உலக வல்லரசு நாடுகள் பட்டியலில் முதல் இடத்தை பிடிக்க சீனா அமெரிக்காவுடன் கடுமையாக போட்டி போட்டு வரும் அதேவேளையில், அமெரிக்க சந்தையில் சீனா தயாரிப்புகள் மற்றும் சீனா நிறுவனங்களின் ஆதிக்கத்தை குறைக்க பல வர்த்தக தடைகளை அமெரிக்கா போட்டு வருகிறது.
இந்த கடுமையான வர்த்தக போட்டி நிலவும் சூழ்நிலையில், சீன அதிபர் ஜி ஜின்பிங் அடுத்த 5 வருடத்தில் உலகிலேயே அதிக தனிநபர் வருமானம் கொண்ட நாடாகவும், அடுத்த 15 வருடத்தில் சீனாவின் பொருளாதாரம் இரட்டிப்பு வளர்ச்சி அடைய சீனாவின் எதிர்கால வளர்ச்சி திட்டத்தை வகுத்து அந்நாட்டு நாடாளுமன்றத்தில் வெளியிட்டுள்ளார்.
ஜி ஜின்பிங்-ன் இந்த அறிவிப்பு சீனாவுடன் போட்டி போடும் அமெரிக்காவை மட்டும் அல்லாமல் உலக நாடுகள் அனைத்தையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளது. ஏற்கனவே பெரும் பகுதி உற்பத்தியை வியட்நாம் மற்றும் பங்களாதேஷ் நாடுகளிடம் இழந்த இந்த நிலையில் சீனாவின் இலக்கு வியக்கவைக்கிறது.
அதிக தனிநபர் வருமானம்
சீனாவின் இன்றைய பொருளாதார சூழ்நிலையில் 14வது 5 ஆண்டு திட்டத்தின் மூலம் அடுத்த 5 வருடத்தில் உலகிலேயே அதிக தனிநபர் வருமானம் கொண்ட நாடாக மாற்ற அனைத்துவிதமாக சாத்திக்கூர்களும் உண்டு என சீன அதிபர் ஜி ஜின்பிங் தனது கட்சி கூட்டத்தில் பேசியுள்ளதாக சீனாவின் அரசு பத்திரிக்கை நிறுவனமான ஜின்ஹூவா தெரிவித்துள்ளது.
15 ஆண்டு திட்டம்
சீன அரசு 5 ஆண்டு பொருளாதார கொள்கையும், 15 ஆண்டு இலக்கையும் சமீபத்தில் அறிவித்ததுள்ளது. இந்த இரு திட்டங்கள் மூலம் அடுத்த 15 ஆண்டுகளுக்குள் சீனா பொருளாதாரம் உற்பத்தியை மட்டும் நம்பியிருக்காமல் தொழில்நுட்பத்தின் மீது கட்டமைக்கப்படும்.
இதுமட்டும் அல்லாமல் ஏற்றுமதியை தாண்டி உள்நாட்டு நுகர்வின் அளவை மேம்படுத்தவும், நிலையான மற்றும் ஸ்திரமான வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்த இத்திட்டத்தின் மூலம் முடிவு செய்துள்ளது.
இரட்டிப்பு பொருளாதார வளர்ச்சி
சீனாவின் இந்த 15 ஆண்டு திட்டம் குறித்து முழுமையான தகவல் சீன அரசு வெளியிடவில்லை. ஆனால் 15 வருடத்தில் இரட்டிப்பு பொருளாதார வளர்ச்சி எனில் 4.7 சதவீத வருடாந்திர வளர்ச்சியை சீனா பதிவு செய்தால் மட்டுமே இரட்டிப்பு வளர்ச்சியை பதிவு செய்ய முடியும் என ஹாங்காங் பொருளாதார வல்லுனர் தெரிவித்துள்ளார்.
14.3 டிரில்லியன் டாலர்
இன்றைய நிலையில் சீனாவின் பொருளாதாரம் 14.3 டிரில்லியன் டாலர் அளவில் மதிப்பிடப்பட்டு உலகின் 2வது மிகப்பெரிய பொருளாதார நாடாக உள்ளது. இதேபோல் சீனா அப்பரி மிடில் கிளாஸ் வருமானம் கொண்ட பொருளாதார நாடாக உள்ளது.
சீனாவின் தனிநபர் வருமானத்தின் அளவு 10,410 டாலர். உலகிலேயே அதிக தனிநபர் வருமானம் கொண்ட நாட்டின் அளவு 12,375 ரூபாய்.
சவால்
சீனாவின் இந்த இலக்கு மிகவும் சவாலானது, ஆனால் இதேவேளையில் தொழில்நுட்பம் மற்றும் வர்த்தகத்தில் சீனாவிற்கு அமெரிக்கா பல்வேறு தடைகளை விதித்து வரும் நிலையில், அமெரிக்காவில் ஏற்படும் ஆட்சி மாற்றம் சீனாவிற்கு சாதகமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வியட்நாம் மற்றும் பங்களாதேஷ்
சீனா அடுத்த 15 வருடத்தில் தனது பொருளாதாரத்தை இரட்டிப்பு வளர்ச்சி அடைய இலக்கு நிர்ணயம் செய்துள்ள நிலையில், வியட்நாம் மற்றும் பங்களாதேஷ் சீனாவின் உற்பத்தியை பெரும் பகுதியை கைப்பற்றி கடந்த 15 ஆண்டில் சிறப்பான வளர்ச்சியை அடைந்துள்ளது.
வியக்கவைக்கும் வியட்நாம்.. ஆசியாவில் மீண்டும் ஒரு ஆச்சரியம்..!
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!



Click it and Unblock the Notifications