சீனாவில் ஹியூமன் மெட்டாநியூமோவைரஸ் (HMPV) எனும் புதிய வைரஸ் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக குழந்தைகள் மற்றும் முதியவர்களை இது அதிகம் பாதிக்கிறது. நீண்டகால கட்டுப்பாடுகளுக்குப் பிறகு, சீன மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிய நிலையில், இந்த புதிய வைரஸ் பரவல் அவர்களை அச்சுறுத்துகிறது.
சீன அரசு மற்றும் உலக சுகாதார அமைப்பு இது குறித்து அதிகாரப்பூர்வ எச்சரிக்கை எதுவும் வெளியிடவில்லை என்றாலும், சமூக ஊடகங்களில் இந்த வைரஸ் பரவல் குறித்த பதிவுகள் அதிகரித்து வருகின்றன. ஹியூமன் மெட்டாநியூமோவைரஸ் குறித்து முழுமையாக தெரிந்துக்கொள்ளுங்கள்.

ஹியூமன் மெட்டாநியூமோவைரஸ் (HMPV) என்பது ஒரு சுவாச வைரஸாகும், இது சாதாரண சளி போன்ற லேசான நோயிலிருந்து நிமோனியா போன்ற கடுமையான நிலைகள் வரை பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
HMPV என்றால் என்ன?: HMPV என்பது respiratory syncytial virus (RSV), மீசிலெஸ், மம்ஸ் போன் வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்தது. இது முதன்மையாக குழந்தைகளை பாதிக்கிறது என்றாலும், பெரியவர்களும் தொற்றுநோய் தாக்கத்தை ஏற்படுத்தலாம். இந்த வைரஸ் பாதிக்கப்பட்டு ஒரு முறை குணமானாலும் மீண்டும் தொற்று ஏற்படலாம், 2வது, 3வது முறை தொற்றில் லேசான அறிகுறிகள் உடன் வரும் என கூறப்படுகிறது.
HMPV தொற்று அறிகுறிகள்: HMPV தொற்று பல்வேறு அறிகுறிகளுடன் வெளிப்படலாம். இந்த அறிகுறிகள் பெரும்பாலும் கொரோனா தொற்று பாதிப்பால் மக்கள் எதிர்கொண்டதை போலவே உள்ளது.
- இருமல்: தொடர்ச்சியான இருமல் என்பது HMPV தொற்றுக்கு பொதுவான அறிகுறியாகும்.
- காய்ச்சல்: காய்ச்சல் லேசானது முதல் அதிகபட்சமாக இருக்கலாம்.
- மூக்கு ஒழுகுதல்: மூக்கு ஒழுகுதல் மற்றும் மூக்கு அடைப்பு அடிக்கடி நிகழும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.
- தொண்டை வலி: தொண்டையில் வலி அல்லது எரிச்சல் மற்றொரு பொதுவான அறிகுறியாகும்.
- மூச்சு விடுவதில் சிரமம்: சில சந்தர்ப்பங்களில் மூச்சு விடுவதில் சிரமம் அல்லது மூச்சு விடுவதில் பிரச்சனை ஏற்படலாம். சிலருக்கு மூச்சுத் திணறல் ஏற்படலாம்.
- சொறி: சில சந்தர்ப்பங்களில், தோலில் சொறி ஏற்படலாம்.
HMPV பரவும் விதம்: HMPV முதன்மையாக தொற்றுநோயாளிகளுடன் நேரடி தொடர்பு அல்லது வைரஸால் பாதிக்கப்பட்ட இடத்தில் இருந்து பரவலாம்.
- காற்றில் பரவும் வைரஸ்: இருமல் மற்றும் தும்மல் போன்றவற்றின் மூலம் காற்றில் வைரஸ் பரவலாம்.
- நேரடி தொடர்பு: கை கொடுப்பது, கட்டிப்பிடித்தல் அல்லது முத்தமிடுதல் போன்ற நெருக்கமான தொடர்பு வாயிலாகவும் வைரஸை பரப்பலாம்.
- மறைமுக தொடர்பு: பாதிக்கப்பட்டவர் பயன்படுத்தி கதவு கைப்பிடிகள், பொம்மைகள் அல்லது மின்னணு சாதனங்கள் போன்றவற்றை மற்றவர் தொட்டுவிட்டு, அவர் பின்னர் வாய், மூக்கு அல்லது கண்களைத் தொடுவதும் மூலம் வைரஸை பரப்பலாம்.
சிகிச்சை மற்றும் மேலாண்மை: தற்போது, HMPV தொற்றுக்கு எதிரான குறிப்பிட்ட அண்டிவைரல் சிகிச்சை எதுவும் இல்லை என கூறப்படுகிறது. தொற்று அதிகமானால் கடுமையான சூழ்நிலையில், மருத்துவமனையில் அனுமதி தேவைப்படலாம்.


Click it and Unblock the Notifications