சீனாவில் கொரோனா தொற்றுக்கு முன்பும் பின்பும் எல்லாமே சற்று மர்மமாகத்தான் உள்ளது. போலி பொருட்கள் தயாரிப்பு முதல் அதை ஏற்றுமதி செய்வது என பல சர்ச்சைக்குரிய செயல்கள் அங்கு மர்மமாகவே உள்ளது.
சீனா பொருளாதாரத்திலும், தொழில்துறைகளிலும் அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகளுக்கே சவால் விடும் அளவில் வளர்ந்துள்ளது. அது மட்டுமின்றி சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாத நாடு என்று கூட சொல்லலாம்.
இந்த வகையில் சமீபத்தில் சீனா தடை செய்த பெண் மாடலிங் விவகாரம் தற்போது உலகமே விவாதிக்கும் விஷயமாக மாறியுள்ளது.
பெண் மாடலிங்களுக்குத் தடை!
சீன அரசு பெண் மாடல் அழகிகள் உள்ளாடைகளை அணிந்து விளம்பரங்களில் நடிப்பதையும், லைவ் ஸ்ட்ரீமிங் செய்து விற்பனை செய்வதையும் தடை விதித்துள்ளது. இந்தக் கட்டுப்பாட்டை தவிர்க்கவும், இப்பிரிவு வர்த்தகத்தை இழக்க கூடாது என்பதற்காகவும் சீன லைவ்ஸ்ட்ரீம் ஃபேஷன் நிறுவனங்கள் பெண் உள்ளாடைகளை சந்தைப்படுத்த தங்கள் வீடியோக்களில் ஆண் மாடல்களை பிராண்ட் நிறுவனங்களில் ஈடுபடுத்தத் தொடங்கியுள்ளன.
லைவ் ஸ்ட்ரீமீங்
நியூயார்க் போஸ்ட்டின் கூற்றுப்படி, ஆபாசமான விஷயங்களை ஆன்லைனில் பரப்புவதற்கு எதிரான சட்டத்தின்படி, உள்ளாடைகளுக்கு மாடலிங் செய்யும் பெண்கள் இடம்பெறும் லைவ் ஸ்ட்ரீமீங்-ஐ சீன அரசு தடை செய்துள்ளது.
சீனாவில் லைவ் ஸ்ட்ரீமீங் ஈகாமர்ஸ் வர்த்தகம் மிகப்பெரிய வர்த்தக பிரிவாகும்.
ஆண் மாடல்கள்!
பெண்களுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் பெண்கள் உள்ளாடை குறிப்பாக BRA மற்றும் இதர மேல் சட்டை தயாரிப்புகளை சந்தைப்படுத்தும் நிறுவனங்கள், அவர்களின் தயாரிப்புகளான அனைத்திற்கும் ஆண்களையே மாடலிங்காக பயன்படுத்தியுள்ளனர். அதன்பின் ஆண்களை வைத்து எடுக்கப்பட்ட மாடலிங் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சீனாவின் TikTok பதிப்பான Douyin-ல் பதிவிட்டுள்ளனர்.
டிரெண்டிங்
அப்பதிவு வெளியான சில நிமிடங்களிலேயே சீன மக்கள் மத்தியில் வைரலாகத் தொடங்கியுள்ளன. அந்த ஆண் மாடலிங் விடியோக்களைப் பார்த்த பார்வையாளர்கள் பெண்களைவிட சிறப்பாக உள்ளதாக பல கிண்டல் கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.
பெண்கள்
ஈகாமர்ஸ் மற்றும் லைவ் ஸ்ட்ரீமிங் வர்த்தக தளத்தில் பெண்கள் உள்ளாடை விற்பனை என்பது மிகவும் முக்கியமான சந்தை, அதிலும் இப்பிரிவில் மாடல், டைரெக்டர், நிறுவனங்கள், பிராண்ட் உரிமையாளர், மார்கெட்டிங் செய்பவர்கள் என அனைத்தும் பெண்கள் நிரம்பி வழியும் ஒரு துறை.
பெண்கள் புறக்கணிப்பு!
இச்செயல் மூலம் சீனாவில் பெண் தொழிலாளர்கள் குறையவும், அவர்களை முன்னேற விடாமல் தடுக்கவும், பெண்களுக்கான வேலை வாய்ப்புக்களை பறிக்கும் ஒரு செயலாக இருப்பதாகவும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இயக்குநர்கள் பெண்கள்
ஆனால் இந்த ஆண் மாடல்களை வைத்து விளம்பரங்கள் "The light and luxurious boudoir of the wife and adults" என்ற தலைப்பில் லைவ் ஸ்ட்ரீம் வீடியோ வெளியானது. இந்த லைவ் ஸ்ட்ரீம்களின் பல இயக்குநர்கள் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், இந்த முறை இன்னும் எவ்வளவு காலம் தொடரும் என்பது தெரியவில்லை.
சீனாவில் மாயமாகும் தொழிலதிபர்கள்!
சீனாவை சேர்ந்த மிகப்பெரிய பணக்காரர்களும், தொழிலதிபர்களும் தொடர்ந்து திடீர் திடீரென மாயமாகி வருகின்றனர். ஏற்கெனவே பல்வேறு சீன தொழிலதிபர்கள் மாயமாகியுள்ள நிலையில், தற்போது சீனாவை சேர்ந்த முதலீட்டு வங்கியான சீனா ரினைசன்ஸ் ஹோல்டிங்ஸ் (China Renaissance Holdings) நிறுவனத்தின் நிறுவனர் பாவோ ஃபன் மாயமாகியுள்ளார்.


Click it and Unblock the Notifications