உலக மக்களையும், பொருளாதாரத்தையும் ஆட்டிப்படைத்து வரும் கொரோனா எந்தொரு நாட்டையும் விட்டு வைக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும். அதிலும் குறிப்பாக வல்லரசு நாடுகள் எனக் கூறப்படும் அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளில் பொருளாதாரத்திலும், மக்கள் நலன்-ம் அதிகளவில் பாதித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பால் மக்கள் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு பயத்தில் வாழ்ந்து வருகின்றனர்.
ஆனால் கொரோனா-வின் பிறப்பிடமாகக் கருதப்படும் சீனா தற்போது அதன் பாதிப்பில் இருந்து மீண்டு வந்தது மட்டுமல்லாமல் உற்பத்தித் துறை முதல் சேவை துறை வரையில் அனைத்துத் துறை வர்த்தகமும் சிறப்பாக நடந்து வரும் காரணத்தால் பொருளாதாரத்தில் வளர்ச்சி கண்டுள்ளது.
இதன் மூலம் கொரோனா-வுக்குப் பின் முதல் முறையாகப் பொருளாதார வளர்ச்சி சந்தித்துள்ள நாடு சீனா என்பது இனி வரலாறு..!
சீனா அசத்தல்..
உலகின் முன்னணி பொருளாதார நாடுகளில் ஒன்றாக விளங்கும் சீனா கொரோனா பாதிப்பில் மீண்டும் லாக்டவுன் மற்றும் கட்டுப்பாடுகள் தளர்க்கபட்டு மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பும் நிலை உருவாகியுள்ளது. இதுமட்டும் அல்லாமல் சீன தலைநகரப் பெய்ஜிங்-ல் ஏற்பட்ட 2வது கொரோனா பாதிப்பையும் சீன மிகவும் வேகமாகக் கட்டுப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனால் சீனாவில் கடந்த சில மாதங்களாகவே சீனாவில் வர்த்தகம் மற்றும் உற்பத்தி சந்தை கிட்டத்தட்ட 90 சதவீதம் இயங்கி வருகிறது. இதன் எதிரொலியாக ஜூன் காலாண்டில் சீன பொருளாதாரம் 3.2 சதவீதம் வரையிலான வளர்ச்சியை அடைந்துள்ளது.
பொருளாதார வளர்ச்சி
மார்ச் காலாண்டில் சீனா -6.8 சதவீத பொருளாதாரச் சரிவை அடைந்த நிலையில் வெறும் 3 மாத காலத்தில் 3.8 சதவீத பொருளாதார வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இந்த அளவீடு சீனாவின் 1990 காலகட்ட வளர்ச்சி என்றாலும் கொரோனா பாதிப்பில் இருந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் மீண்டுள்ள நிலையில் அடுத்த காலாண்டில் சீனா முழுமையான வளர்ச்சியை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொரோனா பாதிப்பு
சீனாவில் கொரோனா பாதிப்பு நவம்பர் மாத கடைசியில் ஆரம்பக்கட்ட நிலையில் இருந்து டிசம்பர் மாத துவக்கத்திலேயே மிகப்பெரிய பிரச்சனையாக வெடித்தது. இதன் காரணமாக டிசம்பர் மாதத்தில் ஒட்டுமொத்த சீனாவும் முடங்கியது குறிப்பிடத்தக்கது.
சீன அரசின் கடுமையான கட்டுப்பாடுகளின் எதிரொலியாகக் கொரோனா தொற்று விகிதம் படிப்படியாகக் குறைந்து, மார்ச் மாத இறுதியில் வர்த்தக மற்றும் உற்பத்தி சந்தை இயங்க துவங்கியது.
வேகமான வளர்ச்சி
சீனா அரசின் வரலாறு காணாத கட்டுப்பாடுகளின் விளைவாகத் தான் சீனா பொருளாதாரம் வேறு எந்த நாடுகளைக் காட்டிலும் பொருளாதார வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இதேபோல் பழைய நிலைக்கு வேகமாகத் திரும்பும் நாடும் சீனா தான் எனப் பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
கிட்டத்தட்ட 6 கோடி மக்களை எவ்விதமான வர்த்தகம் மற்றும் பயணம் செய்யக் கூடாது என அதிகப்படியாகக் கட்டுப்பாடுகளை விதித்தது சீன ஜி ஜின்பிங் அரசு.
வேலைவாய்ப்பு
தற்போது சீனாவில் கிட்டத்தட்ட 90 சதவீத நிறுவனங்கள் இயங்க துவங்கினாலும், சினிமா, பயணம், மற்றும் சில சேவை துறைகள் வர்த்தகக் கட்டுப்பாடுகளில் தான் இருக்கிறது. இதன் காரணமாகப் பல லட்சம் மக்கள் இன்னும் வேலைவாய்ப்புப் பயத்தில் இருக்கின்றனர்.
இந்த வருடத்தின் இறுதிக்குள் சுமார் 2.5 கோடி மக்கள் வேலைவாய்ப்பை இழக்க நேரிடும் எனச் சீனா சந்தை ஆய்வுகள் கூறுகிறது. இதற்காகச் சீன அரசு 280 பில்லியன் டாலர் அளவிலான தொகையை 90 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்காகச் செலவிட முடிவு செய்துள்ளது.
ஏற்றுமதி மற்றும் இறக்குமதி
சீனாவின் பொருளாதாரம் மற்றும் வர்த்தகம் அதிகளவில் ஏற்றுமதி மற்றும் இறக்குமதியை நம்பியிருக்கும் காரணத்தால், உலக நாடுகள் எவ்வளவு வேகமாக வர்த்தக எல்லைகளைத் திறக்கிறதோ, அவ்வளவு வேகமாகச் சீன வர்த்தகச் சந்தை முழுமையாக மீண்டு வரும்.
முக்கியப் பிரச்சனை
அவை அனைத்திற்கும் தாண்டி சீனாவிற்கு எதிராக அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகள் கடுமையான வர்த்தகக் கட்டுப்பாடுகளை விதிக்கும் காரணத்தால் புதிய வர்த்தகத்திற்குப் பெரிய வாய்ப்புகள் கிடைப்பது தற்போதைய சூழ்நிலையில் கடினமான விஷயமாகும்.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications