சீன பொருளாதாரத்தையே ஆட்டிப்படைத்து வரும் ரியல் எஸ்டேட் துறை மட்டுமே சுமார் 25 சதவீத பங்கீட்டை கொண்டு உள்ளது, இந்த நிலையில் அந்நாட்டின் மிகப்பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனமான Evergrande கழுத்து வரையில் மட்டும் அல்லாமல் தலைக்கு மேல் கடன் வாங்கி திருப்பி செலுத்த முடியாமல் மாட்டிக்கொண்டு உள்ளது.
இந்த நிலையில் China Evergrande எப்போது திவாலாகும் என பல நாடுகள் எதிர்பார்த்து காத்திருக்கும் வேளையில் முக்கியமான நடவடிக்கையை எடுத்துள்ளது. China Evergrande நிறுவனம் சீனாவில் மட்டும் அல்லாமல் உலகின் பல நாடுகளில் ரியல் எஸ்டேட் வர்த்தக்ததை செய்து வருகிறது.

இதேபோல் China Evergrande சீன வங்கியில் மட்டும் அல்லாமல் வெளிநாட்டு வங்கி முதலீட்டாளர்களிடமும் கடன் பெற்றுள்ளது. இந்த நிலையில் சீன Evergrande தற்போது கடன் சுமையை சரி செய்யும் பணியில் இருக்கும் வேளையில் இதன் ஒரு பகுதியாக அமெரிக்க நீதிமன்றத்தில் சேப்டர் 15 அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. சேப்டர் 15 அறிக்கை என்றால் என்ன..? இதன் மூலம் என்ன நடக்கும்..?
Evergrande நிறுவனம் வீழ்ச்சி அடைந்தால் அதை சார்ந்துள்ள சப்ளையர்கள், கிளை நிறுவனங்கள், ஒப்பந்த கட்டுமான நிறுவனகங்கள் என டாமினோஸ் சரிவது போல் சரிந்துவிடும். சீன பொருளாதாரத்தில் 25 சதவீத பங்கீட்டை கட்டுமான துறையும், ரியல் துறையும் பங்கீட்டை கொண்டு இருக்கும் வேளையில் சீன அரசு எப்படியாவது Evergrande நிறுவனத்தை காப்பாற்றிவிட வேண்டும் என்ற மனநிலையில் தான் உள்ளது.
இந்த இக்கட்டான சூழ்நிலையில் USA bankruptcy court-ல் தற்போது Evergrande சேப்டர் 15 அறிக்கையை தாக்கல் செய்துள்ளது, இந்த அறிக்கை மூலம் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு கடன் கொடுத்த அமெரிக்க நிறுவனங்கள் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யவோ, சொத்துக்களை கைப்பற்றவோ முடியாது.
இத்தகையை பாதுக்காப்பை தான் சேப்டர் 15 அறிக்கையை கொடுக்கிறது, மேலும் USA bankruptcy code கீழ் இந்த பாதுகாப்பை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு பிரத்தியேகமாக அளிக்கிறது. சீனாவின் Evergrande நிறுவனம் தற்போது 300 பில்லியன் டாலர் அளவிலான கடன் சுமையில் உள்ளது, இதில் இருந்து மீண்டு வருவது எளிதான காரியம் இல்லை என்றாலும் அந்நாட்டின் பொருளாதாரத்த காப்பாற்ற சீன அரசு முழு ஒத்துழைப்பு, பல்வேறு நிதியுதவிகளை கூடுதலாக வழங்கி வருகிறது.
மேலும் Evergrande சீனாவை தாண்டி வெளிநாட்டுகளில் பத்திரம், அடமானம், மறுகொள்முதல் பிரிவுகளில் சுமார் 31.7 பில்லியன் டாலர் அளவிலான கடன்களை வைத்துள்ளது.
இந்த கடனை அடிப்படையாக வைத்து வெளிநாட்டு கடன் கொடுத்தவர்கள் Evergrande மீது வழக்கு பதிவு செய்து சொத்துக்களை முடக்க கூடாது என்பதற்காக USA bankruptcy court-ல் சேப்டர் 15 அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இதில் யாரேனும் வழக்கு தொடுத்தால் Evergrande-வின் வெளிநாட்டு சொத்துக்கள் கைப்பற்ற வழிவகுக்கும், இதை தடுக்கவே இந்த சேப்டர் 15 அறிக்கை.


Click it and Unblock the Notifications