சீனா, அமெரிக்க பொருளாதாரத்துடன் போட்டிப்போட தயாராக இருக்கும் ஒரே நாடு. ஆனால் கொரோனா தொற்றுக்கு பின்பு சீன பொருளாதாரத்தின் அடிப்படையே ஆட்டம் கண்டுள்ளது என்றால் மிகையில்லை. சீன பொருளாதாரத்தில் சுமார் 15 முதல் 20 சதவீதம் வரையிலான பங்கீட்டை கொண்ட ரியல் எஸ்டேட் மற்றும் உள்கட்டமைப்பு துறை மோசமான நிலையில் மாட்டிக்கொண்டு உள்ளது.
சீன நாட்டின் மிகப்பெரிய ரியல் எஸ்டேட் சாம்ராஜ்ஜியமான எவர்கிராண்டே அளவுக்கு அதிகமான கடனை பெற்று அதை அரசுக்கும், மக்களுக்கும் திருப்பி செலுத்த முடியாத நிலையில் தள்ளப்பட்டு இருக்கும் காரணத்தால் திவாலாகும் நிலைக்கு தள்ளப்பட்டது. இந்த நிறுவனத்தை காப்பாற்ற சீன அரசு பல உதவிகளை செய்து வந்த நிலையில் தற்போது முட்டு சந்திற்கு வந்துள்ளது.

எவர்கிராண்டே நிறுவனம் கடந்த 18 மாதங்களாக சீன அரசின் நிதியுதவி உடன் மிகப்பெரிய மறுசீரமைப்பு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக எவர்கிராண்டே கடன் பத்திரங்களை வெளியிட்டு நிதி திரட்டி அதன் மூலம் வர்த்தகத்தையும், நிறுவனத்தை காப்பாற்றி வந்தது.
இப்படியிருக்கையில் சீன அரசு தற்போது எவர்கிராண்டே நிறுவனத்தின் முக்கிய கிளை நிறுவனமான Hengda Real Estate Group-ஐ ஆய்வு செய்து வரும் வேளையில் புதிய கடன் பத்திரங்களை வெளியிடும் தகுதியை இழந்துள்ளது என அறிவித்துள்ளது. இந்த ஒரு அறிவிப்பால் திங்கட்கிழமை காலை வர்த்தகத்தில் எவர்கிராண்டே நிறுவன பங்குகள் 24 சதவீதம் வரையில் சரிந்துள்ளது.
ஆகஸ்ட் மாதம் சீன பங்குச்சந்தை கட்டுப்பாட்டு ஆணையம் Hengda Real Estate Group நிறுவனத்தில் போதுமான விபரங்களை குறிப்பாக உண்மையான நிலவரத்தை அரசுக்கும், மக்களுக்கும் தெரிவிக்காமல் ஏமாற்றியுள்ளதாக சந்தேகத்தின் பெயரில் விசாரணையை துவங்கியது குறிப்பிடத்தக்கது.
தற்போது சீனாவின் எவர்கிராண்டே நிறுவனம் சுமார் 300 பில்லியன் டாலர் கடனில் தத்தளித்து வருகிறது, கடந்த 18 மாதங்களாக வாழ்வா சாவா என்ற போட்டியில் மாட்டிக்கொண்டு தவித்து வரும் வேளையில் இப்புதிய பிரச்சனையின் காரணமாக ஹாங்காங் பங்குச்சந்தையில் எவர்கிராண்டே நிறுவனத்தின் பங்குகள் 23.6 சதவீதம் சரிந்து 0.42 ஹாங்காங் டாலராக உள்ளது.

எவர்கிராண்டே நிறுவன பங்குகள் கொரோனா தொற்று காலத்தில் ரியல் எஸ்டேட் உச்சத்தில் இருக்கும் போது ஒரு பங்கு விலை 25.80 ஹாங்காங் டாலர் விலையில் இருந்தது தற்போது வெறும் 0.42 டாலருக்கு குறைந்துள்ளது. கடந்த 6 மாதத்தில் சீன அரசின் பல்வேறு உதவியின் காரணமாக எவர்கிராண்டே பங்குகள் 22.86 சதவீதம் உயர்ந்தது முக்கியமான விஷயம்.
சீன பங்குச்சந்தையில் ஏற்பட்டு உள்ள சரிவு இந்திய சந்தைக்கு சாதகமாக அமைய அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது. ஆனால் சர்வதேச முதலீட்டு சந்தையின் நிலவரம் மோசமாக உள்ளது கச்சா எண்ணெய் விலை உயர்வு, பிரிட்டன் நாட்டின் ரெசிஷன் அச்சம் ஆகியவை இந்திய சந்தையை அதிகமாக பாதிக்கும்.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications