2022 ஆம் ஆண்டில் சீனப் பொருளாதாரம் 3.2 சதவீதம் மட்டுமே வளர்ச்சி அடைந்ததாகப் பொருளாதாரம் மற்றும் வணிக ஆராய்ச்சி மையம் (Cebr) தெரிவித்துள்ளது.
சீனா பொருளாதார வளர்ச்சி குறித்த முந்தைய அறிவிப்பைக் காட்டிலும் இது மிகக் குறைவான அளவாக இருக்கும் காரணத்தால் உலக நாடுகளுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.
சீனா பொருளாதார வளர்ச்சியில் ஏற்பட்ட பாதிப்பிற்கு மிகவும் முக்கியமான காரணம் அந்நாட்டு அரசு அறிவித்த ஜீரோ கோவிட் பாலிசி தான் என லண்டன் நகரை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஆலோசனை அமைப்பான சென்டர் பார் எக்னாமிக்ஸ் அண்ட் பிஸ்னஸ் வெளியிட்டு உள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
உற்பத்தி இன்ஜின்
உலகின் உற்பத்தி இன்ஜின் ஆகவும், அடுத்த சில வருடத்தில் சர்வதேச பொருளாதாரப் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் அமெரிக்காவை ஓரம்கட்டும் அளவிற்குச் சீன உயரும் எனக் கணிக்கப்பட்ட நிலையில் தற்போது சீனா-வில் 2022 ஆம் ஆண்டின் மத்தியில் அதிகரிக்கத் துவங்கிய கொரோனா தொற்றுத் தற்போது பூதாகரமாக வெடித்துள்ளது.
சீன அரசு
இந்த நிலையில் சீன அரசு கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த தனது ஆஸ்தான ஜீரோ கோவிட் பாலிசியைக் கடுமையான பின்பற்ற முடிவு செய்தது பல நகரங்களை மாத கணக்கில் வீட்டில் முடக்கியது. இந்த நிலையில் தான் மக்கள் போராட்டம் பெரியதாக வெடித்தது. சீன அரசின் ஜீரோ கோவிட் பாலிசி அந்நாட்டின் பொருளாதாரத்தைப் பெரிய அளவில் பாதித்தது.
ஜீரோ கோவிட் பாலிசி
ஜீரோ கோவிட் பாலிசி-யை ஹாங்காங் நகரில் முற்றிலும் கைவிடப்பட்டது, ஆனால் சீனாவில் தனது மக்கள் தொகையில் பெரும் பகுதியினருக்கு தடுப்பூசி போடப்படும் வரை அந்நாட்டில் ஜீரோ கோவிட் பாலிசியைக் கைவிட முடியாது என முடிவு செய்யப்படாது என அறிவித்தது.
முக்கியப் பிரச்சனை
கொரோனா தொற்றை எதிர்க்கும் அளவுகளைப் போதுமான அளவு உயர்த்தப்படுவதற்கு முன்பு, கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதில் ஏற்பட்ட பிரச்சனை தான் தற்போது அந்நாட்டின் மக்களுக்கும் பொருளாதாரத்திற்கும் பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. இதைச் சீன அரசு சரியான முறையில் செய்திருக்க வேண்டும் என்று சென்டர் பார் எக்னாமிக்ஸ் அண்ட் பிஸ்னஸ் வெளியிட்டு உள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
GDP அளவு
2022 ஆம் ஆண்டில் PPP அளவில் சரிசெய்யப்பட்ட GDP அளவில் அந்நாட்டின் தனிநபர் வருமானம் 21,291 டாலராக உள்ளது. இதன் மூலம் சீனா அப்பர் மிடில் இன்கம் கொண்ட நாடாக உயர்ந்துள்ளது. சீன அரசு 2025க்குள் high income ஸ்டேட்டஸ் பெற வேண்டும் என இலக்கு நிர்ணயம் செய்திருந்தது.
சீன பொருளாதார வளர்ச்சி
சீன பொருளாதாரம் கொரோனா தொற்றுப் பாதிப்பு நிறைந்த 2020ல் 2.2 சதவீதம் மட்டுமே வளர்ச்சி அடைந்த நிலையில், 2021ல் தடாலடியாக 8.1 சதவீதம் வரையில் வளர்ச்சி அடைந்தது. ஆனால் 2022ல் அவ்வபோது ஜீரோ கோவிட் பாலிசி மூலம் லாக்டவுன் விதிக்கப்பட்டதால் உற்பத்தி, வர்த்தகம் என அனைத்தும் பாதிக்கப்பட்டதால் 3.2 சதவீதம் வரையிலான வளர்ச்சியை மட்டுமே பதிவு செய்துள்ளது.
டார்கெட் அமெரிக்கா மிஸ்
சீனாவில் உருவாகியுள்ள உற்பத்தி மற்றும் வர்த்தகம் சரிவும், கொரோனா தொற்றும் சீனாவின் அமெரிக்கப் பொருளாதாரத்தை முந்தும் கனவு நினைவாகாது எனக் கணிக்கப்பட்டு உள்ளது. சீனா அமெரிக்காவை 2036 ஆம் வருடம் முந்தும் என்றும் கணிக்கப்பட்டு உள்ளது, இது முந்தைய கணிப்பைக் காட்டிலும் 6 வருடம் கூடுதலான காலகட்டமாகவும்.


Click it and Unblock the Notifications