உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக, அமெரிக்காவுக்கே சவால் விடும் இடத்தில் இருக்கிறது சீனா.
ஆனால் இப்போதைக்கு சீனாவில் நிலைமை அத்தனை சரி இல்லை. கொரோனா வைரஸால் வர்த்தகங்களும், உற்பத்திகளும் பெரிதும் தடை பட்டு இருக்கின்றன.
இந்த நேரத்தில், நம்மை எல்லாம் அதிர்ச்சி கொள்ள வைக்கும் படி, சீனாவின் ஜிடிபி வளர்ச்சி குறித்து ஒரு செய்தி வெளியாகி இருக்கிறது.
சீனா ஜிடிபி
2020-ம் ஆண்டுக்கான, சீனாவின் முதல் காலாண்டு ஜிடிபி, சுமார் ஆறு சதவிகிதம் வரை குறையலாம் எனச் சொல்லி இருக்கிறது Pacific Investment Management Co என்கிற நிறுவனம். அதோடு, ஒவ்வொரு வருடத்துக்குமான ஜிடிபி வளர்ச்சியும், 3 சதவிகிதமாக இருக்கலாம் எனச் சொல்லி இருக்கிறார்கள்.
நமக்கு என்ன
இந்த செய்தியில் நமகு என்ன வந்தது என்று கேட்கிறீர்களா..? சீனாவில் ஜிடிபி சரிவு மற்றும் பொருளாதார மந்த நிலை, மற்ற உலக நாடுகளையும் பாதிக்கும் எனச் சொல்லி இருக்கிறார்கள். சீனா தான் உலகின் 25 சதவிகித உற்பத்தியைச் சமாளித்துக் கொண்டு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பிரச்சனை
தொடர்ந்து பல நாட்களாக, பலரையும் தனிமைப்படுத்தி வைத்து இருப்பதால், பொருளாதார விலை (Economic Cost) அதிகரிக்கும் எனச் சொல்லி இருக்கிறார்கள். சீனாவுக்கு டிமாண்ட் மற்றும் சப்ளை இரண்டிலுமே ஷாக் அடித்து இருக்கிறது. சீனாவுக்கு ஏற்றுமதி செய்வதும் பாதிக்கப்பட்டு இருப்பதால் இது பல நாடுகளை நேரடியாக பாதிக்கும் எனச் சொல்லி இருக்கிறார்கள்.
நிலையற்ற தன்மை
தற்போது பெரிய சிக்கலாக இருப்பதே, கொரோனா வைரஸைச் சுற்றி இருக்கும் நிலையற்ற தன்மை தான் எனச் சொல்லி இருக்கிறார்கள். அதோடு எனர்ஜி, ஆட்டோமோட்டிவ் மற்றும் ஏர்லைன் துறைகள் அதிக ரிஸ்க்கில் இருப்பதாகவும் சொல்லி இருக்கிறார்கள். இதை கோல்ட் மேன் சாக்ஸ் நிறுவனமும் கிட்டத் தட்ட ஆமோதிக்கிறது.
கோல்ட் மேன் சாக்ஸ்
கடந்த வெள்ளிக்கிழமை கோல் ட்மேன் சாக்ஸ் வெளியிட்ட அறிக்கையில், 2020-ம் ஆண்டின், முதல் இரண்டு காலாண்டுகளில், உலக பொருளாதாரம் குறையலாம். அதன் பிறகு தான் இரண்டாவது அரையாண்டில் உலக பொருளாதாரம் மீண்டு எழத் தொடங்கும் எனச் சொல்லி இருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications