கிரிப்டோகரன்சி மீதான முதலீடுகளுக்கு உலகில் பல முன்னணி நாடுகள் தடை செய்துள்ள நிலையிலும், பல கோடி முதலீட்டாளர்கள் தொடர்ந்து முதலீடு செய்து வரும் காரணத்தால் முன்னணி கிரிப்டோகரன்சியின் விலையில் உயர்வு ஏற்பட்டு வந்தது.
ஆனால் சில மாதங்களுக்கு முன்பு சீன அரசு அறிவித்துள்ள தடை உத்தரவுக்கு பின்பும், எலான் மஸ்க் கூறிய எனர்ஜி பிரச்சனைக்குப் பின்பும் கிரிப்டோகரன்சி மதிப்பு அதிகளவிலான சரிவை எதிர் கொண்டது.
இந்நிலையில் சீனா மீண்டும் ஒரு தடை உத்தரவை வெளியிட்டு கிரிப்டோ முதலீட்டு சந்தைக்குப் புதிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
சீன அரசு
சீன அரசு கிரிப்டோகரன்சி வர்த்தகம் மற்றும் உற்பத்தியைத் தடை செய்யப் புதிய உத்தரவை வெளியிட்டுள்ளது. இதற்கு முன்பு அறிவிக்கப்பட்ட தடை உத்தரவை விடவும் தற்போது மிகவும் விரிவாகவும், கடுமையாகவும் உத்தரவை வெளியிட்டுள்ள காரணத்தால் கிரிப்டோ சந்தையில் பெரும் பாதிப்பு உருவாகியுள்ளது.
ஓட்டைகள்
இதற்கு முன்பு சீன அரசு அறிவித்துள்ள தடை உத்தரவில் சில ஓட்டைகள் இருந்த காரணத்தால் சீன முதலீட்டாளர்கள் இண்டர்நெட் வாயிலாக வெளிநாட்டில் இருக்கும் சர்வர்கள் மூலம் கிரிப்டோ வர்த்தகத்தைச் செய்து வந்ததை சீன அரசு கண்டுபிடித்துள்ளது.
புதிய தடை உத்தரவு
இதன் வாயிலாகச் சீன அரசு தற்போது சீன முதலீட்டாளர்கள் வர்த்தகத் தொடர்பு வைத்துள்ள கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச் மற்றும் சர்வர் இணைப்பு சேவைகளை நிறுத்த உத்தரவிட்டுள்ளது. முந்தைய தடை உத்தரவின் போது கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச் நிறுவனங்கள் தங்களது வர்த்தகத்தைப் பெருமளவு வெளிநாடுகளுக்கு மாற்றியது.
10 அமைப்புகள்
இது கண்டுப்படிக்கப்பட்ட நிலையில், சீன அரசின் 10 அமைப்புகள் இணைந்து கிரிப்டோ தொடர்பான அனைத்து சேவையும் சீனாவில் முடக்கப்படுவது மட்டும் அல்லாமல் இண்டர்நெட் வாயிலாகவும் முடக்கப்படுகிறது எனப் புதிய தடை உத்தரவுகளை வெளியிட்டுள்ளது.
கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச்
இப்புதிய தடை மூலம் சீன முதலீட்டாளர்கள் மொத்தமாகச் சந்தையைவிட்டு வெளியேறியுள்ளனர். மேலும் சீனாவில் மிகவும் பிரபலமாக இருக்கும் Huobi Global மற்றும் Binance ஆகிய இரு கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச் தளத்தில் புதிய வாடிக்கையாளர்களைச் சேர்ப்பதை நிறுத்தியுள்ளது.
பிட்காயின் மதிப்பு
இதன் மூலம் இன்றைய வர்த்தகத்தில் பிட்காயின் உட்பட அனைத்து முன்னணி கிரிப்டோகரன்சியும் அதிகளவிலான சரிவைப் பதிவு செய்துள்ளது. பிட்காயின் மதிப்பு இன்று 4 சதவீதம் வரையில் சரிந்து 42,000 டாலர் வரையில் சரிந்தது. தற்போது இதன் மதிப்பு 3.49 சதவீதம் வரையில் சரிந்து 42,516.88 டாலர் வரையில் சரிந்தது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?



Click it and Unblock the Notifications