உலகப் பொருளாதாரத்தின் தொழிற்சாலையாக விளங்கும் சீனாவில் தொழிலாளர்களுக்கு நடக்கும் பல்வேறு கொடுமைகள் அவ்வப்போது வெளிவந்தாலும், சமீப காலமாக இதுப்போன்ற் செய்திகள் வெளியில் வராமல் சீன அரசும், சீன ஊடகமும் காப்பாற்றி வந்தது. நீண்ட காலம் உண்மையை மறைக்க முடியாது என்பதை உறுதி செய்யும் வகையில் தற்போது சில முக்கியமான தகவல்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
குறிப்பாக ஆப்பிள் ஐபோன் தயாரிக்கும் தொழிற்சாலையில் நடக்கும் கொடுமைகள் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது மட்டும் அல்லாமல் ஆப்பிள் பிராண்ட் மதிப்பிற்கும் வேட்டு வைத்துள்ளது.
ஆப்பிள் அமெரிக்க நிறுவனமாக இருந்தாலும், நீண்ட காலமாகத் தனது பெரும்பாலான உற்பத்தியைச் சீனாவில் தான் செய்து வருகிறது. சமீபத்தில் தான் அமெரிக்கா - சீனா மத்தியில் வர்த்தகப் போர் வெடித்த பின்பு சீனாவை வீட்டு இந்தியா மற்றும் பிற தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு மாற்றி வருகிறது.
சீனா
சீனாவில் ஆப்பிள் நிறுவனத்தின் ப்ராடெக்ட்ஸ் பெரும்பாலானவை பாக்ஸ்கான் தொழிற்சாலையில் தான் தயாரிக்கப்படுகிறது. இந்த நிலையில் rest of world என்ற லாபம் நோக்கமற்ற டெக் செய்தி தளம் சீனா பாக்ஸ்கான் தொழிற்சாலையில் 3 மாதம் ஆய்வு செய்து நீண்ட கட்டுரையை வெளியிட்டு உள்ளது.
ஆய்வு
இதில் ஒவ்வொரு ஊழியருக்குக்கும் எவ்வளவு வேலை கொடுக்கப்படுகிறது, எப்படித் தொடர்ந்து ஊழியர்களை வேலை வாங்குகிறது நிர்வாகம், எந்தக் காரணத்திற்காக எல்லாம் சம்பளம் குறைக்கப்படுகிறது என ஊழியர்கள் சார்ந்த கொடுமைகளை மையமாக வைத்து இந்த ஆய்வை மேற்கொண்டு உள்ளது.
பாக்ஸ்கான் தொழிற்சாலை
சீனாவின் Zhengzhou பகுதியில் இருக்கும் உலகின் மிகப்பெரிய பாக்ஸ்கான் தொழிற்சாலையில் பணியாற்றும் Hunter என்பவரின் (பெயர் மாற்றப்பட்டு உள்ளது) தினசரி வேலை இதுதான். ஐபோனின் பின் பக்க கவரில் பேட்டரியை சார்ஜ் செய்யும் கேபிள்-ஐ இணைக்க வேண்டும்.
இது தான் வேலை
இதில் என்ன இருக்கு என நீங்கள் கேட்கலாம். முதலில் ஐபோனின் பின் பக்க கவரை QR கோடு வாயிலாக ஸ்கேன் செய்து பேட்டரியை சார்ஜ் செய்யும் கேபிளில் இருக்கும் டேப்-ஐ பிரித்து ஒட்டி இரண்டு ஸ்க்ரூ மூலம் இணைக்க வேண்டும். ஈசிதானே என்றால் இல்லை.
10 மணிநேர ஷிப்ட்
தினமும் 10 மணிநேர ஷிப்ட், ஒரு நிமிடத்திற்கு ஒன்று என ஒரு நாளுக்கு 600 கேபிள்-ஐ 600 போன் கேஸ் உடன் 1200 ஸ்கூரூ கொண்டு இணைக்க வேண்டும். இல்லையெனில் செயல்திறன் குறைபாடு என அறிவித்துச் சம்பளம் கட் செய்யப்படுகிறதாம்.
பாத்ரூம்
மேலும் Hunter-க்குச் சரியாக ஒரு மணிநேரம் மதிய உணவு இடைவெளி, இதற்கு நடுவில் 9 மணிநேரத்தில் தினமும் 600 கேஸ்-ல் 600 கேபிள் இணைக்கப்பட வேண்டும். நடுவில் பாத்ரூம் கூடப் போக முடியாத நிலையில் தான் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். மேலும் ஒவ்வொரு அசம்பிளி லைனில் இருக்கும் ஊழியர்களைக் கண்காணிக்க அதிக எண்ணிக்கையிலான சூப்பர்வைசர்கள் உள்ளனர்.
சூப்பர்வைசர்
இந்தச் சூப்பர்வைசர்கள் அனைவரும் ஊழியர்களை மிகவும் கீழ் தரமாக நடத்துவதாகவும், தினமும் திட்டு வாங்காமல் செல்ல முடியாது என்ற வகையில் Hunter என்ற ஊழியர் தெரிவித்துள்ளார். மேலும் தண்ணீர் குடிக்கக் கூடுதலாகச் சில நிமிடங்கள் எடுத்துக்கொண்டால் கூட சம்பளத்தைக் குறைக்கும் வழக்கம் கொண்டு உள்ளது பாக்ஸ்கான் தொழிற்சாலையில் .
60 கேஸ்
இதேபோல் பாத்ரூம் சென்ற ஒரு ஊழியர் சில நிமிடங்கள் தாமதமாக வந்த காரணத்தால் சூப்பர்வைசர் திட்டுவதும், ஒரு மணிநேரத்திற்கு 60 கேஸ்களை முடிக்காமல் 40 மட்டுமே முடித்த ஊழியரை சூப்பர்வைசர் திட்டுவதும். இதை எதிர்த்துச் சூப்பர்வைசர்-ஐ திருப்பித் திட்டும் தொழிலாளர்-க்கு பல வகையில் நெருக்கடி கொடுப்பதும், சம்பளத்தில் கை வைப்பதும் நடப்பதாகத் தெரிவித்துள்ளார்.
மன அழுத்தம்
இந்தக் கொடுமைக்கு மத்தியில் ஜனவரி 9 ஆம் தேதி மன அழுத்தம் தாங்க முடியாமல் Hunter பாக்ஸ்கான் தொழிற்சாலை பணியை விடுத்து ஒட்டுமொத்தமாக Zhengzhou பகுதியை விட்டு வெளியேறி சொந்த ஊருக்கு சென்று உள்ளார்.
பாக்ஸ்கான் நிர்வாகம்
இயந்திரத்தை போல வேலை செய்யும் முறை, பாத்ரூம் கூடப் போக முடியாத நிலை, சமீபத்திய காலத்தில் சம்பளம் கிடைப்பத்தி தாமதம், ஊழியர்களுக்கான மரியாதை இல்லாமல் அடிமை போல் நடத்தும் சூப்பர்வைசர். இதை எதுமே கண்டுகொள்ளாமல் வர்த்தகம், லாபத்தை மட்டுமே பார்க்கும் நிர்வாகம் எனச் சீன பாக்ஸ்கான் தொழிற்சாலையில் நடக்கும் கொடுமைகளைப் பட்டியலிட்டு உள்ளது இந்தக் கட்டுரை.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?



Click it and Unblock the Notifications