சீனா அரசின் புதிய ரயில் திட்டம்.. LAC-க்கு அருகில்.. இந்தியாவுக்குப் புதிய பிரச்சனை..?

சீனா, இந்திய எல்லையில் தொடர்ந்து பல்வேறு பிரச்சனைகளை அளித்து வரும் நிலையில் தற்போது சீனா Line of Actual Control (LAC) அருகில் மற்றும் சர்ச்சைக்குரிய அக்சாய் சின் பகுதி வழியாகச் செயல்படும் புதிய ரயில் பாதையை அமைக்கத் திட்டமிட்டுள்ளதாக ரயில்வே டெக்னாலஜி என்னும் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இது இந்தியாவுக்கு ஒரு புதிய பிரச்சனையை எழுந்துள்ளது. இந்தியச் சீன எல்லையில் இரு நாடுகளின் கட்டுப்பாட்டைப் பகுதிகளைப் பிரிக்கும் எல்லைக் கோடு தான் Line of Actual Control (LAC).

TAR அரசு

TAR அரசு

திபெத் தன்னாட்சிப் பகுதி (TAR) அரசாங்கத்தால் வெளிப்படுத்தப்பட்ட புதிய ரயில்வே திட்டத்தின் படி, ரயில் பாதை Line of Actual Control (LAC) அருகிலும் சர்ச்சைக்குரிய அக்சாய் சின் பகுதி வழியாகவும் இயக்கப்படுவதாகத் தெரிகிறது.
இந்தியா மற்றும் திபெத்


இந்த நிலையில் எல்ஏசி அருகே சீனாவின் செயல்பாடு இந்தியா மற்றும் திபெத் ஆகிய இரு நாடுகளுக்கும் கவலை அளிக்கும் விஷயமாக மாறியுள்ளது.

மனோஜ் பாண்டே

மனோஜ் பாண்டே

ஜனவரி 12 அன்று, இராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டே, எல்ஏசி பகுதியில் சீனப் படைகளின் எண்ணிக்கையில் சிறிதளவு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது என்று கூறினார்.

அக்சாய் சின் பகுதி

அக்சாய் சின் பகுதி

சுமார் 38,000 சதுர கிமீ பரப்பளவு கொண்ட அக்சாய் சின் பகுதியை 1950 களில் சீனா சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டது மற்றும் 1962 இந்தியா-சீனா போரின் போது அப்பகுதியின் மீது அதன் இராணுவ பிடியை பலப்படுத்தியது. அப்பகுதி இரு நாடுகளுக்கும் இடையே சர்ச்சைக்குரிய இடமாக இருந்து வந்தது.

 4,000 கி.மீ ரயில் வலையமைப்பு

4,000 கி.மீ ரயில் வலையமைப்பு

திபெத் நாட்டின்'medium to long-term ரயில்வே திட்டம்' திபெத் தன்னாட்சிப் பகுதி (TAR) அரசின் ரயில் வலையமைப்பை தற்போதைய 1400 கி.மீ.யில் இருந்து 2025-க்குள் 4,000 கி.மீ.க்கு விரிவுபடுத்த உதவும் என்று ரயில்வே டெக்னாலஜி என்னும் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ரயில்வே டெக்னாலஜி

ரயில்வே டெக்னாலஜி

ரயில்வே டெக்னாலஜியின் அறிக்கையின்படி, இந்தியா மற்றும் நேபாளத்தில் இருந்து சீனாவின் எல்லைகள் வரை தொடரும் புதிய வழித்தடங்களை இந்தத் திட்டம் உள்ளடக்கும். மேலும் திட்டமிடப்பட்ட பாதை ரூடோக் வழியாகவும், LAC இன் சீனப் பக்கத்தில் உள்ள பாங்காங் ஏரியைச் சுற்றியும் பயணிக்கும்.

திபெத் - Shigatse

திபெத் - Shigatse


திபெத் நாட்டின் Shigatse தொடங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது, உத்தேசிக்கும் ரயில் பாதை நேபாள எல்லையில் வடமேற்கே செல்லும், அதற்கு முன் அக்சாய் சின் வழியாக வடக்கே துளையிட்டு Hotan, Xinjiang-ல் முடிவடையும் என ரயில்வே டெக்னாலஜியின் அறிக்கை கூறுகிறது.

ரயில் பாதை

ரயில் பாதை

ஷிகாட்ஸே முதல் Pakhuktso வரையிலான முதல் பகுதி 2025 ஆம் ஆண்டளவில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதே நேரத்தில் ஹோட்டனில் முடிவடையும் மீதமுள்ள லைன் பகுதி 2035 ஆம் ஆண்டளவில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திபெத் குழந்தைகள்

திபெத் குழந்தைகள்


சமீபத்தில் ஐநா வல்லுநர்கள், திபெத்திய சிறுபான்மையினரின் 10 லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகளை residential school system வாயிலாகச் சீன அரசின் கொள்கைகளால் திபெத்திய மக்களைக் கலாச்சார ரீதியாகவும், மத ரீதியாகவும், மொழி ரீதியாகவும் எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதைத் தெரிவித்தனர்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+