சீனா - அமெரிக்கா இடையிலான வர்த்தகப் பிரச்சனைகள் முழுமையாக முடியாத நிலையில் அமெரிக்காவின் புதிய அதிபரான ஜோ பிடன் ஆட்சியிலும் சீனாவிற்குக் கடுமையான நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் எனக் கருத்து நிலவி வருகிறது.
இந்நிலையில் சீனாவின் முக்கிய வர்த்தகக் கூட்டாளியான ஆஸ்திரேலியா மீது அடுத்தடுத்து வர்த்தகக் கட்டுப்பாடுகளையும், தடையும் விதித்து வருகிறது சீனா.
ஆஸ்திரேலியா - சீனா
ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய ஏற்றுமதி வர்த்தகம் கொண்டு இருக்கும் நாடுகளில் ஒன்றான சீனா, அடுத்தடுத்து வர்த்தகத் தடைகளை விதித்து வரும் காரணத்திற்காக இரு நாடுகள் மத்தியில் தற்போது வர்த்தகப் போர் உருவாகும் சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது.
நிலக்கரிக்குத் தடை
ஆஸ்திரேலியாவில் இருந்து நீண்ட காலமாக நிலக்கரியை இறக்குமதி செய்யும் சீனா, தற்போது பிற நாடுகள் உடனான வர்த்தகத் தடைகள் மற்றும் கட்டுப்பாடுகளைக் குறைத்து வரும் சூழ்நிலையில், ஆஸ்திரேலியாவில் இருந்து சீனாவிற்கு இறக்குமதி செய்யும் நிலக்கரிக்குத் தடை விதித்துள்ளது சீன அரசு. இதற்கான விளக்கத்தைத் தற்போது ஆஸ்திரேலியா பிரதமர் மோரிசன் சீனாவிடம் கேட்டுள்ளார்.
சீனா நிலக்கரி
சீனா தனது நிலக்கரி தேவையைப் பெருமளவில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதன் மூலம் தீர்த்து வருகிறது. இந்நிலையில் சீனாவிற்கு நிலக்கரி ஏற்றுமதி நாடுகளில் ஆஸ்திரேலியா, இந்தோனேசியா, ரஷ்யா, மங்கோலியா ஆகிய நாடுகள் உள்ளது.
மங்கோலியா
ஆஸ்திரேலிய நிலக்கரிக்குச் சீனாவில் தடை விதிக்கப்பட்ட நிலையில் சீனா ஆஸி நிலக்கரி வர்த்தகத்தை மங்கோலியாவிடம் கொடுக்க அதிகளவிலான வாய்ப்புகள் உள்ளது. மற்ற நாடுகளை விடவும் சீனாவிற்கு மங்கோலியா மிகவும் அருகில் இருக்கும் காரணத்தால் போக்குவரத்து கட்டணமும் அதிகளவில் குறைந்துள்ளது.
சீனா தற்போது ஆஸ்திரேலியா மீது விதிக்கப்பட்டுள்ள தடை பல நாடுகளுக்கு இது புதிய வாய்ப்பாக இருக்கும்.
ஸ்டீல் மில்
அக்டோபர் மாதம் சீன அரசு, சீனாவில் இருக்கும் ஸ்டீல் மில்களை ஆஸ்திரேலியாவில் இருந்து நிலக்கரி வாங்க வேண்டாம் என வாய் மொழியில் உத்தரவிட்டது. இதன் பின்பு தான் மாற்றுச் சப்ளையர்களைப் பெற்ற பின் சீன அரசு ஆஸ்திரேலிய நிலக்கரி இறக்குமதிக்குத் தடை விதித்துள்ளது.
20 பில்லியன் டாலர்
தற்போது சீன அரசு, பார்லி, வைன், லாப்ஸ்டர், டிம்பர், பீப் தற்போது நிலக்கரி என அடுத்தடுத்து ஆஸ்திரேலியா பொருட்கள் மீது தடை விதிக்கும் காரணத்தால் ஆஸ்திரேலியா சுமார் 20 பில்லியன் டாலர் அளவிலான வர்த்தகம் பாதிப்படைந்துள்ளது.
என்ன பிரச்சனை
சீனா கொரோனா வைரஸ் குறித்தும், அதன் ஆபத்துகளைப் பற்றி முன் கூட்டியே உலக நாடுகளுக்கு எச்சரிக்கத் தவறியது குறித்து விசாரணை செய்யப் பல நாடுகள் தெரிவித்தது. இதற்கு ஆஸ்திரேலியாவும் ஒப்புதல் அளித்து விசாரணை கண்டிப்பாகச் செய்ய வேண்டும் எனத் தெரிவித்தது. இதன் பின்பு தான் சீனா ஆஸி நாட்டின் பார்லி, வைன், லாப்ஸ்டர், டிம்பர், பீப், நிலக்கரி என அடுத்தடுத்து வர்த்தகத் தடைகளை விதித்து வருகிறது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

பாகிஸ்தான் பங்குச்சந்தை மொத்தமாக முடங்கியது.. அப்போ ஆப்கானிஸ்தான் நிலைமை..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!



Click it and Unblock the Notifications