்தியில் சீனா உலகளாவிய உற்பத்தி மற்றும் முதலீட்டு முறையில் மிகப்பெரிய மாற்றத்தை செய்து வருகிறது. இதேவேளையில் இந்தியாவின் உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடும் வகையிலும் சீனா தனது வியூகத்தை மாற்றியுள்ளது. இதனால் பிரதமர் மோடியின் கனவு துறையான உற்பத்தி துறையில் பெரிய முதலீடுகளை பெற முடியாமலும், வேகமாக வளர்ச்சி அடைய முடியாமலும் இந்தியா மாட்டிக்கொண்டு உள்ளது. அப்படி என்ன தான் நடக்குது, வாங்க பார்ப்போம்.

உலகளாவிய விநியோகச் சங்கிலி அமெரிக்க அரசின் முடிவுகள் மூலம் பெரிய அளவில் மாறி வரும் வேளையில் சீனா வேண்டுமென்றே குறிவைத்து சில நாடுகளுக்குத் தனது முதலீட்டைச் செய்து வருகிறது. இதில் இந்தியாவைத் திட்டமிட்டுப் புறக்கணிப்பது தெளிவாகத் தெரிகிறது.

இந்தியாவை கட்டம் கட்டி அடிக்கும் சீனா.. எதுவும் செய்ய முடியாமல் தவிப்பு..?!

2021 முதல் சீனாவில் இருந்து இந்தியாவுக்கு வரும் நேரடி அந்நிய முதலீடு 99% குறைந்துள்ளது. 2024 ஆம் ஆண்டில் சீனாவின் நேரடி அந்நிய முதலீடு வெறும் 4.5 பில்லியன் டாலராகக் குறைந்துள்ளது, இது கடந்த மூன்று தசாப்தங்களில் இல்லாத மிகக் குறைந்த அளவாகும்.

ஆனால் சீனா மற்ற நாடுகள் குறிப்பாகச் சீன பொருட்கள் மீது வரி விதிக்கும் நாடுகள் மீது திட்டமிட்டு அதிகப்படியான முதலீடுகளைச் செய்து வருகிறது. வரி விதிப்பாலும், இறக்குமதி கட்டுப்பாட்டாலும் சீன நிறுவனங்கள் தனது இருப்பை உலக அரங்கிலிருந்து குறைப்பதற்குப் பதிலாக, மாத்தி யோசித்து சீன நிறுவனங்கள் தீவிரமாக முதலீடு செய்து தனது இருப்பை விரிவுபடுத்தி வருகிறது.

இதுநாள் வரையில் சீன அரசும், சீன நிறுவனங்களும் அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளில் தான் அதிகளவில் முதலீடு செய்து வந்தது. ஆனால் கடந்த 5 வருடத்தில் ஹங்கேரி, மெக்சிகோ, மொராக்கோ மற்றும் பிரேசில் போன்ற நாடுகளில் தொழிற்சாலைகள், பேட்டரி ஆலைகள் மற்றும் தொழில்துறை பூங்காக்கள் என பல திட்டங்களில் சீனா தனது முதலீட்டை அதிகரித்துள்ளது.

ஐரோப்பாவில், ஹங்கேரி தான் தற்போது சீனாவின் விருப்பமான முதலீட்டு இடமாக உருவெடுத்துள்ளது, சீனாவின் பேட்டரி நிறுவனமான CATL இலிருந்து 7 பில்லியன் டாலக் முதலீட்டையும், BYD இலிருந்து ஒரு புதிய எலக்ட்ரிக் வாகன தொழிற்சாலையையும் ஹங்கேரி பெற்றுள்ளது.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய இரண்டு நாட்டிலும் செய்யப்பட்ட வர்த்தக ஒப்பந்தங்களை சிறப்பான முறையில் செயல்படுத்தவும், வரி விதிப்பில் இருந்து தப்பிக்கவும், மொராக்கோ-வை சீனா தனது புதிய எலக்ட்ரிக் வாகன தளமாக மாறியுள்ளது. சீனா புவிசார் அரசியல் பிரச்சனையை எளிதாக களைய இத்தகைய புதிய முதலீட்டு உக்தியை கையில் எடுத்துள்ளது.

சீனாவின் இந்த உக்தி பெரிய அளவில் பலன் அளித்து வருகிறது, ஐரோப்பிய ஆட்டோமொபைல் சந்தையில் சீனாவின் கை ஓங்கியுள்ளது இதனாலேயே சீனா கார்கள் மீது அதிகப்படியான வரி விதிக்கப்பட்டு வருகிறது. இதை களையும் வகையிலேயே சீனாவில் இருந்து கார்களை ஏற்றுமதி செய்யாமல் ஐரோப்பாவிலும், அதன் நட்பு நாடுகளில் இருந்தும் கார்களை தயாரித்து கார்களை விற்பனை செய்து வருகிறது. இதனால் தற்போது வோக்ஸ்வேகன் போன்ற முன்னணி ஐரோப்பிய பிராண்டுகளின் விற்பனை குறைய துவங்கியுள்ளது.

