சர்வதேச பொருளாதார வளர்ச்சியில் சீனாவின் பங்கு மிகவும் முக்கியமானது என்பது அனைவரும் அறிந்த உண்மை, அதிலும் அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பா போன்ற வல்லரசு நாடுகள் ஸ்டாக்ஃப்ளேஷன் என்னும் பொருளாதார வளர்ச்சியில் தேக்க நிலையை எதிர்கொண்டு இருக்கும் வேளையில் சீனாவின் வளர்ச்சி மிகவும் முக்கியமானதாக மாறியது.
இதனால் கடந்த ஒரு மாதமாக சீனாவின் உற்பத்தி, உள்நாட்டு வர்த்தகம், பொருளாதார வளர்ச்சி, ரியல் எஸ்டேட் பிரச்சனைகள் குறித்து சர்வதேச முதலீட்டாளர்கள் கூர்ந்து கவனித்து வரும் வேளையில் அக்டோபர் மாதத்திற்கான சீனாவின் தொழிற்துறை உற்பத்தி குறித்த ஆய்வுகள் இன்று வெளியானது.

சீனாவின் உற்பத்தி துறை செயல்பாடுகள் அக்டோபர் மாதத்தில் எதிர்பாராத விதமாக சுணக்கம் அடைந்துள்ளது என அந்நாட்டு அதிகாரப்பூர்வ சந்தை ஆய்வு தரவுகள் கூறுகிறது. இதன் மூலம் உலகின் 2வது மிகப்பெரிய பொருளாதார நாடான சீனா தனது வளர்ச்சி பாதையில் மீண்டு வருவதில் மந்தமான வளர்ச்சியை இதன் மூலம் காட்டுகிறது.
சீனாவின் அதிகாரப்பூர்வ PMI குறியீடு அக்டோபர் மாதத்தில் 49.5 புள்ளிகளாக உள்ளது, இம்மாதம் 50.2 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்ட நிலையில் மோசமான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. பொதுவாக PMI குறியீடு 50 புள்ளிகளுக்கு மேல் இருந்தால் வளர்ச்சி பாதையில் இருப்பதாக பொருள், 50 புள்ளிகளுக்கு கீழ் இருந்தால் சரிவு பாதையில் இருப்பதாக பொருள்.
சீனாவின் பொருளாதாரம், வர்த்தகம் மேம்படுத்தவதற்காக ஜூன் மாதம் முதல் அந்நாட்டு கொள்கைவகுப்பாளர்கள் பல மாற்றங்களையும், சீர்திருத்தத்தையும் செய்து வந்தனர். உலக நாடுகள் பென்ச்மார்க் வட்டி விகிதத்தை உயர்த்திய நேரத்தில் சீனா வட்டி விகிதத்தை குறைத்தது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் வங்கிகள் மற்றும் பல துறையில் சீன அரசு அதிகப்படியான நிதியை உட்செலுத்தியது. மேலும் அதிரடியான வளர்ச்சியை காட்ட வேண்டும் என்பதற்காக பல துறையில் குறிப்பாக வெளிநாட்டு சந்தைக்கு அதிக டிமாண்ட் உள்ள துறையிலும், அமெரிக்க தடை மற்றும் கட்டுப்பாடுகள் விதித்துள்ள துறையிலும் அதிகப்படியான முதலீட்டை உட்செலுத்தியது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சீனாவின் 5 சதவீத பொருளாதார வளர்ச்சியை பதிவு செய்ய கூடுதலான கொள்கை அளவிலான தளர்வுகளும், முதலீடுகளும், ஊக்குவிப்பும் தேவை என சந்தை வல்லுனர்கள் கூறுகின்றனர். சீன உற்பத்தி துறையின் அக்டோபர் மாத சரிவு அந்நாட்டு பங்குச்சந்தை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த ஆசிய சந்தையை பாதிக்கும் என்றால் மிகையில்லை.
இன்றைய வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 127.30 புள்ளிகள் சரிந்து 63,985.35 புள்ளிகளை எட்டியுள்ளது. இதேபோல் நிஃப்டி குறியீடு 39.35 புள்ளிகள் உயர்ந்து 19,101.55 புள்ளிகளை அடைந்துள்ளது.
More From GoodReturns

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!



Click it and Unblock the Notifications