சீன அரசு அடுத்த தலைமுறையினரை மிகவும் கவனத்துடன் வளர்த்து வருகிறது, ஒருபக்கம் மக்கள் தொகை பிரச்சனை அந்நாட்டின் நீண்ட கால வளர்ச்சியில் பெரும் ஆபத்தைக் காட்டும் வேளையில் அடுத்த தலைமுறையை மிகவும் திறமைசாலிகளாக இருக்கும் வேண்டும் என்பதற்காகக் கடுமையான முடிவுகளை எடுத்து அதைக் கண்டிப்பான முறையில் நடைமுறைப்படுத்தி வருகிறது.
சில ஆண்டுகளுக்கு முன்பு சீனாவில் டிஜிட்டல் கல்வி சேவைகள் நிறுவனங்கள் அனைத்தும் லாப நோக்கமற்று இயங்க வேண்டும் என்ற உத்தரவிட்டது மூலம் டிஜிட்டல் கல்வி சேவைகள் இலவசமாக வழங்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து ஆன்லைன் கேம் மற்றும் ஸ்மார்ட்போனுக்கு அடிமையாவதில் இருந்து குழந்தைகளைக் காப்பாற்ற 16 வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகளுக்குத் தினமும் ஒரு மணிநேரமும், 16 முதல் 17 வயதுள்ளவர்களுக்குத் தினமும் 2 மணிநேரம் மட்டுமே ஸ்கிரீன் டைம் அளிக்க வேண்டும் என்பதை அரசு ஆணையாகக் கொண்டு உள்ளது. இதனால் சிறுவர்கள் பயன்படுத்தும் செயலிகள் அனைத்தும் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இயங்காது, இது நடைமுறைப்படுத்தப்பட்டது.
தற்போது ஒட்டுமொத்த சீன மக்களையும் ஆன்லைன் கேமிங்கில் அதிகப்படியான பணத்தைச் செலவு செய்வதைத் தடுக்கும் வகையில் புதிய விதிமுறையை நடைமுறைப்படுத்தியுள்ளது. இந்த நடைமுறை மூலம் உலகின் மிகப்பெரிய ஆன்லைன் சந்தையான சீனாவில் இருந்தும் கேமிங் பங்குகள் தடாலடியாகச் சரிந்தது.
சீன அரசு தரப்பில் இருந்து ஆன்லைன் கேமில் மக்கள் செலவு செய்வதையும், பரிசு அளிப்பதையும் கட்டுப்படுத்தும் நோக்கில் புதிய விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. இதன் படி ஆன்லைன் கேம்கள் ஒவ்வொரு நாளும் உள்நுழைந்தால், முதல் முறையாக விளையாட்டில் செலவழித்தால் அல்லது தொடர்ச்சியாகப் பல முறை விளையாட்டில் செலவழித்தால் அவர்களுக்கு வெகுமதிகள் வழங்குவது தடைசெய்யப்பட்டு உள்ளது.
இதன் எதிரொலியாக உலகின் மிகப்பெரிய கேமிங் நிறுவனமான டென்சென்ட் பங்குகள் 16 சதவீதம் சரிந்துள்ளது, NETEASE பங்குகள் 25 சதவீதம் வரையில் சரிந்துள்ளது. இதனால் சீன கேமிங் துறையில் இருக்கும் நிறுவனங்களின் சந்தை மதிப்பு நேற்று ஒரு நாளில் மட்டும் 80 பில்லியன் டாலர் இழந்துள்ளது.
சீன அரசு முதலில் குழந்தைகளின் ஆன்லைன் கேமிங் பயன்பாட்டைக் குறைத்தது, தற்போது அனைத்து ஒட்டுமொத்தமாக மக்களின் நிதி பயன்பாட்டை ஆன்லைன் கேமிங்-ல் குறைத்துள்ளது. ஆன்லைன் கேமிங்-ல் தினமும் 1000 முதல் 50000 ரூபாய் வரையில் செலவு செய்வோர் உலகளவில் உள்ளனர்.


Click it and Unblock the Notifications