சர்வதேச அளவில் மக்கள் தொகை எண்ணிக்கையில் சீனாவை சமீபத்தில் இந்தியா முன்னேறியது. சீனா போன்ற பெரிய பொருளாதார நாடுகளில் மக்கள் தொகை குறைவது என்பது பல்வேறு பிரச்சனைக்கு வழிவகுக்கும். இந்த பிரச்சனையை எப்படி சமாளிப்பது என சீனாவின் ஜி ஜின்ஜிங் அரசு போராடி வரும் வேளையில் அடுத்த பிரச்சனை வெடித்துள்ளது.
சீனா தற்போது வரலாறு காணாத அளவில் மிகவும் குறைவான திருமண எண்ணிக்கையை எதிர்கொண்டு வருகிறது. 2022 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் சீனாவில் திருமணம் செய்துக்கொள்வோர் எண்ணிக்கை குறைந்து வருவதாகவும் இது பெரிய பிரச்சனை எனவும் சீனா அறிவித்தது. இது கொரோனா தொற்று காரணமாக அறிவிக்கப்பட்ட லாக்டவுன் லாயிலாக வந்தது என கூறப்படுகிறது.

சீனாவில் நடக்கும் திருமணங்களின் எண்ணிக்கை கடந்த 10 வருடமாக குறைந்து வரும் வேளையில் 2022ல் வரலாற்றிலேயே மோசமான எண்ணிக்கை பதிவாகியுள்ளது. சீன அரசு வெளியிட்டுள்ள தரவுகள் படி 2021 ஆம் ஆண்டை காட்டிலும் 2022 ஆம் ஆண்டில் சுமார் 8 லட்சம் போர் குறைவாக திருமணம் செய்துக்கொண்டு உள்ளனர்.
2022 ஆம் ஆண்டில் 68.3 லட்சம் பேர் மட்டுமே சீனாவில் திருமணம் செய்துக்கொண்டு உள்ளனர். திருமணங்களின் எண்ணிக்கை குறைவதால் என்ன பிரச்சனை வரும்..? சீன அரசு ஏற்கனவே மக்கள்தொகை எண்ணிக்கையில் சரிவும், முதியோர் எண்ணிக்கையில் உயர்வையும் சந்தித்து வருகிறது.
இந்த பிரச்சனையை சமாளிக்க பல தசாப்தங்களாக இருந்த ஒற்றை குழந்தை திட்டம் ரத்து செய்யப்பட்டு மக்களை அதிக எண்ணிக்கையில் குழந்தைகளை பெற்றுக்கொள்ள அந்நாட்டு அரசு ஊக்குவித்து வருகிறது. இது மட்டும் அல்லாமல் சீனாவில் பள்ளி கல்வி மிகவும் காஸ்ட்லியாக மாறிய நிலையில் டிஜிட்டல் கல்வி சேவை நிறுவனங்களை லாபமற்ற நிறுவனமாக மாற்ற உத்தரவிட்டும், பள்ளி கட்டணங்களை பெரிய அளவில் மாற்றியும் உள்ளது சீனா.
இதற்கு முக்கிய காரணம் 60 ஆண்டுகளில் முதல் முறையாக சீனாவின் மக்கள் தொகை 2022ல் குறைந்தது தான். இப்படியிருக்கும் வேளையில் சீன இளைஞர்கள் சிங்கிள் தான் கெத்து, கல்யாணம் வெத்து என்ற கண்ணோட்டத்திற்கு வந்துள்ளனர்.
சீனாவில் ஆண்களும் சரி, பெண்களும் சரி திருமணம் செய்ய விருப்பும் இல்லாமல் உள்ளனர், இதனால் குழந்தை பிறப்பு விகிதம் பாதிக்கப்படும். இது அந்நாட்டின் உற்பத்தி, வேலைவாய்ப்பு, ஏற்றுமதி, வளர்ச்சி என சகலமும் மக்கள் தொகை சரிவாலும், குழந்தை பிறப்பு விகித சரிவாலும் பாதிக்கப்படும்.
சீனாவில் காதலி கிடைக்காத ஆண்களையும், பெண்களையும் குஷிப்படுத்த கொண்டுவரப்பட்ட சிங்கிள் ஷாப்பிங் திருவிழாவுக்கு எந்த அளவுக்கு வரவேற்பு உள்ளது என அனைவருக்கும் தெரியும். இதேபோல் இனி COUPLE திருவிழா கொண்டு வந்து திருமண வாழ்க்கையை ஆதரிக்க வேண்டும், அப்ப தான் நிலைமை மாறும்..?!!


Click it and Unblock the Notifications