சீனா பல துறையில் முன்னோடியாக இருக்கும் வேளையில், கடந்த 20 வருடத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் கார் தயாரிப்பிலும், ஏற்றுமதியிலும் உலகளவில் முன்னோடியாக இருப்பது எத்தனை பேருக்கு தெரியும். இரண்டு தசாப்தங்களுக்கு முன்பு வாகன உற்பத்தி எவ்விதமான திறன்களும் இல்லாத ஒரு நாடு தான் சீனா, இன்று உலகின் மிகப்பெரிய கார் உற்பத்தியாளரும் ஏற்றுமதியாளருமாக உருவெடுத்துள்ளது.
ஆராம்பத்தில் அமெரிக்கா, ஐரோப்பிய நிறுவனங்களின் உதவியுடன் கார் உற்பத்தி தொழிற்சாலை அமைத்து தனது நாட்டு மக்களுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய பிராண்டு கார்களை விற்று வந்த நிலையில், இன்று அந்த நாட்டுக்கே வேட்டு வைக்கும் அளவுக்கு வளர்ந்துள்ளது தான் ஆச்சரியம் அளிக்கும் விஷயமாக உள்ளது.

சீனாவின் கார் உற்பத்தி துறையின் வளர்ச்சிக்கு இரண்டு முக்கியமான காரணங்கள் முன்வைக்கப்படுகின்றது. முதலாவது பெரிய உள்நாட்டு சந்தை, 2வது சீனா அரசின் பெரிய அளவிலான நேரடி முதலீடுகள் ஆகிய இரண்டும் விரைவான வளர்ச்சியைத் தூண்ட அடிப்படையாக இருந்துள்ளது.
கூடுதலாக, ஆட்டோமேஷன் மற்றும் எலக்ட்ரிக் வாகன தொழில்நுட்பத்தில் சீனாவின் முன்னேற்றங்கள் ஆகியவற்றை உலகளவில் முதன்மையாக கையில் எடுத்து அதை லபகரமாக மாற்றியதன் விளைவாக இன்று உலகளாவிய ஆட்டோமொபைல் கிங்மேக்கராக உருவெடுத்துள்ளது.
இன்று சீனாவில் தயாரிக்கப்படும் கார்கள் அந்நாட்டில் விற்பனை செய்வது மட்டும் அல்லாமல் சீனாவில் விற்கப்பட்டும் 99.5 சதவீத கார்கள் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டதாக உள்ளது. இதை தாண்டி சீனாவில் தயாரிக்கப்படும் கார்கள் அதிகளவில் அமெரிக்கா, ஐரோப்பாவில் விற்கப்படுகிறது.
இதனால் அமெரிக்கா, ஐரோப்பாவில் இருக்கும் ஆஸ்தான பிராண்டுகள் சீனா கார்களுடன் எதிர்த்து போராட முடியாமல் மாட்டிக்கொண்டு உள்ளது. முதலில் அமெரிக்கா, ஐரோப்பிய பிராண்டு கார்களை சீனாவில் தயாரித்து அந்நாட்டில் விற்பனை செய்த போது எந்த பிரச்சனையும் இல்லை, ஆனால் கடந்த 10 வருடத்தில் சீன பிராண்டுகள் நேரடியாக தனது சொந்த பிராண்டில் விற்கப்படுவது மூலம் இரு நாடுகளிலும் பெரும் பிரச்சனை வெடிக்க துவங்கியுள்ளது.
அதிலும் கடந்த 4 வருடத்தில் சீனாவின் உள்நாட்டு கார் விற்பனை சந்தை மந்தமடைந்து, அந்நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறைந்ததால், சீனாவில் தயாரிக்கப்படும் கார்களை அதிகப்படியாக சீன கார் தயாரிப்பாளர்கள் வெளிநாட்டு சந்தைகளில் விற்பனை செய்ய துவங்கியுள்ளனர்.
அதாவது அதிநவீன காரை மிகவும் குறைவான விலைக்கு விற்பனை செய்யும் சீன கார் தயாரிப்பாளர்களின் போக்கு அமெரிக்க, சீனா கார் தயாரிப்பாளர்களின் வர்த்தகத்தை பெரிய அளவில் பாதிக்கப்பட்டு உள்ளது. மேலும் சீன கார்கள் விலை குறைவாகவும், அதிகப்படியான திறனுடன் இருக்கும் காரணத்தால் மக்கள் மத்தியிலும் சிறப்பான வரவேற்பு உள்ளது.
சீன நிறுவனங்களின் ஆதிக்கத்தை குறைக்க அமெரிக்கா, ஐரோப்பிய அரசு மாறி மாறி வரி விதித்தாலும், வரியை தாண்டி லாபம் பார்த்து வருகிறது சீனாவின் மலிவு விலை கார்கள்.
இதேபோல் எலக்ட்ரிக் வாகன சந்தையில் சீனாவின் ஆதிக்கம் குறிப்பிடத்தக்கது. BYD போன்ற சீன பிராண்டுகள் பட்ஜெட் விலை கார்கள் உலகளாவில் பெரும் நற்பெயரை பெற்றுள்ளது. சீன நுகர்வோர் விரைவாக மின்சார வாகனங்களுக்கு மாறும் நிலையில், பெட்ரோல் இயங்கும் கார்களின் அதிகளவு வெளிநாட்டு சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
சீன கார்களின் வருகையால் ஐரோப்பாவில் வோக்ஸ்வோகன் போன்ற நிறுவனங்கள் பெரும் தடுமாற்றத்தை சந்தித்துள்ளது, இதனால் பல தொழிற்சாலைகளை மூடும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது கவனிக்க வேண்டியதாக உள்ளது.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!



Click it and Unblock the Notifications