இந்தியாவை கட்டம் கட்டி அடிக்கும் சீனா.. எதுவும் செய்ய முடியாமல் தவிப்பு..?!

சரி நம்ம இந்தியா விஷயத்திற்கு வருவோம், ஏற்கனவே கூறியது போல் சீனா இந்தியாவில் தனது முதலீட்டை பெரிய அளவில் குறைந்துள்ளது. இதற்கு முக்கியமான காரணம் மத்திய அரசின் கட்டுப்பாடும் கூட. இதேவேளையில் இந்தியா, சீனாவுக்கு இணையாக உற்பத்தி ஹப் ஆக மாற முயற்சி செய்து வரும் வேளையில், இதை தடுக்க சீன பல வேலைகளை செய்து வருவது இந்தியாவுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது.

சீனா 1990களில் உருவாக்கிய உற்பத்தி புரட்சியை இந்தியா 2020ல் உருவாக்கிய துவங்கியது, இதற்கு சாதகமாக சீனாவுக்கு இணையான மக்கள் தொகையும், 6.5% என்ற வலுவான பொருளாதார வளர்ச்சி விகிதத்தையும் இந்தியா கொண்டிருக்கிறது. இப்படி 12 கட்டத்திலும் இந்தியா உச்சத்தில் இருக்கும் வேளையில் சீனா இதை கெடுக்க முயற்சி செய்கிறது.

இதில் முக்கியமாக BYD மற்றும் Foxconn போன்ற நிறுவனங்கள் இந்தியாவில் விரிவாக்கம் செய்வதை சீன அரசு விரும்பவில்லை. இதேபோல் சோலார் எனர்ஜி உபகரணங்கள், மின்சார வாகன பாகங்கள் மற்றும் மின்னணு இயந்திரங்கள் போன்ற அத்தியாவசிய தொழில்துறை பொருட்தளை சீனாவில் இருந்து இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்ய பல்வேறு கட்டுப்பாடுகள் அமைதியாக சீனா விதித்து வருகிறது.

சீன துறைமுகங்களில் சுரங்கப்பாதை துளையிடும் இயந்திரங்கள் மற்றும் Foxconn இன் உபகரண ஏற்றுமதிகள் வேமென்றே தாமதப்படுத்தப்படுகிறது. இதேபோல் சீனா உற்பத்தி தொழில்நுட்பத்தை பகிரவும், தொழில்நுட்ப அதிகாரிகளை இந்தியாவுக்கு அனுப்புவதிலும் மெத்தனம் காட்டி வருகிறது.

இப்படி இந்தியாவின் உற்பத்தி துறையின் வளர்ச்சியை எப்படியெல்லாம் தாமதப்படுத்த முடியுமோ அதை செய்கிறது சீனா. இதன் மூலம் சர்வதேச சப்ளை செயினில் இந்தியாவின் பங்கீட்டை அதிகரிக்கும் வேகத்தை குறைக்க முடியும், இந்த இடைப்பட்ட கேப்பில் சீனா தனது புதிய முதலீடுகள் மூலம் தனது வர்த்தகத்தில் ஏற்பட்ட கேப்பை நிரப்பும்.

ஆனால் இந்தியாவின் உற்பத்தி துறை வளர்ச்சிக்கு சீனா மட்டும் சவால் இல்லை, மத்திய அரசு விதிக்கும் உதிரிபாகங்கள் மீதான அதிக இறக்குமதி வரிகள், கடுமையான தொழிலாளர் சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறை சிக்கல்கள் என பல பிரச்சனைகள் உள்ளது.

உதாரணமாக ஆப்பிள் தனது ஐபோன் உற்பத்தியை இந்தியாவிற்கு பெரிய அளவில் மாற்றியிருந்தாலும், அதன் மொத்த உற்பத்தியில் 15% பங்கீட்டை மட்டுமே இந்தியாவில் கொண்டுள்ளது. ஆனால் ஆப்பிள் நிறுவனத்தின் இலக்கோ 25%, இதை இன்னும் எட்டவில்லை.

இதேநேரத்தில் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தியில் வியட்நாம் பிரம்பிக்க வைக்கும் அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது. சீனாவின் நேரடி ஆதரவை கொண்டிருக்கும் வியட்நாமின் எலக்ட்ரானிக்ஸ் துறையின் மதிப்பு 126 பில்லியன் டாலர், ஆனால் இந்தியாவின் மதிப்பு 40 பில்லியன் டாலர் மட்டுமே. இந்தியாவை மூன்று மடங்கு அதிகமாகும்.

சீனா பிளஸ் ஒன் உத்தி, தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு பெரிய அளவில் பயனளித்துள்ளது. அதில் முக்கியமாக மெக்சிகோ, வியட்நாம் மற்றும் இந்தோனேசியா ஆகியவை உற்பத்தி துறையில் பெரிய அளவிலான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இதுதான் சீனாவின் பவர்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+