கொரோனாவுக்கு முன்பு அமெரிக்கா - சீனா மத்தியில் இருந்த வர்த்தக போர், அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடக்கும் நேரத்தில் மீண்டும் பூதாகரமாக வெடிக்க துவங்கியுள்ளதாக தெரிகிறது.
சில மாதங்களுக்கு முன்பு சீனா - தைவான் மீதான நெருக்கடிகள் பெரியதாக இருந்த நிலையில் அமெரிக்கா அரசு சீனாவுக்கு செமிகண்டக்டர் சிப் தயாரிக்கும் கருவிகள், தொழில்நுட்ப உதவிகளை ஏற்றுமதி செய்ய தடை விதிக்க உள்ளதாக கூறியது.

இந்த நிலையில் அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சீனா தற்போது செமிகண்டக்டர், தொலைத்தொடர்பு மற்றும் எலக்ட்ரிக் -வாகன தொழிற்துறைக்கு தேவையான முக்கியமான இரண்டு உலோகங்களை ஏற்றுமதி செய்வதற்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
சீனா தைவான் நாட்டை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் முயற்சி மட்டும் அல்லாமல், ரஷ்யா உடன் நெருக்கம் காட்டுவதும் அமெரிக்காவுக்கு முக்கிய பிரச்சனையாக இருக்கிறது. அமெரிக்கா - சீனா மத்தியிலான பிரச்சனை டொனால்டு டிரம்ப் ஆட்சி காலத்தில் மிகவும் மோசமாக இருந்த நிலையில், கொரோனா காலத்தில் குறைந்து, ஜோ பைடன் ஆட்சியில் பல நிறுவனங்கள் மீதான தடை நீக்கப்பட்டது.
இந்த நிலையில் தைவான், ரஷ்யா பிரச்சனையின் மூலம் அமெரிக்க அரசு சீன வர்த்தகத்தை நெருக்க துவங்கியது. இதன் விளைவு தான் தற்போது இரு முக்கிய உலோகத்தின் ஏற்றுமதிக்கு வைக்கப்பட்ட கட்டுப்பாடு.
ஆகஸ்ட் 1 முதல் சீன தேசிய பாதுகாப்பை பாதுகாக்கும் ஏற்றுமதி கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு தான் காலியம் மற்றும் ஜெர்மானியம் ஆகிய இரு உலோகமும் மற்றும் அவற்றின் ரசாயன கலவைகளும் ஏற்றுமதி செய்ய வேண்டும் என்று சீனாவின் வர்த்தக அமைச்சகம் திங்கட்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த புதிய கட்டுப்பாடுகள் மூலம் Gallium மற்றும் Germanium ஆகிய
இரண்டு உலோகங்களை சீனாவில் இருந்து ஏற்றுமதி செய்யவும் அல்லது புதிதாக ஏற்றுமதி செய்ய விரும்பினால் வணிக அமைச்சகத்திடம் புதிதாக உரிமம் பெற விண்ணப்பிக்க வேண்டும். இதுமட்டும் அல்லாமல் ஒவ்வொரு முறையும், ஒவ்வொரு ஷிப்பிங் ஆர்டரின் வெளிநாட்டு பையர்கள் மற்றும் அவர்களின் விண்ணப்பங்கள் பற்றிய விவரங்களை முழுமையாக தெரிவிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டு உள்ளது.
குவான்டம் கம்பியூட்டிங் முதல் செயற்கை நுண்ணறிவு மற்றும் சிப் உற்பத்தி வரையில் சீனா உலகின் முன்னோடியாக இருக்க வேண்டும் என்ற இலக்கை நிர்ணயம் செய்து பணியாற்றி வருகிறது. இதை பல வகையில் அமெரிக்கா தொடர்ந்து தடுப்பது மட்டும் அல்லாமல் அதன் ஐரோப்பிய மற்றும் ஆசிய நட்பு நாடுகளை இதேபோன்ற நடவடிக்கையை எடுத்த தூண்டியுள்ளது.
Gallium மற்றும் Germanium ஆகிய இரு உலோகத்தின் உற்பத்தியில் உலகின் முன்னணி நாடுகளாக உள்ளது சீனா. இவ்விரு உலோகத்தை எலக்ட்ரிக் வாகனங்கள், பாதுகாப்பு துறை, டிஸ்பிளே, செமிகண்டக்டர், என பல முக்கிய எலக்ட்ரானிக்ஸ் கருவிகள் தயாரிப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது.
இதில் குறிப்பாக உலகளாவிய Gallium உற்பத்தியில் 94 சதவீதம் சீனாவில் நடக்கிறது. இந்த நிலையில் சீன வணிக அமைச்சகம் ஒவ்வொரு ஏற்றுமதி ஆர்டரையும் ஆய்வு செய்து அமெரிக்காவுக்கு, அமெரிக்க நட்பு நாடுகளுக்கும் தேவையான உலோகத்தை கட் செய்தால் பெரும் பாதிப்பு எதிர்கொள்ள வேண்டி வரும்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications