அமெரிக்கா-சீனா இடையேயான வர்த்தகப் போர் தீவிரமடைந்துள்ளது, அமெரிக்க அரசு சீன இறக்குமதிகள் மீது 10% வரி விகிதத்தைத் தொடர்ந்து, இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சீன நிதி அமைச்சகம் இன்று அதிரடியான அறிவிப்பை விடுத்து அமெரிக்காவுக்கு ஷாக் கொடுத்துள்ளது. அமெரிக்காவின் வரி விதிப்பு மிரட்டலுக்குக் கனடா, மெக்சிகோ அடிபணிந்து நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ள வேளையில் சீனாவும் வழிக்கு வரும் என எதிர்பார்த்த டிரம்ப் அரசுக்குச் சீனா-வின் அதிரடி நடவடிக்கை அதிர்ச்சி கொடுத்துள்ளது.
சீனாவின் பதிலடி நடவடிக்கையாக அமெரிக்காவின் நிலக்கரி, திரவ இயற்கை எரிவாயு (LNG), கச்சா எண்ணெய், விவசாய உபகரணங்கள் மற்றும் சில வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் மீது வரி விதிப்பதாக அறிவித்துள்ளது. இந்த வரிகளானது பிப்ரவரி 10 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என சீன நிதி அமைச்சகம் இன்று (பிப்ரவரி 4) அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தற்போது வெளியாகியுள்ள தரவுகள் படி அமெரிக்காவின் நிலக்கரி, திரவ இயற்கை எரிவாயு (LNG) ஆகியவற்றின் மீது 15 சதவீத கூடுதல் இறக்குமதி வரியும், கச்சா எண்ணெய், விவசாய உபகரணங்கள் மற்றும் சில வாகனங்கள் மீது 10 சதவீத வரியும் விதிக்கப்பட்டு வர்த்தகப் போரை மேலும் தீவிரப்படுத்தும் வகையில் அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.
இது மட்டும் அல்லாமல் சீனாவின் போட்டித் தடுப்பு ஒழுங்குமுறை ஆணையம், கூகுளை விசாரணைக்கு உட்படுத்தியுள்ளது. போட்டித்தன்மை விதிமுறைகளில் பல்வேறு தவறுகளைச் செய்ததாகக் கூகுள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதுவும் அமெரிக்க அரசின் வரி விதிப்புக்குப் பதிலடி வழங்கும் நடவடிக்கையின் ஒருபகுதியாக எடுத்துள்ளது சீன அரசு.
உலகின் இரண்டு பெரிய பொருளாதார நாடுகளான சீனா - அமெரிக்கா இடையிலான வர்த்தகப் போர் டிரம்ப்-ன் முதல் ஆட்சியில் மிகவும் தீவிரமாக இருந்த நிலையில், தற்போது 2வது ஆட்சியிலும் புதிய வரி விதிப்பு மூலம் தீவிரமாகத் துவங்கியுள்ளது. கூகுளின் சேவைகள் சீனாவில் தடை செய்யப்பட்டிருந்தாலும், கூகுள் நிறுவனம் அங்குள்ள உள்ளூர் நிறுவனங்களுடன் பல்வேறு கூட்டணிகளையும், சேவைகளையும் கொடுத்து வருகிறது.
இந்த நடவடிக்கைகளுடன் கூடுதலாக, சீனாவின் வணிக அமைச்சகம் மற்றும் சுங்கத்துறை செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் டங்கஸ்டன், டெல்லூரியம், ரூத்தீனியம் மற்றும் மாலிப்டினம் போன்ற மூலப்பொருட்களின் ஏற்றுமதியை கட்டுப்படுத்தியுள்ளது தொடரும் என அறிவித்துள்ளது. தேசிய பாதுகாப்பு காரணங்களை மேற்கோள் காட்டி இந்த ஏற்றுமதி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த ஏற்றுமதி கட்டுப்பாடுகள் உலகளாவிய சப்ளை செயினில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications