உலகின் 2வது பெரிய பொருளாதார நாடாக இருக்கும் சீனாவின் அதிபராக இருக்கும் ஜி ஜின்பிங், 3வது முறையாக மீண்டும் அதிபர் பதவியில் அமர்த்தப்படுவாரா என்பது குறித்து அக்டோபர் 16ஆம் தேதி பிரம்மாண்டமாகத் துவங்கப்பட்ட சீன கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களின் 5 ஆண்டு மாநாட்டில் முடிவு எடுக்கப்பட உள்ளது.
ஜி ஜின்பிங் கடந்த 10 ஆண்டில் என்னென்ன சாதனைகளைச் செய்துள்ளார், மக்களின் வாழ்வாதாரம் எப்படியெல்லாம் உயர்ந்துள்ளது, மேம்பட்டு உள்ளது, வர்த்தகம், வருவாய், வேலைவாய்ப்பு, ஏற்றுமதி ஆகியவற்றின் வளர்ச்சி உலக நாடுகளை பிரம்மிக்க வைத்தாலும்...
சீனாவில் மாநில அரசுகளின் கடன் வான் அளவுக்கு உயர்ந்துள்ளது மட்டும் அல்லாமல் அதைத் திருப்பிச் செலுத்த முடியாத அளவுக்கு உள்ளது.
சீனா
சீனாவில் உள்ளூர் அரசுகளின் கடன் அளவுகள் மிகவும் மோசமான நிலையை அடைந்துள்ளது, இது மட்டும் அல்லாமல் சீனாவின் ரியல் எஸ்டேட் துறை திவாலாகும் நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளது. இதேபோல் சீனா மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகளை அதிகரித்ததால் அந்நாட்டின் பொருளாதாரம் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளது.
கடன் திட்டம்
சீனாவின் உள்ளூர் அரசு நிதியியல் திட்டம் (local government financing vehicles (LGFV)) மூலம் அளிக்கப்பட்ட கடன் அளவு யாரும் எதிர்பார்க்க முடியாத அளவான 8 டிரில்லியன் டாலர் அளவுக்கு உயர்ந்துள்ளது.
8 டிரில்லியன் டாலர்
இந்தக் கடன்களை வைத்து தான் அந்நாட்டின் உள்கட்டுமான திட்டத்தை நிறைவேற்றி வருகிறது, தற்போது ரியல் எஸ்டேட் துறை வீழ்ச்சி அடைந்துள்ளதால் இந்த 8 டிரில்லியன் டாலர் கடனை திருப்பிச் செலுத்த முடியாத நிலையில் சீன மாநில அரசுகள் மாட்டிக்கொண்டு உள்ளது.
சீன கம்யூனிஸ்ட் கட்சி
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 20வது தேசிய காங்கிரஸ் கட்சி கூட்டத்தில் 3வது முறையாக ஜி ஜின்பிங்-ஐ அதிபராக அறிவிக்க இந்த 8 டிரில்லியன் டாலர் கடன் பெரும் சுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
LGFV கடன் திட்டங்கள்
சீனாவில் LGFV கடன் திட்டங்கள் வாயிலாகத் தான் அப்பார்ட்மென்ட் கட்டிடம் முதல் தீம் பார்க் வரையில் அனைத்து திட்டங்களுக்கும் கடன் கொடுத்துக் கட்டப்பட்டு வருகிறது. இந்த உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கான நிதியுதவி செய்ய இந்த LGFV திட்டம் பெரிய அளவில் உதவியது மட்டும் அல்லாமல் அதிகளவிலான பலன் அளித்துள்ளது.
சீன அரசு
ஆனால் ஜீரோ கோவிட் பாலிசி, ரியல் எஸ்டேட் பிரச்சனை, மந்தமான பொருளாதார வளர்ச்சி ஆகியவை இக்கடனை திருப்பி அளிக்க முடியாத அளவிற்கு மாற்றியுள்ளது எனக் கூறப்படுகிறது. மேலும் சீன அரசு, கடனில் மூழ்கியுள்ள மாநில அரசுகளுக்கு நிதியுதவி அளிக்க முடியாது என அறிவித்துள்ளது பெரும் பிரச்சனையாக மாறியுள்ளது.


Click it and Unblock the Notifications