சீனா கடந்த 20 வருடத்தில் மிகப்பெரிய வளர்ச்சியை உள்நாட்டில் மட்டும் அல்லாமல் உலகளவில் பதிவு செய்துள்ளது. ஒருபக்கம் உலகமே உற்பத்திக்கு சீனா-வை மட்டுமே நம்பியிருக்க வேண்டும் என்ற நிலையை உருவாக்கியுள்ளது, மறுப்புறம் நிதி நெருக்கடியில் தடுமாறும் நாடுகளுக்கு நிதியுதவி செய்து உலகின் பல நாடுகளில் பெரிய அளவிலான ஆதிக்கத்தை செய்து வருகிறது.
இப்படி 2008 முதல் 2021 வரையிலான காலக்கட்டத்தில் சுமார் 22 வளரும் நாடுகளில் Belt & Road initiative திட்டத்தின் கீழ் சுமார் 240 பில்லியன் டாலர்களை முதலீடு செய்துள்ளது. BRI திட்டத்தின் கீழ் இன்பராஸ்டக்ச்சர் -க்கு கடனாக முதலீட்டை பெற்ற பல நாடுகள் தற்போது நிதி நெருக்கடியால் மாட்டிக்கொண்டு கூடுதலான கடனை சீனாவிடம் இருந்து வாங்கியுள்ளது.
சொல்லபோனால் சீனா கொடுத்த bailing out தொகையில் சுமார் 80 சதவீத தொகையை 2016 முதல் 2021 வரையிலான 7 வருடத்தில் கொடுத்துள்ளது. bailing out தொகை என்பது ஒரு நாட்டின் நிதி நிலை மோசமாகும் போது அந்நாட்டை காப்பாற்ற அளிக்கப்படும் தொகை.
சீனா அரசு
சீனா அரசு BRI திட்டத்தின் கீழ் உள்கட்டமைப்புக்காக 22 நாடுகளில் செய்த முதலீடுகளில் பெரும்பாலான திட்டங்கள் எவ்விதமான பலனும் அளிக்கவில்லை, அல்லது கணிக்கப்பட்ட அளவுக்கு பெரிய பலன்களை அளிக்கவில்லை. இதுதான் நிதர்சனமான உண்மை, ஆனால் இதற்கு அந்த நாடுகள் வட்டியுடன் சேர்த்து கடன் கொடுக்க வேண்டும்.
பொருளாதாரம்
இதற்கிடையில் பொருளாதாரம் மோசமாகும் பட்சத்தில் சீனா கடனுடன் சேர்த்து பெயில்அவுட் தொகையும் கொடுத்து தனது கடன் வலையில் சிக்க வைப்பது தான் சீனாவின் ராஜதந்திரம். இதன் அடிப்படையில் தான் Belt & Road initiative திட்டம் இயங்குகிறது.
240 பில்லியன் டாலர்கள் முதலீடு
2008 முதல் 2021 வரையிலான காலக்கட்டத்தில் சுமார் 22 வளரும் நாடுகளில் Belt & Road initiative திட்டத்தின் கீழ் சுமார் 240 பில்லியன் டாலர்களை முதலீடு (கடனாக கொடுத்துள்ளது), இதில் 2016 முதல் 2021 வரையிலான 7 வருடத்தில் மொத்த பெயில்அவுட் தொகையில் 80 சதவீதத்தை கொடுத்துள்ளது.
பெயில்அவுட் தொகை
சீனா அதிக பெயில்அவுட் தொகை கொடுத்த நாடுகள் பட்டியலில் அர்ஜென்டினா, மங்கோலியா, பாகிஸ்தான் போன்ற நடுத்தர வருமானம் கொண்ட நாடுகள் தான். உலக நாடுகளுக்கு விரித்த கடன் வலையில் தற்போது சீனாவே மாட்டிக்கொண்டு உள்ளது என்பது தான் தற்போதைய முக்கியமான விஷயம்.
சீனாவின் நிலைமை
சீன நிதி நிலை குறித்து அதிகம் விபரங்கள் வெளிச்சத்திற்கு தெரியாத நிலையில், தற்போது கசிந்துள்ள தகவல் படி சீனாவில் பல துறைகள் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது மட்டும் அல்லாமல் அந்நாட்டு வங்கித்துறையும் யாராவது வந்து காப்பாற்றும் அளவில் தான் உள்ளது.
வெளிநாட்டு கடன்
சீனாவின் ஒட்டுமொத்த வெளிநாட்டு கடனில் கடன் நெருக்கடியில் மாட்டிக்கொண்டு இருக்கும் நாடுகளுக்கு அளிக்கப்பட்ட கடன் 2010ல் வெறும் 5 சதவீதமாக இருந்தது. 2022ல் இது 60 சதவீதமாக உயர்ந்துள்ளது, இதுவே சீனாவின் நோக்கம் என்னவென்று புரியவைக்கிறது.
அர்ஜென்டினா
சீனா, அர்ஜென்டினாவுக்கு மட்டுமே 111.8 பில்லியன் டாலர் கடன் கொடுத்துள்ளது. இதை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு 48.5 பில்லியன் டாலர்களும், எகிப்து 15.6 பில்லியன் டாலர்களும் அளித்துள்ளது. இதை தொடந்து ஒன்பது நாடுகளுக்கு 1 பில்லியன் டாலருக்கும் குறைவாகவே அளித்துள்ளது.
சீனா மக்கள் வங்கி
சுரினாம், இலங்கை மற்றும் எகிப்து உட்பட சில நாடுகளுக்கு சீனா மக்கள் வங்கி (PBOC) மட்டுமே 170 பில்லியன் டாலர்கள் மீட்பு நிதிக்கு பங்களித்தது. இதை தாண்டி பிரிட்ஜ் லோன் அடிப்படையில் சுமார் 70 பில்லியன் டாலர் கொடுத்துள்ளது.


Click it and Unblock the Notifications