மீண்டும் லாக்டவுன் பயத்தை காட்டும் சீனா.. பதைபதைக்கும் வீடியோ.. பயமுறுத்தும் HMPV வைரஸ்..!

சீனாவில் தற்போது ஹியூமன் மெட்டாநியூமோவைரஸ் (HMPV) பரவல் அதிகரித்து வருகிறது. குழந்தைகள் மற்றும் முதியவர்களை பாதிக்கும் சுவாச வைரஸான இது சீன மக்களை பெரிய அளவில் பயமுறுத்தி வருகிறது. நீண்ட கால கடும் லாக்டவுன்-க்கு பின்பு கடந்த 2 வருடமாக மட்டுமே சீன மக்கள் எவ்வித கட்டுப்பாடும் இல்லாமல் செயல்பட்டு வருகின்றனர்.

இப்படியிருக்கையில் புதிய வைரஸ் பரவல் மூலம் பலரும் அச்சத்தில் மூழ்கியுள்ளனர், இதுவரையில் சீன அரசாங்கமும், உலக சுகாதார அமைப்பும் (WHO) எந்தவொரு அதிகாரப்பூர்வ எச்சரிக்கையையும் அல்லது அவசரநிலையையும் அறிவிக்கவில்லை என்றாலும், சீனாவில் இருந்து வெளியாகும் செய்திகள் மற்றும் சமூக ஊடக பதிவுகள் வைரஸ் விரைவாக பரவுவதைக் காட்டுகிறது.

மீண்டும் லாக்டவுன் பயத்தை காட்டும் சீனா.. பதைபதைக்கும் வீடியோ.. பயமுறுத்தும் HMPV வைரஸ்..!

ஆன்லைனில் பரவும் அச்சுறுத்தும் படங்கள் மற்றும் வீடியோக்களில் சீன மருத்துவமனைகளில் எப்போதும் இல்லாத வகையில் அதிகப்படியான மக்கள் கூட்டம் காண முடிகிறது, இதனால் இந்த வைரஸ் குறித்த அச்சத்தை அதிகரிக்கிறது.

இதேவேளையில் சீனாவில் தற்போது ஓரே நேரத்தில் இன்ஃப்ளூயன்ஸா ஏ, மைக்கோபிளாஸ்மா நியூமோனியா மற்றும் கோவிட்-19 உள்ளிட்ட பல சுவாச வைரஸ்கள் ஒரே நேரத்தில் பரவி வருவதாகவும் சமூக ஊடக பயனர்கள் கூறுகின்றனர். இதனால் அதிகார்பூர்வ அறிவிப்பு வரும் வரையில் எதையும் உறுதியாக எடுத்துக்கொள்ள முடியாது.

சீனா பொருளாதாரம் மந்தமான நிலையில் இருக்கும் வேளையில், சமீபத்தில் தான் 40 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருளாதார ஊக்க திட்டத்தை முன்வைத்தது. இத்திட்டம் மூலம் அந்நாட்டின் தொழிற்துறை மற்றும் ஏற்றுமதி பெரிய அளவில் மேம்படும் என்ற கணிக்கப்பட்ட காரணத்தாலேயே பன்னாட்டு முதலீட்டாளர்கள் சீன பங்குச்சந்தையில் பணத்தை கொட்டினர். இந்த நிலையில் ஹியூமன் மெட்டாநியூமோவைரஸ் (HMPV) பரவல் மேசமடைந்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் மீண்டும் சீனாவில் லாக்டவுன் அச்சம் எழுந்துள்ளது.

HMPV தொற்றுக்கான அறிகுறிகள் சாதாரண சளி அல்லது காய்ச்சல் போன்றவை தான், இதோடு காய்ச்சல், இருமல், மூக்கு ஒழுகுதல் மற்றும் சில சந்தர்ப்பங்களில் மூச்சு விடுவதில் கடினம் போன்றவையும் இருப்பதாக தெரிகிறது.

குறிப்பாக குழந்தைகள், முதியவர்கள் மற்றும் ஆஸ்துமா அல்லது COPD போன்ற பாதிப்புகள் உள்ளவர்களை மிகவும் மோசமாக பாதிக்கப்படுவதாக தெரிகிறது. இதில் மோசமான தொற்று ஏற்பட்டால் bronchitis அல்லது நிமோனியாவுக்கு வழிவகுக்கும்.

HMPV உள்ளிட்ட சுவாச நோய்களின் அதிகரிப்புக்கு, குளிர்காலம் தொடங்குவதும் முக்கியமான காரணமாக கூறப்படுகிறது. இதேவேளையில் பல வருட கோவிட்-19 தொற்றுநோயைத் லாக்டவுன் தொடர்ந்து மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்பியது மூலம் மீண்டும் தொற்று பரவ துவங்கியதாகவும் கூறப்படுகிறது.

டிசம்பர் 16-22 வரையிலான காலக்கட்டத்தில் அதிகப்படியான சீன மக்கள் இந்த HMPV வைரஸ் மூலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதன் பின்னான நிலைமை குறித்து வெளியிடப்படவில்லை.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+