கொரோனா தொற்றுப் பாதிப்பில் இருந்து முழுமையாக மீண்டு உள்ள சீனா, இண்டர்நெட் நிறுவனங்கள் மீதான கட்டுப்பாடுகள் மூலம் பங்குச்சந்தை சரிவு மற்றும் எவர்கிராண்டே 300 பில்லியன் டாலர் கடன் பிரச்சனை ஆகியவற்றைக் கடந்து தற்போது தனது வர்த்தகம் மற்றும் பொருளாதார நடவடிக்கையை மேம்படுத்த ஆப்பிரிக்காவில் சுமார் 8.43 பில்லியன் டாலர் அளவிலான முதலீட்டைச் செய்ய முடிவு செய்துள்ளது.
சீனா தனது பொருளாதாரத்தை மேம்படுத்தும் மிக முக்கியமான ஒரு திட்டம் தான் வெளிநாடுகளில் மிகப்பெரிய தொகையை முதலீடு செய்து அதன் மூலம் இந்நாட்டு உடனான வர்த்தகத்தைப் படிப்படியாக மேம்படுத்துவது.
இத்திட்டத்தின் படி தற்போது சீனாவின் முக்கிய இலக்காக உள்ளது ஆப்பிரிக்கா..
ஆப்பிரிக்கா
ஆப்பிரிக்காவில் ஏற்கனவே பல அரசு திட்டங்களைச் சீன தனது சொந்த முதலீட்டிலும், நிறுவனத்தின் வாயிலாகச் செய்துள்ள நிலையில், தற்போது சீனா தனது கொரோனாவில் இருந்து மீண்டும் வரும் ஆப்பிரிக்காவில் அரசு மற்றும் அரசு நிறுவனங்களில் சுமார் 8.43 பில்லியன் டாலர் அளவிலான முதலீட்டை செய்வதாக அறிவித்துள்ளது.
சீனா-வின் டிஜிட்டல் வர்த்தகம்
இந்த முறை சீனா தனது டிஜிட்டல் வர்த்தகத்தை ஆப்பிரிக்காவில் மேம்படுத்த முடிவு செய்துள்ளது. இத்திட்டத்தின் படி ஹூவாய், ZTE, கிளவுட்வாக் நிறுவனத்தின் மூலம் மொபைல் டெலிபோனி, சோஷியல் மீடியா, ஈகாமர்ஸ் போன்ற முக்கிய டிஜிட்டல் சேவைகளை அளிக்க உள்ளது.
டிஜிட்டல் சில்க் ரோடு
இந்தச் சேவைகளைச் சீனா தனது டிஜிட்டல் சில்க் ரோடு திட்டத்தின் வாயிலாக ஆப்பிரிக்காவில் டெலிகாம் மற்றும் டிஜிட்டல் இன்பரா சேவைகளை முதல்கட்டமாக நைஜீரியா, சாம்பியா, அங்கோலா, எத்தியோப்பியா மற்றும் ஜிம்பாப்வே ஆகிய நாடுகளில் அளிக்க உள்ளது.
2Africa திட்டம்
மேலும் 2Africa என்ற பெயரில் 37,000 கிலோமீட்டர் தொலைவிற்கு 180TPBS கடல் கேபிள் டெலிகாம் சேவையை ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகள் உடன் சுமார் 16 ஆப்பிரிக்க வாடிகளை இணைக்க உள்ளது. இந்த மாபெரும் திட்டத்தைச் சீனா மொபைல் இண்டர்நேஷனல், எம்டிஎன் குளோபல் கனெக்ட், வோடபோன் ஆகிய நிறுவனங்கள் மூலம் செயல்படுத்த உள்ளது.
ஹூவாய் நிறுவனம்
மேலும் ஆப்பிரிக்காவில் ஹூவாய் நிறுவனத்தின் வாயிலாக 4ஜி சேவையைப் பெரிய அளவில் விரிவாக்கம் செய்வது மட்டும் அல்லாமல், இப்பிரிவு வர்த்தகத்தில் ஹூவாய் தவிர வேறு யாரும் நுழைய முடியாத அளவிற்கு ஆதிக்கம் செலுத்துகிறது.
ஸ்மார்ட் சிட்டி திட்டம்
இதேவேளையில் இந்தியாவில் இருப்பது போல் ஆப்பிரிக்காவிலும் சீன அரசு ஸ்மார்ட் சிட்டி அமைக்கும் பிரம்மாண்ட திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது. இதன் மூலம் ஆப்பிரிக்கா கண்டத்தில் தற்போது எத்தியோப்பியா, கென்யா, மொசாம்பிக், அங்கோலா, சாம்பியா, ஜிம்பாப்வே, தென்னாப்பிரிக்கா, கானா மற்றும் நைஜீரியா ஆகிய பகுதிகளில் சீனா ஸ்மார்ட்சிட்டி அமைக்க உள்ளது.
டேட்டா சென்டர்
இதேபோல் கென்யா, ஜிபூட்டி, டான்சானியா, சாம்பியா, ஜிம்பாப்வே, தென்னாப்பிரிக்கா, நைஜீரியா, கானா மற்றும் மாலி ஆகிய பகுதிகளில் புதிதாக டேட்டா சென்டரை அமைக்கும் பணியில் ஈடுப்பட உள்ளது.
ஈகாமர்ஸ் தளம்
இதைத் தொடர்ந்து மொத்த ஆப்பிரிக்கா சந்தைக்கும் ஈகாமர்ஸ் தளத்தின் சேவைகளை மிகப்பெரிய அளவில் கொண்டு வர வேண்டும் என்பதற்காக அலிபாபா தனது வர்த்தகம் மற்றும் சேவைகளை ஆப்பிரிக்காவில் விரிவாக்கம் செய்ய உள்ளது.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!



Click it and Unblock the Notifications