இந்தியாவுக்கு தோலுக்கு தோள் கொடுக்கும் சீனா.. அடுத்த முக்கிய நகர்வு.. டிரம்ப் என்ன செய்வார்..?

டெல்லி: ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதன் மூலம் ரஷ்யா உக்ரைன் போருக்கு மறைமுகமாக இந்தியா நிதியளிக்கிறது என குற்றம் சாட்டி அமெரிக்க அரசாங்கம் இந்திய பொருட்களுக்கு 50 சதவீத இறக்குமதி வரியை விதித்திருக்கிறது.

இந்தியா மீது வரி: அமெரிக்க அரசின் வரி விதிப்பினால் இந்தியாவில் பல்வேறு துறைகள் பாதிக்கப்படும் சூழ்நிலை உள்ளது. இருந்தாலும் இந்திய அரசாங்கம் அமெரிக்காவின் மிரட்டலுக்கு அடிபணிந்து ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தப் போவதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறது. இந்த நிலையில் தான் சீனா திடீரென இந்தியாவுக்கு தன்னுடைய ஆதரவு கரத்தை நீட்டி இருக்கிறது.

இந்தியாவுக்கு தோலுக்கு தோள் கொடுக்கும் சீனா.. அடுத்த முக்கிய நகர்வு.. டிரம்ப் என்ன செய்வார்..?

மீண்டும் உயிர்ப்பெறும் உறவு: 2020ஆம் ஆண்டு கால்வன் தாக்குதலை தொடர்ந்து இந்தியா சீனா உறவில் பெரிய விரிசல் ஏற்பட்டது. சீனா மறைமுகமாக இந்தியாவுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தது. இந்த சூழலில் கடந்த சில மாதங்களாக இந்தியா சீனா இடையிலான உறவில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. இரு நாடுகளும் பிரச்சனைக்கு தீர்வு கண்டு ஒற்றுமையுடன் செயல்படுவதற்கான பணிகளை தொடங்கியிருக்கின்றன.

மோடி சீனா பயணம்: இரு தினங்களுக்கு முன்னர் தான் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் இந்தியாவிற்கு வருகை தந்திருந்தார் . இந்த மாத இறுதியில் பிரதமர் நரேந்திர மோடி சீனாவிற்கு செல்ல இருக்கிறார் . இரு நாடுகளும் ஏற்றுமதி இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்தி இருக்கின்றன அதேபோல விசா கட்டுப்பாடுகளிலும் மாற்றங்களை கொண்டு வந்திருக்கின்றன. இது இந்தியா சீனா இடையிலான உறவு மீண்டும் மலர்ந்து வருவதையே காட்டுகிறது.

இந்தியாவுக்கு தோலுக்கு தோள் கொடுக்கும் சீனா.. அடுத்த முக்கிய நகர்வு.. டிரம்ப் என்ன செய்வார்..?

அமெரிக்காவுக்கு எதிர்ப்பு: இந்த சூழலில் இந்தியாவுக்கான சீன தூதர் சூ ஃபெயோங் டெல்லியில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் அமெரிக்கா இந்தியாவின் மீது 50 சதவீதம் வரை வரிகளை விதித்து அச்சுறுத்துகிறது , இது போன்ற செயல்களை எதிர்கொள்ளும்போது நாம் மௌனமாக இருந்தால் எதிரில் இருப்பவர்களுக்கு அது மேலும் தைரியத்தை தரும் எனக் கூறினார். உலக வர்த்தகத்தோடு பல்வேறு வர்த்தக அமைப்புகளை நிலை நிறுத்த இந்தியாவுடன் சீனா உறுதியாக நிற்கும் இந்தியாவும் சீனாவும் போட்டியாளர்கள் அல்ல கூட்டாளிகள் என அவர் தெரிவித்திருக்கிறார்.

அமெரிக்காவை சாடும் சீனா: அமெரிக்காவின் வர்த்தகப் போர் இந்தியா மற்றும் சீனாவின் உறவுகளை மேம்படுத்தி இருக்கிறது. இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகத்தில் இருவரும் வெற்றி பெறுவதை உறுதி செய்ய வேண்டுமே தவிர யாருக்கு அதிக நஷ்டம் யாருக்கு அதிக லாபம் என்பதை கணக்கிட்டு பார்க்கக் கூடாது என குறிப்பிட்டு இருக்கும் அவர் தடையற்ற வர்த்தகத்தின் மூலம் அதிக பலனடைந்த நாடு அமெரிக்கா தான் ஆனால் தற்போது திடீரென அவர்கள் வரிவிதிப்பு நடவடிக்கை அறிவிக்கின்றனர் என கூறியிருக்கிறார் .

இந்திய நிறுவனங்களுக்கு அழைப்பு: மேலும் பல்வேறு இந்திய நிறுவனங்களும் சீன சந்தையில் வந்து தங்களுடைய பொருட்களை விற்பதையும் தங்களுடைய தொழிலை தொடங்குவதையும் சீனா ஊக்குவிக்கிறது என அவர் கூறினார் .சீனாவில் இந்திய நிறுவனங்கள் முதலீடு செய்வதை நாங்கள் வரவேற்கிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+