சீன அரசின் அடுத்த தடை உத்தரவு.. யாருக்கெல்லாம் பாதிப்பு..!

ஜி ஜின்பிங் தலைமையிலான சீன அரசு தனது பொருளாதாரத்திற்கும், வர்த்தகத்திற்கும் பாதிப்பு விளைவிக்கும் அனைத்து வர்த்தகத் துறைக்கும் தொடர்ந்து அதிகப்படியான கட்டுப்பாடுகளையும், விதிமுறைகளையும், சில நேரத்தில் மொத்தமாகத் தடை உத்தரவையும் வெளியிட்டு வருகிறது.

இதனால் சீனாவில் தனியார் நிறுவனங்கள் தொடர்ந்து அச்சத்திலேயே உள்ளது என்றால் மிகையில்லை.

 சீன அரசு

சீன அரசு

கடந்த ஒரு வருடத்தில் சீன அரசு அந்நாட்டு தனியார் டெக் நிறுவனங்கள் மீது விதித்த கட்டுப்பாடுகள் மூலம் பெரும்பாலானோரின் வர்த்தகம் பாதிக்கப்பட்டு உள்ளது. சீனாவின் இந்த நடவடிக்கையால் டெக் நிறுவனத்தின் சந்தை மதிப்பீடு சுமார் 1.5 டிரில்லியன் டாலர் சரிந்துள்ளது.

 ஆன்லைன் புரோக்கரேஜ் நிறுவனங்கள்

ஆன்லைன் புரோக்கரேஜ் நிறுவனங்கள்

இந்நிலையில் தற்போது அடுத்த துறைக்குச் சீனா அரசு தனது டார்கெட்-ஐ திருப்பியுள்ளது. சீன அரசும் சீனா அதிகாரிகளும் ஆன்லைன் புரோக்கரேஜ் நிறுவனங்களை மொத்தமாகத் தடை செய்யத் திட்டமிட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

 ஆப்ஷோர் டிரேடிங்

ஆப்ஷோர் டிரேடிங்

இந்தத் தடை உத்தரவு உறுதியானால் சீனா வாடிக்கையாளர்களுக்கு ஆப்ஷோர் டிரேடிங் சர்வீசஸ் வழங்குவதில் FUTU ஹோல்டிங்க்ஸ், UP பின்டெக் ஹோல்டிங்க்ஸ் நிறுவனங்கள் கடுமையாகப் பாதிக்கப்படும்.

 நாஸ்டாக் நிறுவனங்கள்

நாஸ்டாக் நிறுவனங்கள்

FUTU ஹோல்டிங்க்ஸ், UP பின்டெக் ஹோல்டிங்க்ஸ் ஆகிய இரு நிறுவனங்களும் அமெரிக்காவின் நாஸ்டாக்-ல் பட்டியலிடப்பட்டுச் சீனாவில் இருக்கும் பல லட்சம் ரீடைல் முதலீட்டாளர்களுக்கு அமெரிக்கா மற்றும் ஹாங்காங் சந்தையில் முதலீடு செய்யும் வாய்ப்பை அளித்து வருகிறது.

 ரீடைல் முதலீட்டாளர்கள்

ரீடைல் முதலீட்டாளர்கள்

தற்போது சீன அரசு ஆப்ஷோர் டிரேடிங் சர்வீசஸ்-ஐ தடை செய்தால் அதிகம் பாதிக்கப்படும் நிறுவனங்கள் என்றால் FUTU ஹோல்டிங்க்ஸ், UP பின்டெக் ஹோல்டிங்க்ஸ் மட்டுமே, இவ்விரு நிறுவனத்தின் சேவையும் தடை செய்யும் பட்சத்தில் சீனாவின் ரீடைல் முதலீட்டாளர்கள் அதிகளவில் பாதிக்கப்படுவார்கள்.

 முக்கியத் துறைகள்

முக்கியத் துறைகள்

சீன அரசு தகவல் பாதுகாப்பு, மூலதனம் வெளியேறுதல் ஆகியவற்றை காரணம் காட்டி இந்தத் தடை உத்தரவை வெளியிட உள்ளது.

சீன அரசு கடந்த ஒரு வருடத்தில் டெக்னாலஜி, கல்வி துறை, ரியல் எஸ்டேட், கிரிப்டோகரன்சி, பேமெண்ட், வெளிநாட்டு ஐபிஓ நிறுவனங்களைக் கடுமையான உத்தரவுகள் மூலம் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த நிலையில் தற்போது ஆப்ஷோர் டிரேடிங் பிரிவைக் குறிவைத்துள்ளது.

 அமெரிக்கா - சீனா

அமெரிக்கா - சீனா

சமீபத்தில் அமெரிக்கா - சீனா மத்தியிலான நட்புறவும் இனி வரும் காலத்தில் மேம்பட உள்ளதாக இரு நாட்டு அதிபர்களும் அறிவித்த நிலையில் அமெரிக்கா சீன அரது அந்நாட்டில் இருக்கும் உய்குர் மக்கள் மீது எடுத்த நடவடிக்கை காரணமாகவும் சீன ராணுவத்துடன் தொடர்புடைய நிறுவனங்கள் எனக் கூறி 8 சீன நிறுவனங்களுக்கு அமெரிக்காவில் தடை விதித்தது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+